LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

குக்கூ பாதிப்பில் இருந்து மீளாத தினேஷ் !!

அட்டகத்தி படத்தை தொடர்ந்து நடிகர் தினேஷ் குக்கூ என்ற படத்தில் நடித்தார். 


கண் தெரியாத காதலர்களின் உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், பார்வையற்ற காதலனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார் தினேஷ்.  


குக்கூ படத்திற்காக கண்களை ஒரே நிலையில் வைத்தபடி நிறைய நாட்கள் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் தினேஷ். அப்படத்தில் நடித்து வந்தபோது கண் வலியாலும் அவதிப்பட்டிருக்கிறார். ஒருவழியாக படம் பெரிய ஹிட்டானது. அதனால் அதுவரை பட்ட கஷ்டமெல்லாம் சந்தோசமாக மாறி விட்டது என்று உற்சாகமாக சொன்னார் தினேஷ்.


குக்கூ படத்தை தொடர்ந்து தினேஷ், திருடன் போலீஸ் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த படத்தில் நடித்தபோது குக்கூ படத்துக்காக கண்களை மூடிக்கொண்டு செய்த சில விசயங்கள் தினேஷிடம் மீண்டும் வெளிப்பட, அப்படத்தில் அவர் நடித்த போலீஸ் கேரக்டரின் கம்பீரத்தை அது குறைத்து விட்டதாம்.


குறிப்பாக, இயக்குனர் ஆக்சன் சொன்னதும் கண்களை மூடிக்கொள்வது, ஆவேசமாக பேசக்கூடிய காட்சிகளில் பார்வை அங்குமிங்கும் அலைய விடுவது போன்ற வெளிப்பாடுகள், காட்சியின் வேகத்தை குறைத்திருக்கிறது. 


அதன்காரணமாக திருடன் போலீஸ் படத்தில் நடித்தபோது ஒவ்வொரு டேக்கையும் பல டேக்குகள் வாங்கி நடித்த தினேஷ், குக்கூ பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கும் தனி பயிற்சியை தற்போது எடுத்து வருகிறாராம்.  

by Swathi   on 08 Oct 2014  0 Comments
Tags: Actor Dinesh   Dinesh   Cuckoo Movie   Thirudan Police   திருடன் போலீஸ்   குக்கூ   தினேஷ்  
 தொடர்புடையவை-Related Articles
நல்ல பண்ணிருக்க பூச்சி - என்றார் ஷங்கர் !! நல்ல பண்ணிருக்க பூச்சி - என்றார் ஷங்கர் !!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!
குக்கூ பாதிப்பில் இருந்து மீளாத தினேஷ் !! குக்கூ பாதிப்பில் இருந்து மீளாத தினேஷ் !!
செப்டம்பர் மாதம் வெளிவருகிறது திருடன் போலீஸ் !! செப்டம்பர் மாதம் வெளிவருகிறது திருடன் போலீஸ் !!
நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !! நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !!
சுந்தர் தயாரிப்பில் அட்ட கத்தி தினேஷ் !! சுந்தர் தயாரிப்பில் அட்ட கத்தி தினேஷ் !!
குக்கூ பட வெற்றி : இயக்குனருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த தயாரிப்பாளர் !! குக்கூ பட வெற்றி : இயக்குனருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த தயாரிப்பாளர் !!
இனி நடிக்க மாட்டேன் !! சொல்கிறார் குக்கூ நாயகி !! இனி நடிக்க மாட்டேன் !! சொல்கிறார் குக்கூ நாயகி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.