LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

‘இசையின் சுயம்புவே இளையராஜா’ - பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

'இசையின் சுயம்புவே இளையராஜா' என்று இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா - 75’ என்ற 2 நாள் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. 

விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 2-ம் தேதி தொடங்கிவைத்தார். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், ‘இளையராஜா - 75’ விழாவின் 2-வது மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

கலைகளிலேயே உயர்ந்த கலை இசைக் கலை. அதுதான் சாமானியர்களுக்கும் புரியக்கூடியது. அதனால், இசைக் கலைஞர்களை பெரிதும் போற்றுகிறேன். லிங்கங்களிலேயே சுயம்பு லிங்கத்துக்குதான் பவர் அதிகம். அதுபோல, இசையின் சுயம்புதான் இளையராஜா. அவரது ஒட்டுமொத்த திறமையும் ‘அன்னக்கிளி’யில் இசையாக வெடித்து வெளிவந்தது. அன்று தொடங்கிய அவரது இசை ராஜ்ஜியம் இன்றுவரை நடக்கிறது. அவரை கவுரவிக்கும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் விழா நடத்துவது மகிழ்ச்சி.

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், பண்டிகை நாள் என்றால் 15, 16 படங்கள் வெளியாகும். அதில் 12 படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்து இருப்பார்.

இளையராஜாவுக்காகவே தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். இளையராஜா இசையமைத்து முடித்துவிட்டார் என்றால் தயாரிப்பாளர்கள் குஷியாகி விடுவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமலேயே செய்து கொடுத்து இருக்கிறார்.

இப்போதெல்லாம் ஒரு படத்தின் ரீ-ரிக்கார்டிங்குக்கு 30 நாட்கள் ஆகிறது. ஆனால், இளையராஜா ஒரு நாளில் 3 படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் முடித்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் ‘ராஜா சார்’என்றுதான் கூப்பிடுவேன். அப்புறம், சிறிய இடைவெளிக்குப் பிறகு எதேச்சையாக சந்தித்தபோது, பேன்ட்-சட்டையில் இருந்து வேட்டி-ஜிப்பாவுக்கு மாறியிருந்தார். அவரை ‘சார்’ என்று கூப்பிடத் தோன்றவில்லை. ‘சாமி’ என்று கூப்பிடத்தான் தோன்றியது. அதுமுதல், நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் கூப்பிட்டுக் கொள்கிறோம். பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக, தூய்மையாக இருக்கிறார் என்பதற்கு இளையராஜா உதாரணம்.

என்னைக்கூட தன் படத்தில் பாட வைத்தார். ‘மன்னன்’ படத்தில் 6 வரிகள் பாடினேன். பாடியது என்னவோ 6 வரிகளே. ஆனால், அதற்கு 6 மணி நேரம் பயிற்சி எடுத்தேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

‘‘ஆனாலும், என்னைவிட கமலுக்குதான் நல்ல பாடல் நிறைய கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று ரஜினி கூற, அதற்கு இளையராஜா, ‘‘இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாட்டு போடுகிறீர்கள் என்பார். ஏன், ராமராஜன், மோகனுக்கு நான் நல்ல பாட்டு தரவில்லையா? எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவரின் படங்களுக்கும் ஒன்றுபோலதான் இசை அமைக்கிறேன்’’ என்றார்.

மேடையேறிய கமல்ஹாசன், ‘ஹேராம்’ படப் பாடல்,‘நினைவோ ஒரு பறவை’ (சிகப்புரோஜாக்கள்), ‘உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது’(விருமாண்டி) ஆகிய பாடல்களை சித்ராவுடன் இணைந்து பாடினார்.

லதா ரஜினிகாந்த், மணிரத்னம், ஷங்கர், பி.வாசு, விஜய் சேதுபதி, மோகன்பாபு, வெங்கடேஷ், விஜய் ஆன்டனி, கார்த்தி, மனோ உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.

ஒரு மாதமாகப் பயிற்சி பெற்ற ஹங்கேரி இசைக் குழுவினர், இங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து ஆர்க்கெஸ்ட்ரா வழங்கினர்.

by Mani Bharathi   on 04 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.