LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

அடி

தாளவட் டணைகளின் அளவோ டமைந்து
சிந்துப் பாவடி சீர்பெற நடக்கும்
கருத்து : சிந்துப் பாடல்களின் அடிகள் அது எந்த நடையுடைய பாடலாக இருந்தாலும் அந்த நடைக்குரிய தாள வட்டணைகளின் அளவில் அமைந்து சிறப்புற இயங்கும்.
விளக்கம் : தாள வட்டணை (ஆவர்த்தம்) என்பது யாது? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர்த் தாளம் என்பது யாது? என்பதையும், அதன் உள்ளுறுப்புகள் யாவை என்பதையும் உணர வேண்டும்.
(தாளம், அதன் உள்ளூறுப்புகள், கோலும் இனங்களும் (சாதிகளும்), வட்டணை (ஆவர்த்தம்), தாளம் போடும் முறை என்ற தலைப்புகளில் (நூ. 6) விளக்கத்துள் விவரிக்கப்பட்டுள்ளன. அங்கு காண்க). எனவே சிந்துப் பாடலில் உள்ள அடிகள் அப்பாடலின் தாள வட்டணையின் அளவில் அமைந்திருக்கும் என்பது தெளிவு. 
---
28.
எட்டின் மடங்கினும் நான்கின் மடங்கினும்
எட்டின் இழியா தியலும் சீர்களால்
சிந்தின் அடிகள் சிறப்புற நடக்கும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் உள்ள அடிகள் எட்டு எண்ணிக்கையுள்ள ஆதி தாள வட்டணையிலும் அல்லது அதன் மடங்கிலும் நான்கு எண்ணிக்கையுள்ள ஏகதாள வட்டணையின் மடங்கிலும் அடங்கி எட்டுச் சீர்க்குக் குறையாது வரும் அடிகளைக் கொண்டு சிறப்பாக இயங்கும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும் போது அடியின் முதற்பகுதி ஒரு கோலிலும் ||4| அடுத்த பகுதி இரண்டு சுழிகளிலும் |00| அடங்குகின்றன.
காட்டு : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி.
ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக் தி
ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . . .  .  .
         (அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப் பட்டுள்ளன.)
மேற்காட்டியபடி கோலிற்குரிய நான்கு எண்ணிக்க்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில் இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லை என்றாலும் ஏழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதி தாள வட்டணையில் அடங்குகிறது.
காட்டு : இரண்டு ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி
   ஆ று மு க வ டி வே ல வ னே க லி
   யா ண மும் செய் ய வில் லை . . . சற் றும்
   அச் ச மில் லா ம லே கைச் ச ர சத் துக் க
   ழைக் கி றாய் என் ன தொல் லை . . 
(கா. சி.க.வ.ப.165)
இப்பாடலில் மேற்கண்ட நான்கு வரிகளும் ஓரடியாகும். ஓரடியில் பதினாறு சீர்கள் இருப்பதைக் காணலாம். இது பதினாறு சீர்க் கழிநெடிலடியாகும். இதன் ஓரடி இரண்டு ஆதி தாள வட்டணையில் அடங்கும்.
காட்டு : ஏக தாளத்தில் மூன்று வட்டணையில் அடங்கும் அடி.
      கண் ணா . மி ரம் டைத் த
      விண் ணூ . ரி டம் ரித் த
      கன வயி ரப் படை யவன் மக ளைப் புணர்
      கர்த் த னே . . . தி ருக்
      கழு கும லைப் பதி யனு தின முற் றிடு
      சுத் னே   . .
(கா.சி.க.வ.ப.167)
மேற்கண்ட மூன்று வரிகளிலும் பன்னிரண்டு சீர்கள் உள்ளன. இது நான்மை இன ஏக தாளம். இத்தாளத்தின் குறியீடு |4 என்பது. நான்கு எண்ணிக்கையுள்ள ஒரு கோல் மட்டுமே இதில் உள்ளது. சுழியோ, அரைச்சுழியோ இல்லை. இத்தாளத்தில் மூன்று வட்டணையில் இப்பாடலின் (ஒரு கண்ணியின்) ஓரடி அடங்குகிறது.
சிறுபான்மைச் சிந்துப் பாடல்களின் கண்ணிகள் நான்மை இன ஏக தாளத்தில் அடங்குகின்றன. மிக்ச்சில சிந்துகளே வேறு தாளங்களில் உள்ளன.
காட்டு : ஏக தாளத்தில் ஐந்து வட்டணையில் அடங்கும் அடி
   சந் த வரை வந் . த கு க நா . தா . . . . . ப ரை
   அந் த ரி ம னோன் . ம ணி யா மா . தா . . . . . தந் த
   சண் . மு க ச டாட் . ச ர வி நோ . தா . . . . . கு ழைக்
   கா . தா . . . . சூ . ரர் வா . தா . . . . . வ ன
   சஞ் . ச ரிவெண் குஞ் . ச ரி ச மே . தா . . . . . . . 
(கா. சி. க.வ.ப.173)
 
மேற்கண்ட பாடலில் உள்ள ஐந்து வரிகளும் ஓரடி. இவ்வடியில் இருபது சீர் இருப்பதைக் காணலாம். இது நான்மை இன ஏக தாளத்தில் ஐந்து வட்டணைகளில் அடங்கும்.
எனவே சிந்துப்பாவின் அடிகள் ஆதி தாளத்திலும், அதன் மடங்கிலும், ஏக தாளத்தின் மடங்கிலும், நடக்கும் என்பதையும், ஓரடியில் எட்டு சீர்களுக்குக் குறையாத சீர்களைக் கொண்டிருக்கும் என்பதையும் உணர்கிறோம்.
29.
அடிகள் அனைத்தும் கழிநெடில் ஆகும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் அமைந்திருக்கின்ற அடிகள் எல்லாம் கழி நெடில் அடிகளே ஆகும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் உள்ள அடிகள் எட்டு சீர்க்குக் குறையாமல் வரும் என்பதை முன்னர்க் கண்டோம். (நூ. 28 விளக்கம்). ஆறு சீர்களைக் கொண்ட அடிகளும் அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடிகளும் கழிநெடிலடிகள் எனப் பெயர்பெறும்.
இரு சீரடி குறளடி என்றும், முச்சீரடி சிந்தடி என்றும், நாற்சீரடி அளவடி என்றும், ஐஞ்சீரடி நெடிலடி என்றும், அறுசீர் முதலியன கழி நெடிலடி என்றும் கோடும் என்பது. (தொல். பொ. செய். பேரா. உரை)
சிந்துப் பாடல்களின் அடிகள் தாளங்களின் அடிப்படையை உடையன. ஆதிதாளம், சதுசிர ஏக தாளம், ஆகிய இரண்டு தாளங்களே சிந்துப் பாடல்களில் பெரிதும் இடம் பெறுகின்றன. எட்டு. பன்னிரெண்டு, பதினாறு, இருபது, இருபத்து நான்கு சீர்களை உடைய கழிநெடிலடிகளே சிந்துப் பாடல்களில் பயின்று வருகின்றன.
இவற்றுள் பன்னிரெண்டு, இருபது சீர்களையுடைய அடிகள் சதுசிர இன ஏக தாளத்தின் வட்டணைகளில் அடங்கும். எட்டு, பதினாறு, இருபத்து நான்கு சீர்களை உடைய அடிகள் ஆதி தாள வட்டணைகளில் அடங்கும். சதுசிர இனத்துருவ தாளத்தில் அடங்கும் பதினான்கு சீர் அடிகள் பயிலும் சிந்துப் பாடல்களும் சிறு பான்மை உண்டு.
குறளடி, சிந்தடி, நெடிலடி, அறுசீர், எழுசீர்க் கழிநெடிலடிகள் சிந்துப் பாக்களில் வருவதில்லை.
‘ஓம் சக்தி’ என்ற பாடலடி எட்டு சீர்களைக் கொண்டது; ‘கண்ணாயிரம்’ என்ற பாடலடி பன்னிரெண்டு சீர்களைக் கொண்டது; ‘சந்தவரை’ என்ற பாடலடி இருபது சீர்களைக் கொண்டது என்பதனை முன்னர்க் கண்டோம். (நூ. 28 விளக்கம்)
தாளமில்லாத சிந்துப் பாடல்களில் நாற்சீரடிகள் வருவதுண்டு. தாளமுடைய சிந்துப் பாக்களில் சீர் எண்ணிக்கையின் சிறுமை எட்டு; பெருமை பாடுவோர் உள்ளக் கருத்தின் அளவே; நாற்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடிகளும் வந்துள்ளன.
காட்டு :
பத்மினி சாதிப்பெண் மானே - பாம்பன்
        பார்க்கவ ருவாய்நீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்துவை போகம்- குறப்
பாவையின் மீதினில் மோகம்- கொண்ட
பண்பதனால் மேவும்நல் யோகம்- மலர்
பைங்க்காவியை யுங்காலனை யுஞ்சேலினை யும்பார்வைகொள்
பச்சைக்கொடி இடையும்பிடி இச்சித்திடு நடையுங்கொடு
பதுமத்தின ரும்புக்கலர் தருபொற்றன மிஞ்சப்பெறு
பனசக்கனி ரசமொத்துறு வசனத்திலென் மனசைக்கவர்
(பத்மினி)
(எம்.கே.எம். அப்துல் காதிறு இராவுத்தர், பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமிக் கோயில் வழிநடைச் சிந்து)
இச்சிந்துப் பாடலின் ஓரடி 11 நான்மை இன ஏக தாள வட்டணைகளில் அடங்கும். 44 சீர்கள்ப் பெற்றுள்ளது. இப்பாடலில் பிற்பகுதி ஓருவகைச் சந்த அமைப்பில் அமைந்துள்ளதையும் எல்லா அரையடிகளுமே பகர மோனை ஒன்றனாலேயே தொடுக்கப் பெற்றுள்ளதையும் காண்க.
30.
ஒற்றை எண்களால் ஆனசீர் அடிகள் சிந்துப் பாக்களில் சேர்தல் இல்லை.
கருத்து : ஒற்றைப்படை எண்களால் ஆன சீர்களைக் கொண்ட அடிகள் சிந்துப் பாடல்களில் வருவதில்லை.
விளக்கம் : சிந்துப் பாடல்கள் பெரும்பாலும் நான்மை இன ஏக தாளத்திலும், ஆதி தாளத்திலும் நடக்கின்றன. ஆகவே அப்பாடல்கள் 8, 12, 16, 20, 24 முதலிய எட்டாலும், நான்காலும் வகுபடும் எண்களையுடைய சீர்களாலேயே இயங்குகின்றன. ஒற்றைப்படை எண்களால் ஆன சீர்களைச் சிந்துப் பாடல்கள் கொண்டிருப்பதால், அவை மேற்குறித்த இரண்டு தாள வட்டணைக்குள் அடங்கி இயலா. ஆகவே, சிந்துப் பாடல்களில் ஒற்றைப் படைச் சீர் எண்ணிக்கையை உடைய (9, சீர், 11 சீர், 15 சீர், 19 சீர்) அடிகளை போல்வன வருவதில்லை என்பது உணரக் கிடக்கிறது.

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.