LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

அடுக்குத் தொடர் முடிந்ததும் வினையெச்சத்தில் வலிமிகுவித்துக்கொள்ளலாமா?

பார்த்து பார்த்து சிரித்தாள்...
படித்து படித்து சொன்னேன் - இவ்வாறு எழுதுவதா ?

அல்லது

பார்த்து பார்த்துச் சிரித்தாள்...
படித்து படித்துச் சொன்னேன் - இவ்வாறு எழுதுவதா ?

ஓட ஓட ஓட தூரங் குறையல...
பாட பாட பாட பாட்டு முடியல...
--- இச்சொற்றொடர்களில் வலிமிகுந்த உச்சரிப்பு இல்லை. இவை பெயரெச்சத் தொடர்கள். வலிமிகுவித்து எழுதவும் தேவையில்லை. ஆனால் வினையெச்சங்களில் என்ன செய்வது ?

நடைமுறையில், இரட்டைக்கிளவிகளை அடுக்கி முடித்ததும் வலிமிகுவித்து பெயர்ச்சொற்கள் பலவற்றை உருவாக்கியிருக்கிறோம்.

பளபள என்று மின்னுவதைப் பளபளப்பு என்கிறோம்.
படபட என்று அடித்துக்கொள்வதைப் படபடப்பு என்கிறோம்.

பளபள, படபட இடையே வலிமிகவில்லை.
பெயர்ச்சொல் விகுதி ‘பு’ வை சேர்த்துக்கொள்ள வலிமிகுவிக்கிறோம். அதனால்தான் பளபளப்பு, படபடப்பு என்றாகிறது. இவை மக்களே உருவாக்கிய சொற்கள் என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.

அந்த அடிப்படையில் அடுக்குத் தொடர் முடிந்ததும் வினையெச்சத்தில் வலிமிகுவித்துக்கொள்ளலாம்.

பார்த்து பார்த்துச் சிரித்தாள்...
படித்து படித்துச் சொன்னேன்...!

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
"வே" என்ற ஒற்றைத் தமிழெழுத்து!
தமிழ் ஆள; தமிழ் பேசு.. (வித்யாசாகர்) தமிழ் ஆள; தமிழ் பேசு.. (வித்யாசாகர்)
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் ஒரு பார்வை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் ஒரு பார்வை
திருமணப் பொருத்தம் பார்ப்பது தமிழர் மரபா? திருமணப் பொருத்தம் பார்ப்பது தமிழர் மரபா?
தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு கிராமங்களின் பொழுதுபோக்குகளாக எவை இருந்தன? தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு கிராமங்களின் பொழுதுபோக்குகளாக எவை இருந்தன?
தமிழ்மொழியை தொய்வான துறைகளில்  மீட்டெடுக்க தமிழ்மொழியை தொய்வான துறைகளில் மீட்டெடுக்க "தமிழியக்கம்" மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது..
தமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி!!.. தமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி!!..
இலக்கணப் பிழை எது? இலக்கணப் பிழை எது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.