LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

அகநானூறு-13

 

301. பாலை
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி, 
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் 
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி! 
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் 
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, 5
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன 
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து, 
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை, 
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி, 
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, 10
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி 
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ, 
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் 
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை, 
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, 15
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக் 
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, 
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் 
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து, 
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு 20
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென, 
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர், 
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த 
புன் தலை மன்றம் காணின், வழி நாள், 
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்;  
அதுவே மருவினம், மாலை; அதனால், 
காதலர் செய்த காதல் 
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே?  
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார் 
302. குறிஞ்சி
சிலம்பில் போகிய செம் முக வாழை 
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், 
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் 
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், 
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், 5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் 
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் 
அரிய போலும் காதல் அம் தோழி! 
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத 
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், 10
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, 
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் 
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, 
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, 
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. 15
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 
303. பாலை
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, 
பேஎய் கண்ட கனவின், பல் மாண் 
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், 
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் 
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை 5
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், 
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் 
புலம் கந்தாக இரவலர் செலினே, 
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் 
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, 
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு 
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் 
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, 
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! 15
ஐயம் தௌயரோ, நீயே; பல உடன் 
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் 
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, 
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் 
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. 20
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - அவ்வையார் 
304. முல்லை
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, 
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், 
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு 
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, 
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, 5
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், 
செறித்து நிறுத்தன்ன தௌ அறல் பருகி, 
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, 
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, 
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, 10
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, 
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் 
மணி மிடை பவளம் போல, அணி மிகக் 
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் 
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, 15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, 
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை 
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் 
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, 
நம் நோய் தன்வயின் அறியாள், 20
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?  
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் 
305. பாலை
பகலினும் அகலாதாகி, யாமம் 
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய, 
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு 
பனி மீக்கூரும் பைதல் பானாள், 
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, 5
பருகுவன்ன காதலொடு திருகி, 
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து, 
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ; 
அருளிலாளர் பொருள்வயின் அகல, 
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து 10
யான் எவன் உளெனோ தோழி! தானே 
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், 
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய, 
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் 
கனை எரி பிறப்ப ஊதும் 15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?  
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் 
306. மருதம்
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! 
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய 
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ 
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, 
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் 5
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, 
பழன யாமை பசு வெயில் கொள்ளும் 
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! 
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட 
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி 10
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த 
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, 
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு 
ஊடினள் சிறு துனி செய்து எம் 
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. 15
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 
307. பாலை
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், 
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, 
பகலும் கங்குலும் மயங்கி, பையென, 
பெயல் உறு மலரின் கண் பனி வார, 
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து, 5
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை 
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை 
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, 
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, 
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் 10
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், 
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து 
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, 
இரும் புறாப் பெடையொடு பயிரும் 
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? 15
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் 
308. குறிஞ்சி
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் 
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் 
ஆலி அழி துளி பொழிந்த வைகறை, 
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், 
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, 5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட! 
இரவின் வருதல் எவனோ? பகல் வரின், 
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை 
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, 
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, 10
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் 
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய 
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, 
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய 
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, 15
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.  
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார் 
309. பாலை
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி, 
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர், 
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென, 
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் 
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், 5
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை, 
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து 
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் 
காடு மிக நெடிய என்னார், கோடியர் 
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் 10
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு, 
நாம் செலின், எவனோ தோழி! காம்பின் 
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் 
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது, 
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் 15
தண் பெரு படாஅர் வெரூஉம் 
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?  
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 
310. நெய்தல்
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற 
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும், 
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து, 
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின், 
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு 5
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும் 
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட, 
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின், 
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால், 
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! 10
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப் 
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக் 
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க 
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த 
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து 15
உரும் இசைப் புணரி உடைதரும் 
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.  
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார் 
311. பாலை
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, 
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, 
எழுதியன்ன திண் நிலைக் கதவம் 
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, 
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் 5
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள் 
பொம்மல் ஓதி நீவிய காதலொடு, 
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, 
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் 
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி 10
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் 
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் 
சுரம் இறந்து ஏகினும், நீடலர் 
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.  
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் 
312. குறிஞ்சி
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, 
இரவின் வரூஉம் இடும்பை நீங்க, 
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, 
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், 
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, 5
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப் 
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக, 
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி! 
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, 
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார் 10
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, 
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த 
அடு புகழ் எஃகம் போல, 
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!  
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார் 
313. பாலை
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என 
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் 
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், 
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, 
ஐய ஆக வெய்ய உயிரா, 5
இரவும் எல்லையும் படர் அட வருந்தி, 
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, 
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, 
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, 
வருவர் வாழி, தோழி! பெரிய 10
நிதியம் சொரிந்த நீவி போலப் 
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை, 
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் 
வசி படு புண்ணின் குருதி மாந்தி, 
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல, 15
இல் வழிப் படூஉம் காக்கைக் 
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.  
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ 
314. முல்லை
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின், 
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் 
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, 
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, 
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் 5
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, 
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, 
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி 
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன் 
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர் 10
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப் 
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப, 
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை 
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என, 
கடவுட் கற்பின் மடவோள் கூற, 15
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் 
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்! 
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி! 
வேலி சுற்றிய வால் வீ முல்லைப் 
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின் 20
இன் நகை இளையோள் கவவ, 
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே!  
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் 
315. பாலை
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் 
சூழி மென் முகம் செப்புடன் எதிரின; 
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண் 
கண் துணை ஆக நோக்கி, நெருநையும், 
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், 5
அறியாமையின் செறியேன், யானே; 
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் 
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், 
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, 
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் 10
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், 
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, 
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென, 
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி, 
சேக்குவள் கொல்லோதானே தேக்கின் 15
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை, 
ஊன் புழுக்கு அயரும் முன்றில், 
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.  
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் 
316. மருதம்
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, 
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு 
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, 
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, 
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, 5
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் 
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் 
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள், 
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, 
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ 10
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை! 
அது புலந்து உறைதல் வல்லியோரே, 
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து, 
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி, 
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, 15
வைகுநர் ஆகுதல் அறிந்தும், 
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!  
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார் 
317. பாலை
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, 
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, 
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, 
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று 
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் 5
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் 
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, 
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி 
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, 
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து 10
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, 
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி 
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் 
ஆன் ஏமுற்ற காமர் வேனில், 
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் 15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப 
வருவேம்" என்ற பருவம் ஆண்டை 
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, 
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு 
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, 20
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து 
என்னுழியதுகொல் தானே பல் நாள் 
அன்னையும் அறிவுற அணங்கி, 
நல் நுதல் பாஅய பசலை நோயே?  
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் 
318. குறிஞ்சி
கான மான் அதர் யானையும் வழங்கும்; 
வான மீமிசை உருமும் நனி உரறும்; 
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; 
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி 
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் 5
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், 
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! 
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ 
இன்று தலையாக வாரல்; வரினே, 
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, 10
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் 
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, 
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு 
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் 
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! 15
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர் 
319. பாலை
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை 
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, 
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் 
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் 
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, 5
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென 
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, 
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய 
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, 
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் 10
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் 
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் 
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், 
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், 
'செல்வேம்' என்னும் நும் எதிர், 15
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!  
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் 
320. நெய்தல்
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, 
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், 
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், 
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் 
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப! 5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் 
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், 
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் 
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், 
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை 10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் 
வண்டற் பாவை சிதைய வந்து, நீ 
தோள் புதிது உண்ட ஞான்றை, 
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே?  
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 
321. பாலை
பசித்த யானைப் பழங்கண் அன்ன 
வறுஞ் சுனை முகந்த கோடைத் தௌ விளி 
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, 
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு 
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, 5
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் 
படு மணி இன நிரை உணீஇய, கோவலர் 
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், 
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் 
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், 10
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? 
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு 
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? 
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! 
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, 15
யாய் அறிவுறுதல் அஞ்சி, 
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.  
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் 
322. குறிஞ்சி
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, 
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; 
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, 
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, 
பாம்பு எறி கோலின் தமியை வைகி, 5
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் 
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், 
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் 
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், 10
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் 
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், 
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப 
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, 
புகல் அரும், பொதியில் போலப் 15
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!  
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 
323. பாலை
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் 
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் 
வருவர் என்பது வாய்வதாக, 
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் 
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் 5
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, 
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! 
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, 
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து 
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் 10
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு 
ஆலி அழி துளி தலைஇக் 
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே!  
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார் 
324. முல்லை
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் 
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை 
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த 
வளராப் பிள்ளைத் தூவி அன்ன, 
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் 5
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் 
துளி படு மொக்குள் துள்ளுவன சால, 
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, 
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், 
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த 10
வண்டு உண் நறு வீ துமித்த நேமி 
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், 
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, 
செல்லும், நெடுந்தகை தேரே 
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! 15
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார் 
325. பாலை
அம்ம! வாழி, தோழி! காதலர், 
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், 
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த 
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் 
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது 5
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி, 
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் 
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, 
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, 
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் 10
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, 
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், 
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; 
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள், 
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, 15
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, 
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, 
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, 
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் 
சோலை அத்தம் மாலைப் போகி, 20
ஒழியச் சென்றோர்மன்ற; 
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?  
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்

301. பாலை
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி, படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி! நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, 5நீர் வாழ் முதலை ஆவித்தன்ன ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து, ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை, சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி, பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, 10குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ, முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை, வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, 15செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக் குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து, சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு 20பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென, தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர், இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த புன் தலை மன்றம் காணின், வழி நாள், அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்;  அதுவே மருவினம், மாலை; அதனால், காதலர் செய்த காதல் நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே?  

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார் 

302. குறிஞ்சி
சிலம்பில் போகிய செம் முக வாழை அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் நல் வரை நாடனொடு அருவி ஆடியும், பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், 5நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் அரிய போலும் காதல் அம் தோழி! இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், 10கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. 15

பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 

303. பாலை
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, பேஎய் கண்ட கனவின், பல் மாண் நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை 5மா இருங் கொல்லி உச்சித் தாஅய், ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் புலம் கந்தாக இரவலர் செலினே, வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! 15ஐயம் தௌயரோ, நீயே; பல உடன் வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. 20

தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - அவ்வையார் 

304. முல்லை
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, 5செய்து விட்டன்ன செந் நில மருங்கில், செறித்து நிறுத்தன்ன தௌ அறல் பருகி, சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, 10சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் மணி மிடை பவளம் போல, அணி மிகக் காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, 15புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, 'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, நம் நோய் தன்வயின் அறியாள், 20எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?  

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் 

305. பாலை
பகலினும் அகலாதாகி, யாமம் தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய, தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு பனி மீக்கூரும் பைதல் பானாள், பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, 5பருகுவன்ன காதலொடு திருகி, மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து, ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ; அருளிலாளர் பொருள்வயின் அகல, எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து 10யான் எவன் உளெனோ தோழி! தானே பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய, உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் கனை எரி பிறப்ப ஊதும் 15நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?  

பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் 

306. மருதம்
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் 5கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, பழன யாமை பசு வெயில் கொள்ளும் நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி 10இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு ஊடினள் சிறு துனி செய்து எம் மணல் மலி மறுகின் இறந்திசினோளே. 15

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 

307. பாலை
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, பகலும் கங்குலும் மயங்கி, பையென, பெயல் உறு மலரின் கண் பனி வார, ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து, 5நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை அடு முரண் தொலைத்த நெடு நல் யானை மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் 10புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, இரும் புறாப் பெடையொடு பயிரும் பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? 15

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் 

308. குறிஞ்சி
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் ஆலி அழி துளி பொழிந்த வைகறை, வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, 5கலம் சுடு புகையின் தோன்றும் நாட! இரவின் வருதல் எவனோ? பகல் வரின், தொலையா வேலின் வண் மகிழ் எந்தை களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, 10மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, 15கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.  

இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார் 

309. பாலை
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி, பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர், அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென, தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், 5புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை, களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் காடு மிக நெடிய என்னார், கோடியர் பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் 10திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு, நாம் செலின், எவனோ தோழி! காம்பின் வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது, இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் 15தண் பெரு படாஅர் வெரூஉம் குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 

310. நெய்தல்
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும், தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து, பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின், குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு 5இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும் தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட, காதலின் வளர்ந்த மாதர்ஆகலின், பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால், குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! 10இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப் பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக் கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து 15உரும் இசைப் புணரி உடைதரும் பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.  

தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார் 

311. பாலை
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, எழுதியன்ன திண் நிலைக் கதவம் கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் 5இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள் பொம்மல் ஓதி நீவிய காதலொடு, பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி 10செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் சுரம் இறந்து ஏகினும், நீடலர் அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.  

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் 

312. குறிஞ்சி
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, இரவின் வரூஉம் இடும்பை நீங்க, வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, 5அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப் பெரு மலை நாடன் மார்பு புணை ஆக, ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி! வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார் 10ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த அடு புகழ் எஃகம் போல, கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!  

தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார் 

313. பாலை
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, ஐய ஆக வெய்ய உயிரா, 5இரவும் எல்லையும் படர் அட வருந்தி, அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, வருவர் வாழி, தோழி! பெரிய 10நிதியம் சொரிந்த நீவி போலப் பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை, நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் வசி படு புண்ணின் குருதி மாந்தி, ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல, 15இல் வழிப் படூஉம் காக்கைக் கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ 

314. முல்லை
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின், மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் 5திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன் வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர் 10ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப் பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப, இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என, கடவுட் கற்பின் மடவோள் கூற, 15செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் துனி கொள் பருவரல் தீர, வந்தோய்! இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி! வேலி சுற்றிய வால் வீ முல்லைப் பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின் 20இன் நகை இளையோள் கவவ, மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே!  

வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் 

315. பாலை
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின; பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண் கண் துணை ஆக நோக்கி, நெருநையும், அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், 5அறியாமையின் செறியேன், யானே; பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் 10கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென, கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி, சேக்குவள் கொல்லோதானே தேக்கின் 15அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை, ஊன் புழுக்கு அயரும் முன்றில், கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் 

316. மருதம்
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, 5குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள், ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ 10புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை! அது புலந்து உறைதல் வல்லியோரே, செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து, தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி, தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, 15வைகுநர் ஆகுதல் அறிந்தும், அறியார் அம்ம, அஃது உடலுமோரே!  

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார் 

317. பாலை
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் 5முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து 10ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் ஆன் ஏமுற்ற காமர் வேனில், வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் 15குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப வருவேம்" என்ற பருவம் ஆண்டை இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு உள்ளிய மருங்கின் உள்ளம் போல, 20வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து என்னுழியதுகொல் தானே பல் நாள் அன்னையும் அறிவுற அணங்கி, நல் நுதல் பாஅய பசலை நோயே?  

தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் 

318. குறிஞ்சி
கான மான் அதர் யானையும் வழங்கும்; வான மீமிசை உருமும் நனி உரறும்; அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; இர வழங்கு சிறு நெறி தமியை வருதி வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் 5முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ இன்று தலையாக வாரல்; வரினே, ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, 10எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! 15

இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர் 

319. பாலை
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, 5அணங்கு என உருத்த நோக்கின், ஐயென நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் 10பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், 'செல்வேம்' என்னும் நும் எதிர், 15'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!  

செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் 

320. நெய்தல்
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப! 5மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை 10நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் வண்டற் பாவை சிதைய வந்து, நீ தோள் புதிது உண்ட ஞான்றை, சூளும் பொய்யோ, கடல் அறி கரியே?  

பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 

321. பாலை
பசித்த யானைப் பழங்கண் அன்ன வறுஞ் சுனை முகந்த கோடைத் தௌ விளி விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, 5ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் படு மணி இன நிரை உணீஇய, கோவலர் விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், 10துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, 15யாய் அறிவுறுதல் அஞ்சி, வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.  

மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் 

322. குறிஞ்சி
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, பாம்பு எறி கோலின் தமியை வைகி, 5தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், 10பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, புகல் அரும், பொதியில் போலப் 15பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!  

அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 

323. பாலை
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் வருவர் என்பது வாய்வதாக, ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் 5தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் 10பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு ஆலி அழி துளி தலைஇக் கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே!  

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார் 

324. முல்லை
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த வளராப் பிள்ளைத் தூவி அன்ன, உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் 5பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் துளி படு மொக்குள் துள்ளுவன சால, தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த 10வண்டு உண் நறு வீ துமித்த நேமி தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, செல்லும், நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! 15

வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார் 

325. பாலை
அம்ம! வாழி, தோழி! காதலர், 'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது 5இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி, 'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் 10வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள், உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, 15எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் சோலை அத்தம் மாலைப் போகி, 20ஒழியச் சென்றோர்மன்ற; பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?  

கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.