LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

அகநானூறு-14

 

326. மருதம்
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, 
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், 
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் 
கடுந் தேர் குழித்த ஞௌளல் ஆங்கண், 
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், 5
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன 
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, 
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் 
இழை அணி யானைச் சோழர் மறவன் 
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, 10
புனல் மலி புதவின், போஒர் கிழவோன், 
பழையன் ஓக்கிய வேல் போல், 
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே!  
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் 
327. பாலை
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், 
நன்பகல் அமையமும் இரவும் போல, 
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, 
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் 
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, 5
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! 
நீ செல வலித்தனைஆயின், யாவதும் 
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் 
ஆவி அவ் வரி நீர் என நசைஇ, 
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, 10
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் 
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் 
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், 
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, 
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை 15
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் 
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், 
கோல் கழிபு இரங்கும் அதர, 
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?  
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் 
328. குறிஞ்சி
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் 
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, 
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, 
அரவின் பைந் தலை இடறி, பானாள் 
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, 5
துனி கண் அகல அளைஇ, கங்குலின் 
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் 
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், 
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் 
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு 10
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி 
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, 
கழை தின் யாக்கை விழை களிறு தைவர, 
வாழை அம் சிலம்பில் துஞ்சும் 
சாரல் நாடன் சாயல் மார்பே! 15
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 
329. பாலை
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, 
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, 
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் 
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், 
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் 5
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் 
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, 
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, 
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, 
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குரு 10
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட 
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், 
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, 
பனி படு சிமையப் பல் மலை இறந்தே?  
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார் 
330. நெய்தல்
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், 
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், 
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், 
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் 
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு 5
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! 
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, 
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் 
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், 
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? 10
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; 
குப்பை வெண் மணற் குவவுமிசையானும், 
எக்கர்த் தாழை மடல்வயினானும், 
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, 
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த 15
கடுஞ் செலல் கொடுந் திமில் போல, 
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!  
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் 
331. பாலை
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, 
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, 
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் 
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் 
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் 5
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, 
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் 
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, 
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், 
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் 10
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, 
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், 
வேளிரொடு பொரீஇய, கழித்த 
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!  
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் 
332. குறிஞ்சி
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, 
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, 
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, 
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் 
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, 5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, 
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் 
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, 
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் 
நின் புரை தக்க சாயலன் என, நீ 10
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் 
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு 
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் 
வண்டு இடைப் படாஅ முயக்கமும், 
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! 15
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர் 
333. பாலை
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் 
ஆக மேனி அம் பசப்பு ஊர, 
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் 
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு 
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் 5
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் 
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, 
நீடலர் வாழி, தோழி! கோடையில், 
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, 
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, 10
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, 
யானைப் பெரு நிரை வானம் பயிரும் 
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, 
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என, 
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா 15
நின் வாய் இன் மொழி நல் வாயாக 
வருவர் ஆயினோ நன்றே; வாராது, 
அவணர் காதலர்ஆயினும், இவண் நம் 
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல 
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, 20
மறுதரல் உள்ளத்தர்எனினும், 
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.  
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார் 
334. முல்லை
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய 
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, 
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! 
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு 
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, 5
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, 
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் 
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, 
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் 
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, 10
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் 
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, 
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, 
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, 
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் 15
பொலிவன அமர்த்த உண்கண், 
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!  
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார் 
335. பாலை
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் 
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் 
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் 
யானும் அறிவென்மன்னே; யானை தன் 
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, 5
இன்னா வேனில் இன் துணை ஆர, 
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, 
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் 
அரிய அல்லமன், நமக்கே விரி தார் 
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் 10
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, 
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், 
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த 
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் 
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, 15
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, 
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், 
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ 
வார் உறு கவரியின் வண்டு உண விரிய, 
முத்தின் அன்ன வெள் வீ தாஅய், 20
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி 
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் 
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் 
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று 
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,  
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!  
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார் 
336. மருதம்
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் 
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த 
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, 
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் 
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், 5
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் 
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் 
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் 
காஞ்சி நீழல் குரவை அயரும் 
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் 10
தேர் தர வந்த நேர் இழை மகளிர் 
ஏசுப என்ப, என் நலனே; அதுவே 
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் 
கொல் களிற்று யானை நல்கல்மாறே; 
தாமும் பிறரும் உளர்போல் சேறல் 15
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், 
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் 
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, 
என்னொடு திரியானாயின், வென் வேல் 
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் 20
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, 
ஆரியர் படையின் உடைக, என் 
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!  
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் 
337. பாலை
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த 
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி, 
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய, 
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின் 
அவணது ஆக, பொருள்' என்று, உமணர் 5
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை, 
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் 
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி, 
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது 
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே 10
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர், 
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி, 
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர, 
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ, 
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை, 15
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை, 
கள்ளி நீழல் கதறுபு வதிய, 
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை, 
எமியம் கழிதந்தோயே பனி இருள் 
பெருங் கலி வானம் தலைஇய 20
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!  
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ 
338. குறிஞ்சி
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் 
மறம் கெழு தானை அரசருள்ளும், 
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர் 
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள், 
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் 5
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன், 
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல், 
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின், 
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற 
முயங்கல் இயையாதுஆயினும், என்றும், 10
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக, 
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் 
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன் 
அகல் இருங் கானத்துக் கொல்லி போல, 
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் 15
அறாஅலியரோ, தூதே பொறாஅர் 
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள், 
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன், 
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து, 
வழங்கல் ஆனாப் பெருந் துறை 20
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!  
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் 
339. பாலை
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் 
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், 
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் 
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, 
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட 5
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து 
ஆண்மை வாங்க, காமம் தட்ப, 
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, 
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, 
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; 10
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு 
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் 
வாழ்தல் அன்ன காதல், 
சாதல் அன்ன பிரிவு அரியோளே!  
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார் 
340. நெய்தல்
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, 
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, 
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, 
வலவன் வண் தேர் இயக்க, நீயும் 
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம 5
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் 
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் 
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, 
கழியே ஓதம் மல்கின்று; வழியே 
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; 10
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, 
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் 
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! 
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் 
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; 15
வடவர் தந்த வான் கேழ் வட்டம் 
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய 
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் 
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் 
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், 20
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை 
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, 
முன்றில் தாழைத் தூங்கும் 
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே?  
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர் 
341. பாலை
உய் தகை இன்றால் தோழி! பைபய, 
கோங்கும் கொய் குறை உற்றன; குயிலும் 
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; 
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் 
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், 5
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், 
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, 
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, 
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் 
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், 10
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், 
யாணர் வேனில்மன், இது 
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?  
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் 
342. குறிஞ்சி
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; 
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான் 
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது 
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை 
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் 5
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன், 
ஏவல் இளையர் தலைவன், மேவார் 
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப் 
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை, 
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ 10
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ் 
வரையரமகளிரின் அரியள், 
அவ் வரி அல்குல் அணையாக்காலே!  
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் 
343. பாலை
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள், 
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை, 
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து, 
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப் 
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் 5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல், 
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ் 
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் 
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண், 
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை, 10
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார், 
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப் 
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த 
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி, 
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று 15
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின் 
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண், 
சில் மொழிப் பொலிந்த துவர் வாய், 
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.  
தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார் 
344. முல்லை
வள மழை பொழிந்த வால் நிறக் களரி, 
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் 
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், 
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் 
கை மாண் தோணி கடுப்ப, பையென, 5
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் 
எல் இடை உறாஅ அளவை, வல்லே, 
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, 
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி 
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, 10
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! 
பயப்புறு படர் அட வருந்திய 
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!  
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 
345. பாலை
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி, 
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண் 
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க் 
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால், 
பல் படைப் புரவி எய்திய தொல் இசை 5
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய 
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து, 
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் 
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் 
சில் நாள் கழிக!' என்று முன் நாள் 10
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு 
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார், 
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப, 
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய 
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த 15
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச் 
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப, 
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு 
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் 
கல் கண் சீக்கும் அத்தம், 20
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!  
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் 
346.மருதம்
நகை நன்று அம்ம தானே இறை மிசை 
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன 
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், 
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, 
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் 5
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை 
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, 
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, 
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை 
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் 10
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! 
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் 
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, 
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, 
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, 15
எம் மனை வாராயாகி, முன் நாள், 
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் 
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், 
இழை அணி யானைப் பழையன் மாறன், 
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், 20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த 
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், 
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, 
ஏதில் மன்னர் ஊர் கொள, 
கோதை மார்பன் உவகையின் பெரிதே. 25
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் 
347. பாலை
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் 
நலம் கவர் பசலை நல்கின்று நலிய, 
சால் பெருந் தானைச் சேரலாதன் 
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய 
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, 5
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி 
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய, 
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே 
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது, 
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, 10
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி 
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ, 
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி 
கை தலை வைத்த மையல் விதுப்பொடு, 
கெடு மகப் பெண்டிரின் தேரும் 15
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!  
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் 
348. குறிஞ்சி
என் ஆவதுகொல் தானே முன்றில், 
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, 
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, 
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, 
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் 5
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் 
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் 
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், 
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, 
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, 10
'யானை வவ்வின தினை' என, நோனாது, 
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, 
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் 
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?  
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் 
349. பாலை
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை 
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய, 
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன் 
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி, 
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, 5
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக, 
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை 
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு, 
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள, 
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை 10
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன் 
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை 
கல் ஊர் பாம்பின் தோன்றும் 
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?  
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் 
350. நெய்தல்
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப, 
எறி திரை ஓதம் தரல் ஆனாதே; 
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் 
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப, 
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; 5
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி 
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது, 
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச் 
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப! 
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, 10
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் 
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, 
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் 
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண், 
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! 15
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார்

326. மருதம்
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் கடுந் தேர் குழித்த ஞௌளல் ஆங்கண், நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், 5இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் இழை அணி யானைச் சோழர் மறவன் கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, 10புனல் மலி புதவின், போஒர் கிழவோன், பழையன் ஓக்கிய வேல் போல், பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே!  

தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் 

327. பாலை
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், நன்பகல் அமையமும் இரவும் போல, வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, 5துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! நீ செல வலித்தனைஆயின், யாவதும் நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் ஆவி அவ் வரி நீர் என நசைஇ, மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, 10களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை 15பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், கோல் கழிபு இரங்கும் அதர, வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?  

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் 

328. குறிஞ்சி
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, அரவின் பைந் தலை இடறி, பானாள் இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, 5துனி கண் அகல அளைஇ, கங்குலின் இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு 10அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, கழை தின் யாக்கை விழை களிறு தைவர, வாழை அம் சிலம்பில் துஞ்சும் சாரல் நாடன் சாயல் மார்பே! 15

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 

329. பாலை
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் 5கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குரு 10நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, பனி படு சிமையப் பல் மலை இறந்தே?  

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார் 

330. நெய்தல்
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு 5செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? 10உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; குப்பை வெண் மணற் குவவுமிசையானும், எக்கர்த் தாழை மடல்வயினானும், ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த 15கடுஞ் செலல் கொடுந் திமில் போல, நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!  

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் 

331. பாலை
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் 5கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் 10பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், வேளிரொடு பொரீஇய, கழித்த வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!  

தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் 

332. குறிஞ்சி
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, 5கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் நின் புரை தக்க சாயலன் என, நீ 10அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் வண்டு இடைப் படாஅ முயக்கமும், தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! 15

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர் 

333. பாலை
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் ஆக மேனி அம் பசப்பு ஊர, அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் 5எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, நீடலர் வாழி, தோழி! கோடையில், குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, 10வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, யானைப் பெரு நிரை வானம் பயிரும் மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, நாள் இடைப்படாமை வருவர், நமர்' என, பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா 15நின் வாய் இன் மொழி நல் வாயாக வருவர் ஆயினோ நன்றே; வாராது, அவணர் காதலர்ஆயினும், இவண் நம் பசலை மாய்தல் எளிதுமன் தில்ல சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, 20மறுதரல் உள்ளத்தர்எனினும், குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.  

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார் 

334. முல்லை
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, 5இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, 10நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் 15பொலிவன அமர்த்த உண்கண், ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!  

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார் 

335. பாலை
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் யானும் அறிவென்மன்னே; யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, 5இன்னா வேனில் இன் துணை ஆர, முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் அரிய அல்லமன், நமக்கே விரி தார் ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் 10மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, 15வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ வார் உறு கவரியின் வண்டு உண விரிய, முத்தின் அன்ன வெள் வீ தாஅய், 20அலகின் அன்ன அரி நிறத்து ஆலி நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ் வாய்,  ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!  

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார் 

336. மருதம்
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், 5தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் 10தேர் தர வந்த நேர் இழை மகளிர் ஏசுப என்ப, என் நலனே; அதுவே பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் கொல் களிற்று யானை நல்கல்மாறே; தாமும் பிறரும் உளர்போல் சேறல் 15முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, என்னொடு திரியானாயின், வென் வேல் மாரி அம்பின் மழைத் தோற் சோழர் 20வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, ஆரியர் படையின் உடைக, என் நேர் இறை முன்கை வீங்கிய வளையே!  

நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் 

337. பாலை
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி, பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய, ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின் அவணது ஆக, பொருள்' என்று, உமணர் 5கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை, தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி, 'உண்ணா மருங்குல் இன்னோன் கையது பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே 10தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர், திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி, செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர, கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ, வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை, 15வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை, கள்ளி நீழல் கதறுபு வதிய, மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை, எமியம் கழிதந்தோயே பனி இருள் பெருங் கலி வானம் தலைஇய 20இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!  

முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ 

338. குறிஞ்சி
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் மறம் கெழு தானை அரசருள்ளும், அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர் மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள், பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் 5அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன், சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல், துணை ஈர் ஓதி மாஅயோள்வயின், நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற முயங்கல் இயையாதுஆயினும், என்றும், 10வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக, ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன் அகல் இருங் கானத்துக் கொல்லி போல, தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் 15அறாஅலியரோ, தூதே பொறாஅர் விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள், புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன், தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து, வழங்கல் ஆனாப் பெருந் துறை 20முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!  

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் 

339. பாலை
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட 5ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து ஆண்மை வாங்க, காமம் தட்ப, கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; 10நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் வாழ்தல் அன்ன காதல், சாதல் அன்ன பிரிவு அரியோளே!  

போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார் 

340. நெய்தல்
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, வலவன் வண் தேர் இயக்க, நீயும் செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம 5'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, கழியே ஓதம் மல்கின்று; வழியே வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; 10சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; 15வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், 20கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, முன்றில் தாழைத் தூங்கும் தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே?  

பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர் 

341. பாலை
உய் தகை இன்றால் தோழி! பைபய, கோங்கும் கொய் குறை உற்றன; குயிலும் தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், 5மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், 10குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், யாணர் வேனில்மன், இது மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?  

பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் 

342. குறிஞ்சி
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான் கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் 5ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன், ஏவல் இளையர் தலைவன், மேவார் அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப் பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை, கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ 10நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ் வரையரமகளிரின் அரியள், அவ் வரி அல்குல் அணையாக்காலே!  

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் 

343. பாலை
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள், சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை, நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து, மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப் புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் 5கண்ணி வாடிய மண்ணா மருங்குல், கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ் ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் கண் பொரி கவலைய கானத்து ஆங்கண், நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை, 10இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார், நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப் புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி, உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று 15உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின் மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண், சில் மொழிப் பொலிந்த துவர் வாய், பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.  

தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார் 

344. முல்லை
வள மழை பொழிந்த வால் நிறக் களரி, உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் கை மாண் தோணி கடுப்ப, பையென, 5மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் எல் இடை உறாஅ அளவை, வல்லே, கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, 10இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! பயப்புறு படர் அட வருந்திய நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!  

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 

345. பாலை
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி, தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண் நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க் கான் அமர் செல்வி அருளலின், வெண் கால், பல் படைப் புரவி எய்திய தொல் இசை 5நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய இன மழை தவழும் ஏழிற் குன்றத்து, கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் சில் நாள் கழிக!' என்று முன் நாள் 10நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார், மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப, உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த 15கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச் செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப, காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம், 20அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!  

தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் 

346.மருதம்
நகை நன்று அம்ம தானே இறை மிசை மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் 5காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் 10பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! யாம் அது பேணின்றோ இலமே நீ நின் பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, 15எம் மனை வாராயாகி, முன் நாள், நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், இழை அணி யானைப் பழையன் மாறன், மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், 20வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, ஏதில் மன்னர் ஊர் கொள, கோதை மார்பன் உவகையின் பெரிதே. 25

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் 

347. பாலை
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் நலம் கவர் பசலை நல்கின்று நலிய, சால் பெருந் தானைச் சேரலாதன் மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, 5கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய, சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது, மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, 10ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ, கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி கை தலை வைத்த மையல் விதுப்பொடு, கெடு மகப் பெண்டிரின் தேரும் 15நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!  

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் 

348. குறிஞ்சி
என் ஆவதுகொல் தானே முன்றில், தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் 5நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, 10'யானை வவ்வின தினை' என, நோனாது, இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?  

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் 

349. பாலை
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய, எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன் தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி, உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, 5உரன் மலி உள்ளமொடு முனை பாழாக, அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு, எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள, திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை 10எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன் வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை கல் ஊர் பாம்பின் தோன்றும் சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?  

தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் 

350. நெய்தல்
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப, எறி திரை ஓதம் தரல் ஆனாதே; துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப, வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; 5கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது, ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச் சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப! இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, 10வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண், உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! 15

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.