LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

அகநானூறு-7

 

151. பாலை
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து 
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, 
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என, 
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது 
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு 5
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் 
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த 
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் 
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் 
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் 10
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், 
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு 
உறுவது கூறும், சிறு செந் நாவின் 
மணி ஓர்த்தன்ன தெண் குரல் 
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! 15
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார் 
152. குறிஞ்சி
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, 
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் 
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் 
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, 
5 சினம் கெழு தானை, தித்தன் வெளியன், 5
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, 
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் 
சிறு வெள் இறவின் குப்பை அன்ன 
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் 
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், 10
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், 
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; 
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் 
களி மயிற் கலாவத்தன்ன. தோளே 
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி 15
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த 
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் 
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, 
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் 
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், 20
மாஅல் யானை ஆஅய் கானத்துத் 
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் 
வேய் அமைக் கண் இடை புரைஇ, 
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.  
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் 
153. பாலை
நோகோ யானே; நோதகும் உள்ளம்; 
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ, 
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி, 
வெம்பும்மன், அளியள்தானே இனியே, 
வன்கணாளன் மார்புஉற வளைஇ, 5
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண் 
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத் 
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு, 
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின், 
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் 10
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை 
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல் 
வல்லுநள்கொல்லோ தானே எல்லி 
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி 
மீனொடு பொலிந்த வானின் தோன்றி, 15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் 
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர் 
கை விடு சுடரின் தோன்றும் 
மை படு மா மலை விலங்கிய சுரனே?  
மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன் 
154. முல்லை
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் 
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை 
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, 
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி 
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, 5
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன 
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, 
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக் 
காமர் துணையொடு ஏமுற வதிய, 
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; 10
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் 
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப 
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு 
நம் வயிற் புரிந்த கொள்கை 
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. 15
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் 
155. பாலை
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் 
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் 
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம் 
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே 
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் 5
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின் 
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் 
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய 
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி, 
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி 
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி, 
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை 
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த 
விரல் ஊன்று வடுவின் தோன்றும் 15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.  
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ 
156. மருதம்
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் 
மூட்டுறு கவரி தூக்கியன்ன, 
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் 
மூதா தின்றல் அஞ்சி, காவலர் 
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, 5
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் 
தீம் புனல் ஊர! திறவதாகக் 
குவளை உண்கண் இவளும் யானும் 
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, 
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, 10
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, 
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! 
கள்ளும் கண்ணியும் கையுறையாக 
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் 
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, 15
தணி மருங்கு அறியாள், யாய் அழ, 
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?  
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் 
157. பாலை
அரியற் பெண்டிர் அலகிற் கொண்ட 
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த 
அரி நிறக் கலுழி ஆர மாந்தி, 
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர், 5
5 வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் 
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல் 
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி, 
கான யானை கவளம் கொள்ளும் 
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார் 
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி! 10
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, 
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய், 
வினை அழி பாவையின் உலறி, 
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!  
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார் 
158. குறிஞ்சி
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, 
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், 
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, 
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், 
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என 
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் 
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து 
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; 
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் 10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் 
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர 
மன்ற மராஅத்த கூகை குழறினும், 
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் 
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, 15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் 
எந்தையும் இல்லன் ஆக, 
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?  
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் 
159. பாலை
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் 
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை 
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி 
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், 
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் 5
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, 
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென 
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், 
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, 
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் 10
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி 
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! 
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை 
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது 
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் 15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் 
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, 
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் 
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், 
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் 20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.  
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார் 
160. நெய்தல்
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? 
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். 
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் 
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, 
5 நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த 5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை 
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் 
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: 
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல 
வாவு உடைமையின் வள்பின் காட்டி, 10
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி 
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி 
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், 
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, 
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது 15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் 
அரவச் சீறூர் காண, 
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.  
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் 
161. பாலை
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி 
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர் 
அடி அமை பகழி ஆர வாங்கி; 
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை, 
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி 5
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் 
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து 
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக் 
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு 
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், 10
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள் 
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த 
நல் வரல் இள முலை நனைய; 
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார் 
162. குறிஞ்சி
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து 
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, 
கடல் கண்டன்ன மாக விசும்பின் 
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, 
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, 5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், 
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, 
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை 
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; 
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என 10
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், 
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், 
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், 
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, 
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, 15
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி 
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய 
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் 
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் 
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, 20
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் 
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர 
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, 
நேர் கொள் நெடு வரைக் கவாஅன்
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. 25
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 
163. பாலை
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, 
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள், 
எமியம் ஆக, துனி உளம் கூர, 
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, 
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி 5
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது 
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை 
முளரி கரியும் முன்பனிப் பானாள், 
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை! 
எனக்கே வந்தனை போறி! புனற் கால் 10
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, 
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது 
இனையை ஆகிச் செல்மதி; 
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!  
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் 
164. முல்லை
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு 
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி, 
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் 
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்; 
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் 5
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற. 
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம். 
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி, 
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு 
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் 10
இது நற் காலம்; கண்டிசின் பகைவர் 
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின், 
கந்து கால் ஒசிக்கும் யானை, 
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!  
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் 
165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, 
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, 
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி 
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், 
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் 5
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு 
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் 
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, 
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, 
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, 10
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, 
'தருமணற் கிடந்த பாவை என் 
அருமகளே என முயங்கினள் அழுமே!  
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ...... 
166. மருதம்
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி 
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், 
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் 
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், 
நறு விரை தௌத்த நாறுஇணர் மாலை, 5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் 
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், 
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் 
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என 
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், 10
யார்கொல் வாழி, தோழி! நெருநல் 
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, 
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, 
புதுவது வந்த காவிரிக் 
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? 15
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார் 
167. பாலை
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின் 
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு 
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை, 
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே 
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப் 5
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் 
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து 
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் 
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ, 
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், 10
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை 
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி 
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென, 
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து 
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று 15
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் 
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், 
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க் 
கூர் முகச் சிதலை வேய்ந்த 
போர் மடி நல் இறைப் பொதியிலானே? 20
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
168. குறிஞ்சி
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, 
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; 
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! 
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த 
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் 5
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் 
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, 
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; 
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் 
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, 10
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் 
வாள் வரி வயப் புலி கல் முழை உரற, 
கானவர் மடிந்த கங்குல்; 
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?  
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. - கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் 
169. பாலை
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட, 
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை, 
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன் 
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை, 
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக் 5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் 
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும் 
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி 
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து, 
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை 10
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் 
கயல் உமிழ் நீரின் கண் பனி வார, 
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு 
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!  
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார் 
170. நெய்தல்
கானலும் கழறாது; கழியும் கூறாது; 
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; 
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; 
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் 
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, 5
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, 
பறைஇ தளரும் துறைவனை, நீயே, 
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் 
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் 
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு 10
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் 
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, 
'நின் உறு விழுமம் களைந்தோள் 
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.  
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 
171. பாலை
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும் 
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த 
பணை எழில் அழிய வாடும்; நாளும் 
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது 
இனையல் வாழி, தோழி! புணர்வர் 5
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து 
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த 
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் 
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார், 
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை 10
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின், 
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப் 
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய, 
கருங் கோட்டு இருப்பை ஊரும் 
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! 15
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார் 
172. குறிஞ்சி
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் 
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி 
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் 
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் 
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; 5
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் 
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, 
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, 
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் 
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, 10
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், 
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, 
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் 
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் 
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் 15
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் 
மணி ஏர் மாண் நலம் சிதைய, 
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே!  
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் 
173. பாலை
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த 
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும் 
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச் 
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல் 
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் 5
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின் 
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின், 
வருவர் வாழி, தோழி! பல புரி 
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ, 
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, 10
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட, 
காடு கவின் அழிய உரைஇ, கோடை 
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க் 
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் 
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் 15
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் 
விண் பொரு நெடு வரைக் கவாஅன் 
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.  
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார் 
174. முல்லை
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து, 
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும் 
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என, 
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் 
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை 5
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து, 
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ 
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து, 
பழங்கண் கொண்ட பசலை மேனியள், 
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை 10
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள, 
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள், 
நல் மணல் வியலிடை நடந்த 
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?  
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் 
175. பாலை
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை 
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் 
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி 
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின், 
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் 5
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண 
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண் 
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து 
வருதும்' என்றனர் அன்றே தோழி! 
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் 10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த 
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என 
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி, 
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன் 
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், 15
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு 
மண் பயம் பூப்பப் பாஅய், 
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?  
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார்.


151. பாலை
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என, மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு 5உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் 10பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு உறுவது கூறும், சிறு செந் நாவின் மணி ஓர்த்தன்ன தெண் குரல் கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! 15

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார் 

152. குறிஞ்சி
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, 5 சினம் கெழு தானை, தித்தன் வெளியன், 5இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் சிறு வெள் இறவின் குப்பை அன்ன உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் முனை முரண் உடையக் கடந்த வென் வேல், 10இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் களி மயிற் கலாவத்தன்ன. தோளே வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி 15சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த கடவுட் காந்தளுள்ளும், பல உடன் இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், 20மாஅல் யானை ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் வேய் அமைக் கண் இடை புரைஇ, சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.  

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் 

153. பாலை
நோகோ யானே; நோதகும் உள்ளம்; அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ, பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி, வெம்பும்மன், அளியள்தானே இனியே, வன்கணாளன் மார்புஉற வளைஇ, 5இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண் உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத் தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு, உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின், பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் 10பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல் வல்லுநள்கொல்லோ தானே எல்லி ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி மீனொடு பொலிந்த வானின் தோன்றி, 15தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர் கை விடு சுடரின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே?  

மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன் 

154. முல்லை
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடு நீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, 5வெஞ் சின அரவின் பை அணந்தன்ன தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதிய, காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; 10ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு நம் வயிற் புரிந்த கொள்கை அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. 15

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் 

155. பாலை
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம் இருள் ஏர் ஐம்பால் நீவியோரே நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் 5செய் வினை முடிக்க; தோழி! பல்வயின் பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி, நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி, செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த விரல் ஊன்று வடுவின் தோன்றும் 15மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ 

156. மருதம்
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி தூக்கியன்ன, செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் மூதா தின்றல் அஞ்சி, காவலர் பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, 5காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் தீம் புனல் ஊர! திறவதாகக் குவளை உண்கண் இவளும் யானும் கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, காயா ஞாயிற்றாக, தலைப்பெய, 10'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, 15தணி மருங்கு அறியாள், யாய் அழ, மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?  

தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் 

157. பாலை
அரியற் பெண்டிர் அலகிற் கொண்ட பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த அரி நிறக் கலுழி ஆர மாந்தி, செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர், 55 வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல் பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி, கான யானை கவளம் கொள்ளும் அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார் நெஞ்சு உண மொழிபமன்னே தோழி! 10முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய், வினை அழி பாவையின் உலறி, மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!  

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார் 

158. குறிஞ்சி
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் 10கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும், நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, 15முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் எந்தையும் இல்லன் ஆக, அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?  

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் 

159. பாலை
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை உரனுடைச் சுவல பகடு பல பரப்பி உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் 5அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் 10கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் 15மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் 20பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார் 

160. நெய்தல்
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, 5 நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த 5கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல வாவு உடைமையின் வள்பின் காட்டி, 10ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, இர வந்தன்றால் திண் தேர்; கரவாது 15ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் அரவச் சீறூர் காண, பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.  

தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் 

161. பாலை
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி வடியாப் பித்தை, வன்கண், ஆடவர் அடி அமை பகழி ஆர வாங்கி; வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை, படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி 5எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக் கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், 10அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள் சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த நல் வரல் இள முலை நனைய; பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.

பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார் 

162. குறிஞ்சி
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, கடல் கண்டன்ன மாக விசும்பின் அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, 5விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என 10வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, 15நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, 20வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, நேர் கொள் நெடு வரைக் கவாஅன்சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. 25

இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 

163. பாலை
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள், எமியம் ஆக, துனி உளம் கூர, சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி 5விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை முளரி கரியும் முன்பனிப் பானாள், குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை! எனக்கே வந்தனை போறி! புனற் கால் 10அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது இனையை ஆகிச் செல்மதி; வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!  

பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் 

164. முல்லை
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி, விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்; பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் 5நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற. வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம். 'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி, இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் 10இது நற் காலம்; கண்டிசின் பகைவர் மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின், கந்து கால் ஒசிக்கும் யானை, வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!  

பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் 

165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் 5நாடு பல இறந்த நன்னராட்டிக்கு ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் 'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, 10தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, 'தருமணற் கிடந்த பாவை என் அருமகளே என முயங்கினள் அழுமே!  

மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ...... 

166. மருதம்
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், நறு விரை தௌத்த நாறுஇணர் மாலை, 5பொறி வரி இன வண்டு ஊதல கழியும் உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் அனையேன்ஆயின், அணங்குக, என்!' என மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், 10யார்கொல் வாழி, தோழி! நெருநல் தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, புதுவது வந்த காவிரிக் கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? 15

பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார் 

167. பாலை
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின் பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை, விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப் 5பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ, ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், 10முருங்கை மேய்ந்த பெருங் கை யானை வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென, மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று 15ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க் கூர் முகச் சிதலை வேய்ந்த போர் மடி நல் இறைப் பொதியிலானே? 20

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார் 

168. குறிஞ்சி
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் 5கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, 10ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் வாள் வரி வயப் புலி கல் முழை உரற, கானவர் மடிந்த கங்குல்; மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?  

இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. - கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் 

169. பாலை
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட, அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை, புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன் கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை, ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக் 5கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும் சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து, செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை 10மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் கயல் உமிழ் நீரின் கண் பனி வார, பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு வருந்துமால், அளியள், திருந்திழைதானே!  

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார் 

170. நெய்தல்
கானலும் கழறாது; கழியும் கூறாது; தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, 5தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, பறைஇ தளரும் துறைவனை, நீயே, சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் கடற் சிறு காக்கை காமர் பெடையொடு 10கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, 'நின் உறு விழுமம் களைந்தோள் தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.  

தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 

171. பாலை
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும் அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த பணை எழில் அழிய வாடும்; நாளும் நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது இனையல் வாழி, தோழி! புணர்வர் 5இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார், திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை 10எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின், கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப் பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய, கருங் கோட்டு இருப்பை ஊரும் பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! 15

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார் 

172. குறிஞ்சி
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; 5இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் புல் வேய் குரம்பை புலர ஊன்றி, 10முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் 15அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் மணி ஏர் மாண் நலம் சிதைய, பொன் நேர் பசலை பாவின்றுமன்னே!  

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் 

173. பாலை
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச் செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல் மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் 5சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின் நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின், வருவர் வாழி, தோழி! பல புரி வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ, பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, 10உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட, காடு கவின் அழிய உரைஇ, கோடை நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க் கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் 15இன் களி நறவின் இயல் தேர் நன்னன் விண் பொரு நெடு வரைக் கவாஅன் பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார் 

174. முல்லை
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து, ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும் செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என, பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் செல்வேம்ஆதல் அறியாள், முல்லை 5நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து, காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து, பழங்கண் கொண்ட பசலை மேனியள், யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை 10ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள, ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள், நல் மணல் வியலிடை நடந்த சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?  

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் 

175. பாலை
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின், பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் 5வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண் தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து வருதும்' என்றனர் அன்றே தோழி! கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் 10ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி, நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், 15திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு மண் பயம் பூப்பப் பாஅய், தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?  

பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார்.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.