LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ?

தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ?

இயற்கை விவசாயி ரவிபாரதி என்பவர் “இன்றைய நிலைமை”  என்ற தலைப்பில் கீழ்காணும் அவருடைய அனுபவத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார். 

https://www.facebook.com/ravibharathi.ravibharathi.98/posts/2322904107939663?comment_id=2323049764591764&notif_id=1553165059070631&notif_t=feed_comment_reply


காலை ஐந்து மணிக்கே ஆரம்பித்தது
இருபது கட்டு(சுமார் 50-60 காய்)
ஒன்பது மணியானது
சந்தையில் விற்றது
கட்டு இருபது
மொத்தம் நானூறு
ஆள்கூலி முந்நூறு
பெட்ரோல் ,சுங்கம் நூறு
எனக்கு கூலியோ
மற்றும் எல்லாமே
(தானிக்கி தீனிக்கி சரியாப்போச்சு)

 

ஒரு கட்டில் ஐம்பது காய்  என்றால் , இருபது கட்டு என்றால் மொத்தம் 1000 காய். 

சந்தை விலை : ஒரு காய் - Rs.3/-

மொத்த சந்தைவிலை: Rs.3000/-

விற்பனை கூலி, போக்குவரத்து , இடையில் கமிஷன்  - Rs. 1/- என்று வைத்துக்கொண்டால், முதலீடு செய்துள்ள வியாபாரிக்கு வருமானம் Rs.1/- என்று வைத்துக்கொண்டால், விவசாயிக்கு Rs.1/- கிடைக்கவேண்டும். அதாவது மூன்றில் ஒரு பங்கு வியாபாரிக்கு, ஒரு பங்கு செலவு-கமிஷன், மீதி ஒரு பங்கு உற்பத்தி விலையாக விவசாயிக்கு கிடைத்திருக்கவேண்டும். அதாவது 1000 ரூபாய்.  ஆனால் கிடைப்பதோ நானூறு.  மேலே சொன்ன கணக்குப்படி இவருக்கு நானூறுக்கு பதில் ஆயிரம் கிடைத்திருந்தால் இவருக்கு செலவு போக 600 ரூயாய் கையில் வருமானமாக கிடைத்திருக்கும். 

இதற்கு கீழ்காணும் பின்னூட்டங்கள் வந்தன

 • இதுதான் இன்றைய உழவர் நிலை!
 • ஆடு மாடுக்கு வெட்டி போடுங்க எவனோ சம்பாதிக்க நம்மளா ஆளு
 • எல்லா செலவும் போக நூறு ரூவா மிச்சம்ன்னா கூட பரவால்ல.ஆனா இது கொடுமை.விலை இல்லாத காலத்தில் விற்பனையும் ண்டாங்க.20ஆடு,2மாடு எப்போதும் காட்டுல நிக்கட்டும்.விலை இல்லா நேரத்துல அதுங்க வயிறாற தின்னுட்டு போகட்டும்.எதுக்கு இந்த நாய் பொழப்பு.மத்தவங்க மாதிரி  உங்களுக்கு முருங்கைல எண்ணெய் எடுத்து அத நல்ல விலைக்கு வித்து காசு பார்க்கும் வித்தையும் தெரியாது.உடனே ஆடு மாடு வாங்கியார சந்தைக்கு கெளம்புங்க
 • இங்கு மூன்று காய் பத்து ரூபாய் ,அதுவும் உங்க காய்கள்ல பாதி அளவே நீளம் உடையது
 • பத்து ரூபாய் பெறாத அலைபேசியின் நெகிழி உறைகள் இருநூறு முந்நூறு என்று விற்கப்படும் தேசத்தில் இப்படித்தான் நடக்கும். சிந்திக்க இயலாத சமூகம் இருந்தென்ன மடிந்தென்ன!
 • பட்டணத்தில் செக்குரிட்டி வேலை வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல சம்பளம்.எத்தன விவசாயினால வருடம் ஒரு லட்சம் சம்பாதிக்கமுடியும் விவசாயத்தில
 • இங்கே சென்னையில் நான்கு முருங்கை இருபது ரூபாய் ங்க
 • இன்று 700 காய்கள் அறுவடை. 100 காய்கள் ₹2 என நேரடியாக விற்பனை. மீதி கடைக்கு ₹1 என கொடுத்து விட்டேன். உற்பத்தி அளவை குறைப்பது தான் ஒரே வழி. நேரடியாக விற்க முடியும் அளவுக்கு மட்டுமே உற்பத்தி.  இதுதான் தாரக மந்திரம்.
 • சவுதியில் 1 முருங்கைக் காய் கிட்டத்தட்ட 20 ரூபாய். அதுவும் இத்தனை செழிப்பாக, ஃப்ரெஷ்ஷாக இருக்காது. விவசாயிகளை, உற்பத்தியாளர்களை கண்டு கொள்ளாத தேசம் நாசம் ஆகும். இப்பொழு அது தான் நடந்து கொண்டு இருக்கிறது..!
 • விலையை விசாரித்தல்லவா பறித்திருக்கவேண்டும்?இல்லையேல் விட்டுவிடுங்கள்.மொதலுக்கு மொதலும்போயி மூனுதடவ வயித்தாலயும் போகவேண்டாம்.விவசாயம் சிலநேரம் சீட்டாடம்போல் சூது.(இயற்கை சீற்றங்கள்) பலநேரம் சதுரங்கம்போல் சாதுர்யம்.
 • முருங்கை காய்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வையுங்கள். Off season ல் பொடியாக்கி சந்தை படுத்த முயற்சி செய்து பாருங்கள்.இந்த பொடியை அனைத்து குழம்புகளிலும் பயன்படுத்தலாம் என படித்திருக்கிறேன். இதில் இட்லி பொடி செய்து பார்த்தேன். நல்ல சுவையாக உள்ளது. இந்த பொடியை சுடு சாணத்தில் நெய்யோடு கலந்து உண்ணும் போது சுவை அலாதிதான். சிறு சிறு அடியாக முன்னெடுத்து வைப்போம். 
  விற்க முடியாத காய்களை நறுக்கி காய வைத்து ள்ளேன். 
  வெற்றியை நோக்கிய பயணத்தில் 

 

இது உண்மையான நிலவரமா என்றால் ஆம்.  இதுதான் தமிழ்நாட்டின் சிறு, குறு, விவசாயிகளின் இன்றைய நிலைமை.  சந்தையில் விற்பதற்கு அவர்கள் இயற்கையுடனும், விவசாயத்தின் பல்வேறு சிக்கல்களுடனும் போராடி வெல்வதை விடக் கடினமாக உள்ளது.. அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரமம், செலவிடும் நேரம் , வரும் வருமானம், என்று எதுவும் நியாயமாக இல்லை.  விவசாயம் என்பது ஒரு லாபகரமான தொழிலாக இல்லாத நிலையை இன்றைய தமிழ்நாட்டின் இடைத்தரகு பேராசை சந்தை வியாபாரம் ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையை  மாற்ற முடியுமா என்றால், முடியும் என்பதே பதிலாக இருக்கும்.  காரணம், எல்லா பிரச்சினைகளுக்குமே தீர்வு உள்ளது.  தீர்வு இல்லாமல் பிரச்சினைகள் இல்லை.

என்னதான் தீர்வு:

இதற்குத் தொழில்நுட்ப முறையை அறிமுகம் செய்யவேண்டும்.  எந்த பகுதியில் என்ன விளைகிறது.. அடுத்த ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், இரு மாதத்தில், மூன்று  மாதத்தில், ஆறு மாதத்தில் என்ன அறுவடைக்கு வருகிறது என்பதைத் தெரிவிக்க ஒரு வசதி வேண்டும்.  அவர்களுடைய பொருள் சந்தையில் எவ்வளவு விற்கப்படுகிறது என்று அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.  அதில் குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்கு விலை கிடைக்கப்படவேண்டும்.  விற்கப் போகும் முன்பே இன்றைய ஒரு முருங்கைக்காய் விலை என்ன வரும் என்பதை விவசாயிக்கு (உற்பத்தியாளர்) தெரிவிக்கும் முறை வரவேண்டும்.  நான்கு முருங்கைக்காய் உற்பத்தியாளரும், நாற்பதுக் காய் உற்பத்தியாளரும், நானூறு காய், நாலாயிரம் காய் உற்பத்தியாளரும் என்ன விலை என்பதை அறிந்துகொண்டு சந்தையில் வந்து வைத்துவிட்டு உரிய விலை பெறுவதும், அல்லது அவர்கள் வங்கிக்கணக்கில் அதற்கான பணம் போய்ச் சேருவதும் உறுதிப்படுத்தும் ஒரு வலிமையான சந்தையை உருவாக்கவேண்டியது அவசியம்.  என்ன விலைக்கு மக்களுக்குச் சந்தையில் விற்கப்படுகிறதோ அதையொட்டிய ஒரு சதவீதம் உற்பத்தி விலையாக விவசாயிக்குப் போவதற்கு வெளிப்படையான சந்தையை ஏற்படுத்துவதற்குத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதே நாம் சிந்திக்கவேண்டிய ஒன்று.

 

இது தொழில்நுட்பம் மூலம் மட்டுமே சாத்தியம்.  சிறு வணிகம் முதல் , பெரிய வணிகம் வரை அனைத்து விவசாயப் பொருள்களும் முறைப்படுத்தப்பட்ட வழியில் விற்கவும் , இடைத்தரகு பேராசை சந்தை வியாபாரம் நீக்கப்பட்டு இன்றைய சூழல் மாற்றியமைக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

இதைத் தீர்ப்பதற்கு உரியத் திட்ட வரைவை, தீர்வு சிந்தனைகளை, வரைபடங்களைக் கீழே பின்னூட்டத்தில் பகிரவும். விரைவில் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தி இதற்கு என்ன தீர்வு என்பது குறித்துக் கலந்துரையாடித் தீர்வுக்கான ஏற்பாடு செய்வோம். 

 

 

-ச.பார்த்தசாரதி

by Swathi   on 21 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..
நிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்? நிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்?
மரவித்தைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு!! மரவித்தைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு!!
மானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா !! மானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா !!
மட்டை அரிசி (புழுதிபுரட்டி) மட்டை அரிசி (புழுதிபுரட்டி)
விவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரங்கள், Part-2 விவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரங்கள், Part-2
இந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1 இந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1
விவசாயம் பேசுவோம்- திரு.விக்ரம் ( Vivasayam pesuvom -Vigram) - Part 2 விவசாயம் பேசுவோம்- திரு.விக்ரம் ( Vivasayam pesuvom -Vigram) - Part 2
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.