LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

ஐங்குறுநூறு-10

 

46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர்
தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது
மாற்றருந் தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே. 451
வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்
கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றே
பகைவெங் காதலர் திறைதரு முயற்சி
மெல்தோள் ஆய்கவின் மறையப்
பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே. 452
அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண்
கார்தொடங் கின்றால் காலை அதனால்
நீர்தொடங் கினவால் நெடுங்கணவர் 
தேர்தொடங் கின்றால் நம்வயி நானே. 453
தளவின் பைங்கொடி தழீஇப் பையென
நிலவின் அன்ன நேரும்பு பேணிக்
கார்நய்ந்து எய்தும் முல்லை அவர்
தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே. 454
அரசுபகை தணிய முரசுபடச் சினை இ
ஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றே
அளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்து
மின்னிழை ஞெகிழச் சாஅய்த்
தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே. 455
உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்
பகல்மதி உருவைல் பகன்றை மாமலர்
வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும்
அரும்பனி அளை இய கூதிர்
ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே. 456
பெய்பன் நலிய உய்தல்செல் லாது
குருகினம் நரலும் பிரிவருங் காலைத்
த்றந்தமை கல்லார் காதலர்
மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே. 457
துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்
அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென
மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே. 458
மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்
புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்
அரண்க டந்த சீர்கெழு தானை
வெல்போர் வேந்தனொடு சென்றா
நல்வய லூரன் நறுந்தண் மார்பே. 459
பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்
இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா
ததை இலை வாழை முழுமுதல் அசைய
இன்னா வாடையும் அலைக்கும்
என்ஆகு வன்கொல் அளியென் யானே. 460
47. தோழி வற்புறுத்த பத்து
வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக்
கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே
இனையல் வாழி தோழி எனையதூஉம்
நின்துறந்து அமைகுவர் அல்லர்
வெற்றி வேந்தன் பாசறை யோரே. 461
எதில பெய்ம்மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி
எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின்
தகையெழில் வாட்டுநர் அல்லர்
முகையவிழ் புறவுஇன் நாடிறந் தோரே. 462
புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்
நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய
வாராது அமையலோ இலரே நேரார்
நாடுபடு நன்கலம் தரீஇயர்
நீடினர் தோழிநம் காத லோரே. 463
கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென
இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர்நின்
நல்தோள் மருவரற்கு உலமரு வோரே. 464
நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர்
கார்செய் கானம் பிற்படக் கடைஇ
மயங்கு மலர் அகலம் நீஇனிது முயங்க
வருவர் வாழி தோழி
செருவெம் குருசில் தணிந்தனன் பகையே. 465
வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு
அண்ணல் யானை அரசுவிடுத்து இனியே
எண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல்
காமர் சுடர்நுதல் விளங்கும்
தேமொழி அரிவை தெளிந்திசின் யானே. 466
புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து
இனையல் வாழியோ இகுளை வினைவயின்
சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது
நம்மினும் விரையும் என்ப
வெம்முரண் யானை விறல்போர் வேந்தே. 467
வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக்
கார்தொடங் கின்றே காலை இனிநின்
நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக
வருவர் இன்றுநம் காத லோரே. 468
பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு
அம்கண் இருவிசும்பு அதிர ஏறொடு
பெயல்தொடங் கின்றே வானம்
காண்குவம் வம்மோ பூங்க ணோயே. 469
இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்
அரும்பனி அளை இய அற்சிரக் காலை
உள்ளார் காதல ராயின் ஒள்ளிழை
சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோநின் மாமைக் கவினே. 470
48. பாணன் பத்து
எவ்வளை நெகிழ மேனி வாடப்
பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத்
துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்
அதுமற்று உண்ர்ந்தனை போலாய்
இன்னும் வருதி என்அவர் தகவே. 471
கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்துநின் றதுவே
எம்மின் உணரா ராயினும் தம்வயின்
பொய்படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே. 472
பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச்
செலவுநீ நய்னதனை யாயின் மன்ற
இன்னா அரும்படர் எம்வயின் செய்த
பொய்வ லாளர் போலக்
கைவல் பாணஎம் மறாவா தீமே. 473
மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்
செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு
கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே. 474
நொடிநிலை கலங்க வாடிய தோளும்
வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப்
பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன்
எம்வெம் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான் பேரன் பினனே. 475
கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப
பருவம் செய்தன பைங்கொடி முல்லை
பல்லான் கோவலர் படலைக் கூட்டும்
அன்புஇல் மாலையும் உடைத்தோ
வன்புறை பாண அவர்சென்ற நாடே. 476
பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச்
சிறுவரைத் தங்குவை யாயின்
காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே. 477
நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து
யாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச்
சொல்லியது உரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே. 478
சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய
நாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும்
அரும்பனி கலந்த அருளில் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்
பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே. 479
நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு
நீயும் குருசிலை யல்லை மாதோ
நின்வெம் காதலி தனிமனைப் புலம்பி
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டு மருளா தோயே. 480
49. தேர் வியங்கொண்ட பத்து
சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்
சேயிழை மாதரை உள்ளி நோய்விட
முள் இட்டு ஊர்மதி வலவநின்
புன்இயல் கலிமாப் பூண்ட தேரே. 481
தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக
வல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல்
வென்றடு தானை வேந்தனொடு
நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே. 482
ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே
வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே
முன்னுறக் கடவுமதி பாக
நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே. 483
வேனில் நீங்கக் கார்மழை தலைஇக்
காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்து
கடியக் கடவுமதி பாக
நெடிய நீடினம் நேரிழை மறந்தே. 484
அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
மாருண்டு உகளும் மலரணிப் புறவே. 485
பெரும்புன் மாலை ஆனது நினைஇ
அரும்படர் உழைத்தல் யாவது என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண
வன்புதெரிந்து ஊர்மதி வலவநின்
புள்ளியல் கலைமாப் பூண்டதேரே. 486
இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறிதொடி உள்ளம் உவப்ப
மதியுடை வலவ ஏமதி தேரே. 487
கருவி வானம் பெயல் தொடங்கின்றே
பெருவிறல் காதலி கருதும் பொழுதே
விரிஉளை நன்மாப் பூட்டிப்
பருவரல் தீரக் கடவுமதி தேரெ. 488
அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப
மெண்புல முல்லை மலரும்மாலைப்
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப
நுண்புரி வண்கயிறு இயக்கிநின்
வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. 489
அம்தீம் கிளவி தான்தர எம்வயின்
வந்தன்று மாதோ காரே ஆவயின்
ஆய்த்தொடி அரும்படர் தீர
ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. 490
50. வரவுச் சிரப்புரைத்த பத்து
காரெதிர் காலையாம் ஓவின்று நலிய
நொந்துநொந்து உயவும் உள்ளமொடு
வம்தனெம் மடந்தைநின் ஏர்தர விரைந்தே. 491
நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மாமருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே. 492
ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க
மாதர் மான்பிணை மறியொடு மறுகக்
கார்தொடங் கின்றே காலை
நேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே. 493
வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத்
தண்கமழ் புறவின் முல்லிஅ மலர
இன்புறுத் தன்று பொழுதே
நின்குறை வாய்த்தனம் திர்கினிப் படரே. 494
செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப்
புலம்தீர்ந்து இனிய வாயின புறவே
பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய
உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு
முளெயிற்று அரிவையாம் வந்த ஆறே. 495
மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப
மாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப்
பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர்
தோள்துணை யாக வந்தனர்
போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே. 496
குறும்பல் கோதை கொன்றை மலர
நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர
மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே
பேரியல் அரிவைநின் உள்ளிப்
போர்வெம் குருசில் வந்த மாறே. 497
தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன
நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன
வேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென
விரைசெலல் நெடுந்தேர் கடைஇ
வரையக நாடன் வந்த மாறே. 498
பிடவம் மலரத் தளவம் நனையக்
கார்கவின் கொண்ட கானம் காணின்
வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாது
வந்தனர் ஆல்நம் காதலர்
அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே. 499
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்
குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத்
தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர்
வியன்நெடும் பாசறை நீடிய
வயமான் தோன்றல்நீ வந்த மாறே. 500
ஐங்குறுநூறு முற்றிற்று.

46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர்தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவதுமாற்றருந் தானை நோக்கிஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே. 451
வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றேபகைவெங் காதலர் திறைதரு முயற்சிமெல்தோள் ஆய்கவின் மறையப்பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே. 452
அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண்கார்தொடங் கின்றால் காலை அதனால்நீர்தொடங் கினவால் நெடுங்கணவர் தேர்தொடங் கின்றால் நம்வயி நானே. 453
தளவின் பைங்கொடி தழீஇப் பையெனநிலவின் அன்ன நேரும்பு பேணிக்கார்நய்ந்து எய்தும் முல்லை அவர்தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே. 454
அரசுபகை தணிய முரசுபடச் சினை இஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றேஅளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்துமின்னிழை ஞெகிழச் சாஅய்த்தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே. 455
உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்பகல்மதி உருவைல் பகன்றை மாமலர்வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும்அரும்பனி அளை இய கூதிர்ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே. 456
பெய்பன் நலிய உய்தல்செல் லாதுகுருகினம் நரலும் பிரிவருங் காலைத்த்றந்தமை கல்லார் காதலர்மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே. 457
துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர்பாணர் பெருமகன் பிரிந்தெனமாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே. 458
மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்அரண்க டந்த சீர்கெழு தானைவெல்போர் வேந்தனொடு சென்றாநல்வய லூரன் நறுந்தண் மார்பே. 459
பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்இருங்கலி வெற்பன் தூதும் தோன்றாததை இலை வாழை முழுமுதல் அசையஇன்னா வாடையும் அலைக்கும்என்ஆகு வன்கொல் அளியென் யானே. 460

47. தோழி வற்புறுத்த பத்து
வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக்கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றேஇனையல் வாழி தோழி எனையதூஉம்நின்துறந்து அமைகுவர் அல்லர்வெற்றி வேந்தன் பாசறை யோரே. 461
எதில பெய்ம்மழை காரென மயங்கியபேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கிஎவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின்தகையெழில் வாட்டுநர் அல்லர்முகையவிழ் புறவுஇன் நாடிறந் தோரே. 462
புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்நலமிகு கூந்தல் தகைகொளப் புனையவாராது அமையலோ இலரே நேரார்நாடுபடு நன்கலம் தரீஇயர்நீடினர் தோழிநம் காத லோரே. 463
கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னெனஇவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும்அற்சிரம் மறக்குநர் அல்லர்நின்நல்தோள் மருவரற்கு உலமரு வோரே. 464
நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர்கார்செய் கானம் பிற்படக் கடைஇமயங்கு மலர் அகலம் நீஇனிது முயங்கவருவர் வாழி தோழிசெருவெம் குருசில் தணிந்தனன் பகையே. 465
வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டுஅண்ணல் யானை அரசுவிடுத்து இனியேஎண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல்காமர் சுடர்நுதல் விளங்கும்தேமொழி அரிவை தெளிந்திசின் யானே. 466
புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்துஇனையல் வாழியோ இகுளை வினைவயின்சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காதுநம்மினும் விரையும் என்பவெம்முரண் யானை விறல்போர் வேந்தே. 467
வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக்கார்தொடங் கின்றே காலை இனிநின்நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாகவருவர் இன்றுநம் காத லோரே. 468
பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்புஅம்கண் இருவிசும்பு அதிர ஏறொடுபெயல்தொடங் கின்றே வானம்காண்குவம் வம்மோ பூங்க ணோயே. 469
இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்அரும்பனி அளை இய அற்சிரக் காலைஉள்ளார் காதல ராயின் ஒள்ளிழைசிறப்பொடு விளங்கிய காட்சிமறக்க விடுமோநின் மாமைக் கவினே. 470

48. பாணன் பத்து
எவ்வளை நெகிழ மேனி வாடப்பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத்துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்அதுமற்று உண்ர்ந்தனை போலாய்இன்னும் வருதி என்அவர் தகவே. 471
கைவல் சீறியாழ் பாண நுமரேசெய்த பருவம் வந்துநின் றதுவேஎம்மின் உணரா ராயினும் தம்வயின்பொய்படு கிளவி நாணலும்எய்யார் ஆகுதல் நோகோ யானே. 472
பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச்செலவுநீ நய்னதனை யாயின் மன்றஇன்னா அரும்படர் எம்வயின் செய்தபொய்வ லாளர் போலக்கைவல் பாணஎம் மறாவா தீமே. 473
மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடுகதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச்சென்றவர்த் தருகுவல் என்னும்நன்றால் அம்ம பாணனது அறிவே. 474
நொடிநிலை கலங்க வாடிய தோளும்வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப்பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன்எம்வெம் காதலொடு பிரிந்தோர்தம்மோன் போலான் பேரன் பினனே. 475
கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்பபருவம் செய்தன பைங்கொடி முல்லைபல்லான் கோவலர் படலைக் கூட்டும்அன்புஇல் மாலையும் உடைத்தோவன்புறை பாண அவர்சென்ற நாடே. 476
பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள்கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச்சிறுவரைத் தங்குவை யாயின்காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே. 477
நீடினம் என்று கொடுமை தூற்றிவாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்துயாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச்சொல்லியது உரைமதி நீயேமுல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே. 478
சொல்லுமதி மாண சொல்லுதோறு இனியநாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும்அரும்பனி கலந்த அருளில் வாடைதனிமை எள்ளும் பொழுதில்பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே. 479
நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்குநீயும் குருசிலை யல்லை மாதோநின்வெம் காதலி தனிமனைப் புலம்பிஈரிதழ் உண்கண் உகுத்தபூசல் கேட்டு மருளா தோயே. 480

49. தேர் வியங்கொண்ட பத்து
சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்சேயிழை மாதரை உள்ளி நோய்விடமுள் இட்டு ஊர்மதி வலவநின்புன்இயல் கலிமாப் பூண்ட தேரே. 481
தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாகவல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல்வென்றடு தானை வேந்தனொடுநாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே. 482
ஆறுவனப்பு எய்த அலர்தா யினவேவேந்துவிட் டனனே மாவிரைந் தனவேமுன்னுறக் கடவுமதி பாகநன்னுதல் அரிவை தன்னலம் பெறவே. 483
வேனில் நீங்கக் கார்மழை தலைஇக்காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்துகடியக் கடவுமதி பாகநெடிய நீடினம் நேரிழை மறந்தே. 484
அரும்படர் அவலம் அவளும் தீரப்பெருந்தோள் நலம்வர யாமும் முயங்கஏமதி வலவ தேரேமாருண்டு உகளும் மலரணிப் புறவே. 485
பெரும்புன் மாலை ஆனது நினைஇஅரும்படர் உழைத்தல் யாவது என்றும்புல்லி ஆற்றாப் புரையோள் காணவன்புதெரிந்து ஊர்மதி வலவநின்புள்ளியல் கலைமாப் பூண்டதேரே. 486
இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதேசெறிதொடி உள்ளம் உவப்பமதியுடை வலவ ஏமதி தேரே. 487
கருவி வானம் பெயல் தொடங்கின்றேபெருவிறல் காதலி கருதும் பொழுதேவிரிஉளை நன்மாப் பூட்டிப்பருவரல் தீரக் கடவுமதி தேரெ. 488
அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்பமெண்புல முல்லை மலரும்மாலைப்பையுள் நெஞ்சின் தையல் உவப்பநுண்புரி வண்கயிறு இயக்கிநின்வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. 489
அம்தீம் கிளவி தான்தர எம்வயின்வந்தன்று மாதோ காரே ஆவயின்ஆய்த்தொடி அரும்படர் தீரஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. 490

50. வரவுச் சிரப்புரைத்த பத்து
காரெதிர் காலையாம் ஓவின்று நலியநொந்துநொந்து உயவும் உள்ளமொடுவம்தனெம் மடந்தைநின் ஏர்தர விரைந்தே. 491
நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்நன்னுதல் நாறும் முல்லை மலரநின்னே போல மாமருண்டு நோக்கநின்னே உள்ளி வந்தனென்ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே. 492
ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்கமாதர் மான்பிணை மறியொடு மறுகக்கார்தொடங் கின்றே காலைநேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே. 493
வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத்தண்கமழ் புறவின் முல்லிஅ மலரஇன்புறுத் தன்று பொழுதேநின்குறை வாய்த்தனம் திர்கினிப் படரே. 494
செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப்புலம்தீர்ந்து இனிய வாயின புறவேபின்னிருங் கூந்தல் நன்னலம் புனையஉள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடுமுளெயிற்று அரிவையாம் வந்த ஆறே. 495
மாபுதல் சேர வரகு இணர் சிறப்பமாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப்பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர்தோள்துணை யாக வந்தனர்போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே. 496
குறும்பல் கோதை கொன்றை மலரநெடுஞ்செம் புற்றம் ஈயல் பகரமாபசி மறுப்பக் கார்தொடங் கின்றேபேரியல் அரிவைநின் உள்ளிப்போர்வெம் குருசில் வந்த மாறே. 497
தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றனநீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றனவேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டெனவிரைசெலல் நெடுந்தேர் கடைஇவரையக நாடன் வந்த மாறே. 498
பிடவம் மலரத் தளவம் நனையக்கார்கவின் கொண்ட கானம் காணின்வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாதுவந்தனர் ஆல்நம் காதலர்அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே. 499
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத்தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர்வியன்நெடும் பாசறை நீடியவயமான் தோன்றல்நீ வந்த மாறே. 500

ஐங்குறுநூறு முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.