LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- வயிறு(Stomach)

குடல் புண்(Alsar) பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!!

இன்றைய பரபரப்பான உலகில் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் புண் நோய். இந்த நோயின் அறிகுறிகள், நோய் தாக்குவதற்கான காரணங்கள், குடல் புண்னின் வகைகள், நோயின் பாதிப்புகள் என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.


குடல் புண்ணின்(Alsar) அறிகுறிகள் : 


வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கும் குடல் புண் நோய் இருக்கலாம்.


குடல் புண்(Alsar) என்றால் என்ன?


இரைப்பையும் சிறுகுடலும் இணைந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.


குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.


குடல் புண்(Alsar) ஏற்படுவதற்கான காரணங்கள் :


குடல் புண் ஏற்படுவதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை வரையறுக்க படவில்லை என்றாலும், புகை பிடித்தல், புகையிலையை வாயில் போட்டு சுவைத்தல், மது அருந்துதல், மற்றும் சில வகை மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல். 


குடல் புண்(Alsar) வகைகள் : 


1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .


2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.


குடல் புண்(Alsar) இருப்பதை அறிந்து கொள்ளவது எப்படி ?


காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.


வயிற்று பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.


சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.


ஒரு நபர் சாப்பிடும் அளவுக்கேற்ப இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.


சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.


குடல் புண்ணுக்கு(Alsar) மருத்துவம் செய்யாமல் விட்டால் :


குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.


இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால்

பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.


சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது..


குடல் புண்ணுக்கு(Alsar) மருத்துவம் :


குடல் புண்ணுக்கு மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும்.  


குடல் புண்(Alsar) உள்ளவர்கள் செய்ய வேண்டியவை :


1. குறைந்த உணவை அடிக்கடி சாப்பிட வேண்டும்


2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


3. வாழைப் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.


4. தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.


5. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.


6. இருக்கமாக உடை அணியக் கூடாது.


7. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.


8. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.


9. மருத்துவர் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.


குடல் புண்(Alsar) உள்ளவர்கள் செய்யக்கூடாதவை :


1. புகைபிடிக்கக் கூடாது.


2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.


3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது.


4. நடு இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.


5. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல்

ஏற்படலாம்.


6. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.


7. அவசரப்படக் கூடாது.


8. அதிகமாக கவலைப்படக் கூடாது.

by Swathi   on 11 Sep 2013  14 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3 இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3
கருத்துகள்
29-Aug-2019 17:28:11 senthilkumar said : Report Abuse
மிகவும் சிறப்பு. முடிந்தால் விளக்கவும்.எனக்கு சளி வந்தால் வெள்ளையாக மற்றும் சாப்பிட்டவுடன் வருகிறது. இது, தொண்டை புண்ணா? குடல் புண்ணா? அல்சரா?
 
28-Dec-2016 07:10:03 Thennarasan said : Report Abuse
Sri vankam enaku kudapun eruthal udal melinthu ullathu athumatum illam entha mathri food sapdinum.? Nan night worke selvthal sleeping varam irupatharku iravil tee 3 velai sapada vendiya nilai ullathu morning
 
30-Oct-2016 06:43:54 sasikala said : Report Abuse
எனக்கு ரொம்பநல்ல குடல்புண் உள்ளது என் உடல் மெலிந்த நிலையில் உள்ளன எப்படி சரிசெய்வது எனக்கு மருதவக்குறிப்பு தாருங்கள்
 
09-Oct-2016 07:46:28 சிவபாலன் said : Report Abuse
எனக்கு குடல் புண் நோய் உள்ளது மற்றும் மலம் கழிக்கும்போது ரத்தம் மற்றும் சீழ் வெளியேறுகிறது.இதற்கு என்ன செய்வது?
 
12-Jul-2016 01:52:00 selvarani said : Report Abuse
yes
 
10-Apr-2016 07:20:59 V.KOLANJINATHAN. said : Report Abuse
It is good information,it is used Alsar people.Thanks
 
16-Oct-2015 12:35:07 krishnaswamy said : Report Abuse
இது மிகவம் பயன் உள்ள கரத்து நன்றி
 
05-Aug-2015 07:19:25 nandhakumar.s said : Report Abuse
Sir enaku vaithuku right side vali irukuthu enna problem a iruku pls sollunga sir
 
13-Apr-2015 15:22:26 pranesh said : Report Abuse
டியர் சார் அல்சர் குணமாக என்ன பூட் எடுக்கலாம் லெமன் ஜூஸ் குடிக்கலாம கொஞ்சம் தேட்டில் சொலுங்க சார் plz
 
08-Jan-2015 23:36:25 siva said : Report Abuse
alsar vantha hans potta enna aagum
 
25-Oct-2014 06:44:59 Manikandan said : Report Abuse
மிக்க நன்றி
 
27-Oct-2013 05:19:03 suga said : Report Abuse
குட் டிப்ஸ் இன்னும் விரிவாக அல்சரை பற்றி sollugal
 
21-Oct-2013 02:33:13 ர.gurumurthy said : Report Abuse
வெரி குட் உசெபிஉல் டு society
 
12-Sep-2013 09:07:17 thi.ரவி kumar said : Report Abuse
தேங்க்ஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.