LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அப்புசாமி

நானா பைத்தியம்?

 

பிற்பகல் மூன்று மணி. அலாரம், ‘கிர்ர்…’ என்று அடித்தது. அதைத் தொடர்ந்து, “ஊம்…போதும் தூங்கினது. வேக்கப்! இரண்டு விஷயம்! மத்தியான்னத் தூக்கம் ஆயுளைக் குறைக்கும். இரண்டாவது, வேலை இருக்கிறது,” என்று சீதாப்பாட்டி, காப்பி ஒரு கையிலும் அலாரம் டைம்பீஸ் ஒரு கையிலுமாக, இதுவரை எந்தப் பக்தனுக்கும் தோன்றியிராத ஒருவகைத் தெய்வம் மாதிரி தன் முது கணவரின் முன் வந்து காட்சி அளித்தாள்.
அப்புசாமி கண்ணைத் திறக்க விரும்பவில்லை. ஆனால் சீதாப்பாட்டி விட்டுவிடத் தயாராக இல்லை.
கணவரை எழுப்பி உட்கார வைத்தாள். “பி…பிரிஸ்க்! அரைப் பைத்தியம் மாதிரி ஜிப்பாவைத் திருப்பிப் போட்டுக்கொண்டு, முக்கால் பைத்தியம் மாதிரி முதுகில் ஒரு கிழிசல், முழுப் பைத்தியம் மாதிரி தாடி மீசை, சே, சே!”
அப்புசாமி செறுமினார் : “நீ தான் பைத்தியம். இந்த ஊர் பூராவும் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வா, டாக்ஸி வைத்துக்கொண்டு, எண்ணி ஒரே ஒரு எண்பத்திரண்டு வயசுக்கிழவன், இந்த வெய்யில் வேளையில் விழித்திருக்கிறானா பார். நான் இப்போது எழுந்திருந்து யாரை சம்ஹாரம் செய்ய வேண்டும்? என்ன வேலை வைத்திருக்கிறாய்?”
“லட்சணமாய் வாங்கி வந்திருக்கிறீர்களே சாத்துகுடிப் பாம் ‘வொர்ஸ்ட் ஸ்ட·ப்!’ முதலில் போய் பழத்தை வாபஸ் செய்துவிட்டு வாருங்கள்!”
“என்னது?” என்று அப்புசாமி இடி விழுந்தவர் போலானார். “முந்தா நாள் வாங்கி வந்த பழத்தை இப்போது கொடுத்தால் எவனாவது வாங்கிக் கொள்வானா?”
“நீங்கள் பைத்தியக்காரத்தனமாய் வாங்கி வந்தால்? சச்சென் எல்டர்லி மேன்? ஏஜ் எண்பத்திரண்டாயிற்று! ஒரு சுளையை உறித்துத் தின்றுவிட்டு வாங்கக் கூடாது வரவர மூளை ரொம்ப மழுங்கி வருகிறது.”
“உன்னுடைய மூளைதான் ‘பிளாரசன்ட்’ கலர் மாதிரி டாலடிக்கிறதோ? நீ போய் வாங்கி வருவது மார்க்கெட்டில்?”
“உங்கள் மாதிரி ஒரு பித்துக்குளியை, ஏமாளிளை, அனுப்புவதற்கு, இனிமேல் நானே போகவேண்டியதுதான். தட்டீஸ் தி ஒன்லி வே. அன்றைக்கு அப்படித்தான் பைனாப்பிள் வாங்கிவரச் சொன்னால் ஆப்பிளை வாங்கி வந்து நிற்கிறீர்கள், கிரேக்தனமாய்!”
“மறுபடியும் அந்த வார்த்தையைச் சொல்லாதே!” அடிபட்ட ஆட்டோ ரிக்ஷாமாதிரி வீறிட்டார் அப்புசாமி.
ஆனால் சீதாலட்சுமிப் பாட்டியோ, “ஹண்ட்ரட் அண்ட் ஒன் டைம்ஸ் சொல்வேன். பைத்தியம், பைத்தியம், பைத்தியம்! பித்துக்குளித்தனம், பித்துக்குளித்தனம்! பித்துக்குளித்தனம்! என்ன செய்துவிடுவீர்கள்?”
அப்புசாமி பெஞ்சியிலிருந்து எழுந்தார். “பிற்பாடு ரொம்ப வருத்தப்படுவாய்,” என்றார்.
“சரி, சரி. முதலில் பழத்தை ‘எக்ஸ்ச் சேஞ்ச்’ பண்ணிக்கொண்டு வாருங்கள்.புளிப்பு ஊரைத் தூக்குகிறது. காரியத்தில் ஜீரோ, சவுடாலில் ஹீரோ!”
அப்புசாமி அந்தப் பிராசத்தைத் தாங்கொணாதவராகத் துன்பத்தால் சில வினாடி துடித்துவிட்டு, “கொண்டா சாத்துக்குடியை! இனிப் பார் உன் குடியை!” என்று பழங்களை வாங்கிக்கொண்டு விறுவிறு என்று கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்தியை நோக்கி நடந்தார்.
“பைத்தியம் என்று வாய்க்கு வாய் சொன்னாய் அல்லவா? வேண்டுமென்றே இதோ இப்போதே போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டு உனக்கு அதைப் ‘போன்’ மூலம் தெரிவித்து அலற வைக்கிறேன்! ‘ஏ, சீதா லட்சுமி என்ற மஞ்சள் பிசாசே, சுடுகணை ஏவும் படுபடு கிழவியே, பைத்தியம் என்று என்னைப் பழி சொல் புகன்றனை? பார், பார், நீ படப்போகிற அவதியைப் பார்! உன் கணவனை இனி நீ மறந்தும் கூடப் பைத்தியம் என்று வாய் திறக்காதபடி செய்கிறேன் பார்.’
கீழ்ப்பாக்கம் உள நோய் விடுதியின் நுழை வாசலில், பதினொன்றேகால் புளிப்புச் சாத்துக்குடிகள் அடங்கிய சற்றே அழுக்கான பையுடன் அப்புசாமி பிரவேசித்தார்.
வாசலில் இருந்த காவல்காரன், “உஸ்ஸ்…இருங்கள் சார்? யாரைப் பார்க்க வேண்டும். என்னவோ நெடுகப் போகிறீர்களே?” என்றான்.
“ஓ! நீ சுவரோரமாக நின்றுகொண்டிருந்ததால் தெரியவில்லை. ஆமாம், இங்கே அட்மிஷன் முறை எப்படி?” என்று வினவினார் காவல்காரனை.
“முறை என்னா முறை? பைத்தியம் புடிச்சிருந்தாக் கொண்டுவந்து சேர்க்கறாங்க. பைத்தியம் சொஸ்தமாயிட்டாக் கூட்டிப் போயிடறாங்க. ஏன், யாரையாச்சும் சேர்க்க வேண்டுமா?”
“ஆமாம்.”
“இட்டாந்திருக்கீங்களா? இட்டாரப் போறீங்களா?”
“இட்டாந்த மாதிரிதான்.” அப்புசாமியின் உதடுகள் முறுவலித்தன. “அட்மிஷன் கிடைக்க என்ன செய்ய வேண்டும். யாரைப்பிடிக்க வேண்டும்?”
“யாரையும் பிடிக்க வேண்டாம். உமக்குப் பைத்தியம் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்,” என்றான் காவல்காரன்.
சரி சரி. எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. யாரைப் போய் பார்க்க வேண்டும்?”
எனக்கென்ன பைத்தியமாய்யா? போய்யா உன் வேலையை பார்த்துக் கொண்டு.”
அப்புசாமிக்கு எப்படியும் விவரம் தேவையாயிருந்தது. எந்த ஆஸ்பத்திரிக்கும் ஒரு சூப்பரெண்ட் என்பவர் இருப்பார் என்ற ஊக்கத்தில், “சூப்பரெண்ட் ரூம் எது? அதை மட்டும் சொல்லி விடு. அப்புறம் ஓடியே போய்விடுகிறேன்,” என்றார்.
“அவர் ‘ரெளண்ட்’ போயிருக்கிறார். வர நேரமாகும்.”
“ரெளண்ட் போயிருந்தாலும் சரி. சதுரம் போயிருந்தாலும் சரி. நான் அவரைக் கட்டாயம் பார்த்தாக வேண்டும். ரூம் எங்கே?”
“என்ன உபத்திரவம் ஐயா, கழுத்தைப் பிடித்துத் தள்ள முடியாது. கெளரவமாக அங்கவஸ்திரம் போட்டிருக்கிறாய்?” என்று முணுமுணுத்த காவல்காரனின் முகம் அடுத்தகணம் பிரகாசித்தது. “அதோய்யா. சூப்பரெண்ட்டே வந்துவிட்டார்,” என்று தூரத்தில் வந்து கொண்டிருந்தவரைக் காட்டி, “அதோ, அவர் பின்னாலேயே போனீர்களானால், அதுதான் சூபரெண்ட் அறை,” என்றான்.
அப்புசாமி வயசை மறந்து, பையிலிருந்த சாத்துக்குடிப் பழத்தை மறந்து வேகமாக ஓடினார். அவர் பின்னாடியே இன்னொரு ஆள், “அண்ணா! அண்ணா! சாத்துக்குடி! சாத்துக்குடி குண்டு போட்டுட்டு ஓடிறியே? இந்தா, இந்தா!” என்று ஓடி வந்தான். அப்புசாமியின் கைப்பையிலிருந்து எகிறி விழந்த சாத்துக்குடிப்பழம் இரண்டை, பொறுப்புமிக்க பைத்தியம் ஒன்று பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தது. அப்புசாமி ‘தாங்க்ஸ்!’ என்று சொல்லிப் பெற்றுக் கொண்டார்.
“தாங்க்ஸ் எல்லாம் இல்லை-அப்புறம் திருப்பிக் கொடுத்துட வேண்டும். என்ன?” என்று சொல்லிவிட்டு அந்தப் பைத்தியம் நகர்ந்தது.
அப்புசாமி, சூபரெண்டு அறைக்குள் தயங்கித் தயங்கி நுழைந்தார்.
“யார் நீங்கள்? பேஷண்ட் யாரையேனும் பார்க்க வந்திருக்கிறீர்களா?” என்று சூபரெண்டு விசாரித்தார்.
“இல்லை. ஹிஹி!” என்றார் அப்புசாமி. “ஒரு பர்ஷனல் விஷயத்தில் எனக்குத் தாங்கள் உதவி வேண்டும் என்றார்.”
“என்ன உதவி?”
“என்னை இங்கே ‘அட்மிட்’ செய்து கொள்ள வேண்டும்.” என்றார் அப்புசாமி.
“நீங்கள் நல்ல சுவாதீனமான புத்தி உடையவர் மாதிரி தோன்றுகிறீர்களே?”
“உண்மைதான். இருந்தாலும், தயவுசெய்து என்னைப் பைத்தியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
சூபரெண்ட் சிரித்துக் கொண்டார். அப்புசாமியைக் கண்களால் ஆராய்ந்தார். பிறகு, “அட்மிஷனுக்கு முன் சோதிக்கச் சில கேள்விகள் கேட்போம். உங்களையும் அது மாதிரிக் கேட்கிறேன். உங்கள் பெயர் என்ன?”
அப்புசாமி ஒருகணம் யோசித்தார். “ஒருகால் பெயரைச் சரியாகச் சொன்னால் ‘அட்மிஷன்’ கிடைக்காமல் போய்விடுமோ” என்று எண்ணிக் கொண்டார். பிறகு, “என் பெயர், கும்கும் கும்மா குப்புசாமி,” என்றார்.
அதிகாரி குறிப்புப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, “இது எத்தனை? எண்ண முடிகிறதா பாருங்கள்?” என்று நாலு புளியங்கொட்டைகளைத் தந்தார்.
அப்புசாமிக்கு நாக்கு நுனி வரை வந்துவிட்டது. “நாலு!” என்ற சரியான விடை. பிறகு கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டு, புளியங்கொட்டைகளை வெகு நேரம் திருப்பித் திருப்பி எண்ணிப் பார்த்துவிட்டு, “மைனஸ் இருநூறு புளியங்கொட்டை இருக்கிறது!” என்று கூறிவிட்டு ‘லபக்’ கென்று ஒரு புளியங்கொட்டையை வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.
சூபரெண்டு, “ஆல்ரைட். சோதனைகள் அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு, “மாணிக்கம் மாணிக்கம்!” என்று வார்டன் ஒருவனைக் கூப்பிட்டார்.
அப்புசாமி நாற்காலியிலிருந்து எழுந்து “சார், நான் பைத்தியமாகிவிட்டேன் அல்லவா? சந்தேகமில்லையே?” என்று வினவினார்.
“சந்தேகமேயில்லை. நீர் கால், அரை முக்கால் பைத்தியம் கூட இல்லை. முழுப் பைத்தியம். சந்தோஷமா?” என்றார் சூப்ரெண்ட்.
“அதுதான் வேண்டியது எனக்கு?” என்றவர் ‘டெலிபோன்’ மூலம் இப்போதே மனைவிக் கிழவிக்குத் தகவல் தெரிவித்து அவளைக் கதற வைக்கிறேன்’ என்று எண்ணம் எழுந்தவராக உற்சாகத்துடன், “சார், ஒரு போன் செய்து கொள்ளலாமா?” என்று சிறிது தூரத்திலிருந்த டெலிபோனை அணுகினார்.
மறுகணம் பரக்கென்று டெலிபோன் அவர் கையிலிருந்து பறிக்கப்பட்டது. திடுக்கிட்ட அப்புசாமி திரும்பிப் பார்த்தார். வார்டன் நின்றுகொண்டிருந்தான். “வா, போகலாம். டெலிபோனை உடைத்துவிடோதே. உன் சினேகிதங்களெல்லாம் உனக்கு மாலை போடணும்கறாங்க. வா போகலாம்,” என்று அவர் கையைப்பற்றி இழுத்துப் போனான்.
“ஆ! ஆ! விடு என்னை! விடு என்னை! நான் போன் செய்ய வேண்டும்,” என்று அப்புசாமி அவனிடம் முரண்டினார்.
“போன் செய்யணுமா? பெங்களூருக்கு உன்னை அனுப்பி வைக்கிறோம். விதவிதமாக அங்கே பண்ணலாம். இப்போ வா. கலாட்டா பண்ணாமல்.”
“அட ராமா! நான் பைத்தியமில்லை. சும்மா நடிப்பு. சூபரெண்ட்டுக்கு எல்லாம் தெரியும். என் கையை விடு.”
“அட சும்மா இருக்கமாட்டே! இங்கே வந்தவர்களில் யார்தான் தான் பைத்தியம்ணு ஒப்புக்கிறாங்க. நீ வரப்போறியா இல்லையா?” வார்டன் பிடி இறுகியது. பெரிய ஹாலில் மற்ற பைத்தியங்களுடன் அப்புசாமி விடப்பட்டார்.
அப்புசாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பைத்தியமாகியும் பெருமை இல்லையே.
மாலை ஐந்து மணி சுமாருக்கு அப்புசாமி, யாரும் பார்க்காத நேரம், மெதுவாக ஆபீஸ் அறையை நெருங்கினார். ஆபீஸ் வாசலில் நாற்காலியில் உட்கார்ந்து அமைதியாகப் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் சூட், பாண்ட போட்ட வாலிபர். அப்புசாமியைப் பார்த்ததும், “ஏன் பயந்த மாதிரி வருகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் நான் செய்கிறேன்.” நான் இங்கே உதவி சூபரெண்டுதான்,” என்றார்.
அப்புசாமி தன் கஷ்டங்களை அழமாட்டாத குறையாகச் சொல்லி ஹோவென்று புலம்பினார். வாலிபர் அவரைத் தேற்றி, “உங்கள் பர்ஸில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்?” என்றார். அப்புசாமி தன் பர்ஸிலிருந்த ஒரே ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து வாலிபரிடம் கொடுத்தார். “எப்படியாவது போன் மூலம் சொன்னாலும் போதும், ‘ஆடிட்டர் வீடா?’ என்று கேட்க வேண்டியது. ‘எதிர் வீட்டுச் சீதாலட்சுமிப் பாட்டியைக் கூப்பிடுங்கள். என்று சொன்னால் கூப்பிடுவார்கள். கூப்பிட்டு இந்த மாதிரி…”
‘கும்’ என்று ஒரு குத்து விழுந்தது அப்புசாமியின் முதுகில். “ஏய்யா தாத்தா, லஞ்சமா கொடுக்கிறே எனக்கு? லஞ்சப் பேயே!” என்று இடி இடியென்று சிரித்தார் ‘உதவி சூபரெண்ட்’ போல் நடித்த ஆசாமி. அதுவும் ஒரு பைத்தியம்!
அப்புசாமி, ‘செத்தேனே,’ என்று நினைத்துக் கொண்டவர், சூபரெண்ட் அறை திறந்திருக்கவும் குடுகுடுவென்று உள்ளே ஓடித் தாளைப் போட்டுக் கொண்டார்.
‘ஆகா! டெலிபோன்!’ என்று அப்புசாமி அடுத்த கணம் துள்ளிக் குதித்தார். கதவை உள்புறம் தாள் போட்டுக் கொண்டார். டெலிபோன் செய்ய விழைந்தார். ஆனால் என்ன ஏமாற்றம்? டெலிபோனில் ஒரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. மாமதிக்க நேரமில்லை அப்புசாமிக்கு. பூட்டை அங்கிருந்த ஒரு இரும்புப் பேப்பர் வெயிட்டினால் தட்டித் திறக்க முயன்றார்.
அதற்குள் இடி முழங்குவது போலக் கதவை ஒரு வார்டன் தட்ட ஆரம்பித்து விட்டான். “அடடே! ஏதோ ஒன்று ஆபீஸ் ரூமில் புகுந்து கொண்டு டெலிபோனை உடைக்கிறது! ஓடிவாங்க, ஓடி வாங்க!” அவன் அலறியதைத் தொடர்ந்து இன்னும் நாலைந்து வார்டன்கள் கதவைத் தள்ள ஆரம்பித்தனர்.
அப்புசாமி டெலிபோனை உடைக்காமல் ஜாக்கிரதையாகப் பூட்டை மட்டும் உடைத்து டெலிபோனில் பேசி முடித்துவிட்டார். தன் மாபெரும் கடமை முடிந்த திருப்தியோடு கதவின் தாளை அகற்றினார்.
வாட்டசாட்டமான வார்டன்கள் நாலைந்து பேர் குபீரென்று அப்புசாமியின் மேல் விழுந்து அமுக்கினார்கள்.
அப்புசாமி, “ஆ! ஆ! நான் பைத்தியமில்லை! பைத்தியமில்லை!” என்று கத்தினார். ஆனால் அதற்குள் அப்புசாமி ஒரு ‘வயலன்ட்’டைப்-கொடூரவகை-பைத்தியம் என்று தீர்மானிக்கப்பட்டு அவரைக் குண்டுக் கட்டாகத் தூக்கிப் போய்க் கம்பி போட்ட தனி அறையில் அடைத்துவிட்டார்கள்.
அப்புசாமி இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பைத்தியக்கார உலகத்தைப் பார்த்துப் பொறுமினார்.
‘சீதே! சீதே! என்னை மீட்க வரமாட்டாயா?
‘போன் மூலமாகத் தெரிவித்தும் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வரவில்லையே? சே! நீ நீயெல்லாம் ஒரு மாசம் பத்து ரூபாய்க்கு மஞ்சள்! பதினைந்து ரூபாய்க்குக் குங்குமம்! ‘சுமங்கலிப் பாட்டி’ என்று விருது வேறு?’
கம்பி வழியே அப்புசாமி பார்த்துக் கொண்டு இவ்வாறாகப் பலப்பல சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தார். அடுத்தகணம் அவர் கண்களில் ஒளி சுடர்விட்டது. உடம்பு பூராவும் உற்சாகத்தால் துள்ளியது.
‘யார், யார், யார்? அவள் யாரோ? மயங்க வைத்தாள் அவள் யாரோ?
சீதாப்பாட்டியேதான். ஆஸ்பத்திரி சூபரெண்டும் அவர்கூட நடந்து வந்து கொண்டிருந்தார். சீதாப்பாட்டி கையை கையை ஆட்டி, அவருடன் லாகவமாக உரையாடியவாறே நடந்து வந்த தோரணை சாட்சாத் விஜயலட்சுமி பண்டிட் ஏதோ ஒரு அரசியல் தூதருடன் பேசிக்கொண்டே நடந்து வருவதுபோல் அப்புசாமிக்குத் தோன்றியது.
ஒரு கணம், தனக்கு விடுதலை நேரம் வந்துவிட்டது என்று மகிழ்ந்தார். மனைவிக்கு இதயபூர்வமான நன்றியை அவர் மனம் தெரிவித்த அதே நேரம், இப்படியும் கூறியது. ‘உன் சாதனையின் இறுதிக் கட்டம், பலன் தரும் கட்டம் இதோ வந்துவிட்டது. அவளைக் கண்ணீர் விட்டுக் கதறச்செய். ‘நாதா! இனிமேல் உங்களை, ‘பைத்தியம் மாதிரி’ ‘கிராக் மாதிரி ‘பித்துக்குளித் தனமாய்’ என்ற அடைமொழிகளில் திட்டமாட்டேன்’ என்று வாக்கு மூலம் வாங்கிக் கொள்!’
சூபரெண்ட் தன் கைப்பட அப்புசாமியின் அறைக் கதவைத் திறந்தார்.
ஆஸ்பத்திரி சூபரெண்டும், “புரொபசர் சார், நல்ல வேடிக்கை செய்தீர்கள் நீங்கள் ‘தென்னிந்தியப் பைத்திய விடுதிகள்’ என்பது பற்றி சிகாகோ யுனிவர்ஸிடிக்கு ஆராய்ச்சி பூர்வமான கட்டுரை எழுதப்போவதாக தெரிவித்திருந்தால் நான் ஏராளமான விவரம் தந்திருப்பேன். வீண் சிரமப் பட்டிருக்க வேண்டாம் நீங்கள். எனக்கு அட்மிட் செய்கிறபோதே சந்தேகம்தான், நீங்கள் நல்ல மனிதர்தான் என்று.” என்றார்.
அப்புசாமிக்குப் புரிந்தது. ‘ஓகோ! சீதா என்னுடைய விடுதலைக்காக நான் ஆராய்ச்சிக்காக வந்தவன் என்று சவடால் அடித்திருக்கிறாள் போலிருக்கிறது.’ என்று எண்ணிக் கொண்டார்.
“சும்மா ஒரு வேடிக்கைக்கு!” என்று அப்புசாமியும் மழுப்பினார்.
ஆஸ்பத்திரி அதிகாரி அப்புசாமிக்கு விடுதலை கொடுத்து அனுப்பினார்.
சீதாப்பாட்டி எதிர் வீட்டு ஆடிட்டரின் காரை இரவல் வாங்கி வந்திருந்தாள். கம்பீரமாக அதில் ஏறி உட்கார்ந்தார் அப்புசாமி. அவர் மனத்தில் வெகு திருப்தி.
கார் போய்க் கொண்டிருக்கும்போது, “எப்படி? இனிமேல் ஐயாவைப் பைத்தியம் கிய்த்தியம் என்று சொல்வாயா?’ என்றார் கர்வமாக.
சீதாப்பாட்டி, “போதும் வாயை மூடுங்கள்! இவ்வளவு நாள் பண்ணிய பைத்தியக்காரத் தனத்துக்கெலலாம் சிகரம் வைத்தது போன்ற பைத்தியக்காரத் தனத்தைச் செய்துவிட்டீர்கள். ‘இங்லண்ட் ரிடர்ன்ட்’ என்ற ஆனர் இல்லாவிட்டாலும், ‘மென்ட்டல் ஹாஸ்பிட்ல் ரிடர்ன்ட்’ என்ற பட்டம் வாங்கிக் கொண்டுவிட்டீர்கள்! பைத்தியம் என்றால் நீங்கள்தான் அசல் பைத்தியம்?”
அப்புசாமிக்குத் தலை சுற்றியது!

       பிற்பகல் மூன்று மணி. அலாரம், ‘கிர்ர்…’ என்று அடித்தது. அதைத் தொடர்ந்து, “ஊம்…போதும் தூங்கினது. வேக்கப்! இரண்டு விஷயம்! மத்தியான்னத் தூக்கம் ஆயுளைக் குறைக்கும். இரண்டாவது, வேலை இருக்கிறது,” என்று சீதாப்பாட்டி, காப்பி ஒரு கையிலும் அலாரம் டைம்பீஸ் ஒரு கையிலுமாக, இதுவரை எந்தப் பக்தனுக்கும் தோன்றியிராத ஒருவகைத் தெய்வம் மாதிரி தன் முது கணவரின் முன் வந்து காட்சி அளித்தாள்.அப்புசாமி கண்ணைத் திறக்க விரும்பவில்லை. ஆனால் சீதாப்பாட்டி விட்டுவிடத் தயாராக இல்லை.கணவரை எழுப்பி உட்கார வைத்தாள். “பி…பிரிஸ்க்! அரைப் பைத்தியம் மாதிரி ஜிப்பாவைத் திருப்பிப் போட்டுக்கொண்டு, முக்கால் பைத்தியம் மாதிரி முதுகில் ஒரு கிழிசல், முழுப் பைத்தியம் மாதிரி தாடி மீசை, சே, சே!”அப்புசாமி செறுமினார் : “நீ தான் பைத்தியம். இந்த ஊர் பூராவும் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வா, டாக்ஸி வைத்துக்கொண்டு, எண்ணி ஒரே ஒரு எண்பத்திரண்டு வயசுக்கிழவன், இந்த வெய்யில் வேளையில் விழித்திருக்கிறானா பார்.

 

       நான் இப்போது எழுந்திருந்து யாரை சம்ஹாரம் செய்ய வேண்டும்? என்ன வேலை வைத்திருக்கிறாய்?”“லட்சணமாய் வாங்கி வந்திருக்கிறீர்களே சாத்துகுடிப் பாம் ‘வொர்ஸ்ட் ஸ்ட·ப்!’ முதலில் போய் பழத்தை வாபஸ் செய்துவிட்டு வாருங்கள்!”“என்னது?” என்று அப்புசாமி இடி விழுந்தவர் போலானார். “முந்தா நாள் வாங்கி வந்த பழத்தை இப்போது கொடுத்தால் எவனாவது வாங்கிக் கொள்வானா?”“நீங்கள் பைத்தியக்காரத்தனமாய் வாங்கி வந்தால்? சச்சென் எல்டர்லி மேன்? ஏஜ் எண்பத்திரண்டாயிற்று! ஒரு சுளையை உறித்துத் தின்றுவிட்டு வாங்கக் கூடாது வரவர மூளை ரொம்ப மழுங்கி வருகிறது.”“உன்னுடைய மூளைதான் ‘பிளாரசன்ட்’ கலர் மாதிரி டாலடிக்கிறதோ? நீ போய் வாங்கி வருவது மார்க்கெட்டில்?”“உங்கள் மாதிரி ஒரு பித்துக்குளியை, ஏமாளிளை, அனுப்புவதற்கு, இனிமேல் நானே போகவேண்டியதுதான். தட்டீஸ் தி ஒன்லி வே. அன்றைக்கு அப்படித்தான் பைனாப்பிள் வாங்கிவரச் சொன்னால் ஆப்பிளை வாங்கி வந்து நிற்கிறீர்கள், கிரேக்தனமாய்!”“மறுபடியும் அந்த வார்த்தையைச் சொல்லாதே!” அடிபட்ட ஆட்டோ ரிக்ஷாமாதிரி வீறிட்டார் அப்புசாமி.ஆனால் சீதாலட்சுமிப் பாட்டியோ, “ஹண்ட்ரட் அண்ட் ஒன் டைம்ஸ் சொல்வேன். பைத்தியம், பைத்தியம், பைத்தியம்! பித்துக்குளித்தனம், பித்துக்குளித்தனம்! பித்துக்குளித்தனம்! என்ன செய்துவிடுவீர்கள்?”அப்புசாமி பெஞ்சியிலிருந்து எழுந்தார்.

 

       “பிற்பாடு ரொம்ப வருத்தப்படுவாய்,” என்றார்.“சரி, சரி. முதலில் பழத்தை ‘எக்ஸ்ச் சேஞ்ச்’ பண்ணிக்கொண்டு வாருங்கள்.புளிப்பு ஊரைத் தூக்குகிறது. காரியத்தில் ஜீரோ, சவுடாலில் ஹீரோ!”அப்புசாமி அந்தப் பிராசத்தைத் தாங்கொணாதவராகத் துன்பத்தால் சில வினாடி துடித்துவிட்டு, “கொண்டா சாத்துக்குடியை! இனிப் பார் உன் குடியை!” என்று பழங்களை வாங்கிக்கொண்டு விறுவிறு என்று கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்தியை நோக்கி நடந்தார்.“பைத்தியம் என்று வாய்க்கு வாய் சொன்னாய் அல்லவா? வேண்டுமென்றே இதோ இப்போதே போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டு உனக்கு அதைப் ‘போன்’ மூலம் தெரிவித்து அலற வைக்கிறேன்! ‘ஏ, சீதா லட்சுமி என்ற மஞ்சள் பிசாசே, சுடுகணை ஏவும் படுபடு கிழவியே, பைத்தியம் என்று என்னைப் பழி சொல் புகன்றனை? பார், பார், நீ படப்போகிற அவதியைப் பார்! உன் கணவனை இனி நீ மறந்தும் கூடப் பைத்தியம் என்று வாய் திறக்காதபடி செய்கிறேன் பார்.’கீழ்ப்பாக்கம் உள நோய் விடுதியின் நுழை வாசலில், பதினொன்றேகால் புளிப்புச் சாத்துக்குடிகள் அடங்கிய சற்றே அழுக்கான பையுடன் அப்புசாமி பிரவேசித்தார்.வாசலில் இருந்த காவல்காரன், “உஸ்ஸ்…இருங்கள் சார்? யாரைப் பார்க்க வேண்டும். என்னவோ நெடுகப் போகிறீர்களே?” என்றான்.

 

      “ஓ! நீ சுவரோரமாக நின்றுகொண்டிருந்ததால் தெரியவில்லை. ஆமாம், இங்கே அட்மிஷன் முறை எப்படி?” என்று வினவினார் காவல்காரனை.“முறை என்னா முறை? பைத்தியம் புடிச்சிருந்தாக் கொண்டுவந்து சேர்க்கறாங்க. பைத்தியம் சொஸ்தமாயிட்டாக் கூட்டிப் போயிடறாங்க. ஏன், யாரையாச்சும் சேர்க்க வேண்டுமா?”“ஆமாம்.”“இட்டாந்திருக்கீங்களா? இட்டாரப் போறீங்களா?”“இட்டாந்த மாதிரிதான்.” அப்புசாமியின் உதடுகள் முறுவலித்தன. “அட்மிஷன் கிடைக்க என்ன செய்ய வேண்டும். யாரைப்பிடிக்க வேண்டும்?”“யாரையும் பிடிக்க வேண்டாம். உமக்குப் பைத்தியம் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்,” என்றான் காவல்காரன்.சரி சரி. எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. யாரைப் போய் பார்க்க வேண்டும்?”எனக்கென்ன பைத்தியமாய்யா? போய்யா உன் வேலையை பார்த்துக் கொண்டு.”அப்புசாமிக்கு எப்படியும் விவரம் தேவையாயிருந்தது. எந்த ஆஸ்பத்திரிக்கும் ஒரு சூப்பரெண்ட் என்பவர் இருப்பார் என்ற ஊக்கத்தில், “சூப்பரெண்ட் ரூம் எது? அதை மட்டும் சொல்லி விடு. அப்புறம் ஓடியே போய்விடுகிறேன்,” என்றார்.“அவர் ‘ரெளண்ட்’ போயிருக்கிறார். வர நேரமாகும்.”“ரெளண்ட் போயிருந்தாலும் சரி. சதுரம் போயிருந்தாலும் சரி. நான் அவரைக் கட்டாயம் பார்த்தாக வேண்டும். ரூம் எங்கே?”“என்ன உபத்திரவம் ஐயா, கழுத்தைப் பிடித்துத் தள்ள முடியாது. கெளரவமாக அங்கவஸ்திரம் போட்டிருக்கிறாய்?” என்று முணுமுணுத்த காவல்காரனின் முகம் அடுத்தகணம் பிரகாசித்தது. “அதோய்யா. சூப்பரெண்ட்டே வந்துவிட்டார்,” என்று தூரத்தில் வந்து கொண்டிருந்தவரைக் காட்டி, “அதோ, அவர் பின்னாலேயே போனீர்களானால், அதுதான் சூபரெண்ட் அறை,” என்றான்.

 

      அப்புசாமி வயசை மறந்து, பையிலிருந்த சாத்துக்குடிப் பழத்தை மறந்து வேகமாக ஓடினார். அவர் பின்னாடியே இன்னொரு ஆள், “அண்ணா! அண்ணா! சாத்துக்குடி! சாத்துக்குடி குண்டு போட்டுட்டு ஓடிறியே? இந்தா, இந்தா!” என்று ஓடி வந்தான். அப்புசாமியின் கைப்பையிலிருந்து எகிறி விழந்த சாத்துக்குடிப்பழம் இரண்டை, பொறுப்புமிக்க பைத்தியம் ஒன்று பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தது. அப்புசாமி ‘தாங்க்ஸ்!’ என்று சொல்லிப் பெற்றுக் கொண்டார்.“தாங்க்ஸ் எல்லாம் இல்லை-அப்புறம் திருப்பிக் கொடுத்துட வேண்டும். என்ன?” என்று சொல்லிவிட்டு அந்தப் பைத்தியம் நகர்ந்தது.அப்புசாமி, சூபரெண்டு அறைக்குள் தயங்கித் தயங்கி நுழைந்தார்.“யார் நீங்கள்? பேஷண்ட் யாரையேனும் பார்க்க வந்திருக்கிறீர்களா?” என்று சூபரெண்டு விசாரித்தார்.“இல்லை. ஹிஹி!” என்றார் அப்புசாமி. “ஒரு பர்ஷனல் விஷயத்தில் எனக்குத் தாங்கள் உதவி வேண்டும் என்றார்.”“என்ன உதவி?”“என்னை இங்கே ‘அட்மிட்’ செய்து கொள்ள வேண்டும்.” என்றார் அப்புசாமி.“நீங்கள் நல்ல சுவாதீனமான புத்தி உடையவர் மாதிரி தோன்றுகிறீர்களே?”“உண்மைதான். இருந்தாலும், தயவுசெய்து என்னைப் பைத்தியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.”சூபரெண்ட் சிரித்துக் கொண்டார்.

 

      அப்புசாமியைக் கண்களால் ஆராய்ந்தார். பிறகு, “அட்மிஷனுக்கு முன் சோதிக்கச் சில கேள்விகள் கேட்போம். உங்களையும் அது மாதிரிக் கேட்கிறேன். உங்கள் பெயர் என்ன?”அப்புசாமி ஒருகணம் யோசித்தார். “ஒருகால் பெயரைச் சரியாகச் சொன்னால் ‘அட்மிஷன்’ கிடைக்காமல் போய்விடுமோ” என்று எண்ணிக் கொண்டார். பிறகு, “என் பெயர், கும்கும் கும்மா குப்புசாமி,” என்றார்.அதிகாரி குறிப்புப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, “இது எத்தனை? எண்ண முடிகிறதா பாருங்கள்?” என்று நாலு புளியங்கொட்டைகளைத் தந்தார்.அப்புசாமிக்கு நாக்கு நுனி வரை வந்துவிட்டது. “நாலு!” என்ற சரியான விடை. பிறகு கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டு, புளியங்கொட்டைகளை வெகு நேரம் திருப்பித் திருப்பி எண்ணிப் பார்த்துவிட்டு, “மைனஸ் இருநூறு புளியங்கொட்டை இருக்கிறது!” என்று கூறிவிட்டு ‘லபக்’ கென்று ஒரு புளியங்கொட்டையை வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.சூபரெண்டு, “ஆல்ரைட். சோதனைகள் அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு, “மாணிக்கம் மாணிக்கம்!” என்று வார்டன் ஒருவனைக் கூப்பிட்டார்.அப்புசாமி நாற்காலியிலிருந்து எழுந்து “சார், நான் பைத்தியமாகிவிட்டேன் அல்லவா? சந்தேகமில்லையே?” என்று வினவினார்.“சந்தேகமேயில்லை.

 

       நீர் கால், அரை முக்கால் பைத்தியம் கூட இல்லை. முழுப் பைத்தியம். சந்தோஷமா?” என்றார் சூப்ரெண்ட்.“அதுதான் வேண்டியது எனக்கு?” என்றவர் ‘டெலிபோன்’ மூலம் இப்போதே மனைவிக் கிழவிக்குத் தகவல் தெரிவித்து அவளைக் கதற வைக்கிறேன்’ என்று எண்ணம் எழுந்தவராக உற்சாகத்துடன், “சார், ஒரு போன் செய்து கொள்ளலாமா?” என்று சிறிது தூரத்திலிருந்த டெலிபோனை அணுகினார்.மறுகணம் பரக்கென்று டெலிபோன் அவர் கையிலிருந்து பறிக்கப்பட்டது. திடுக்கிட்ட அப்புசாமி திரும்பிப் பார்த்தார். வார்டன் நின்றுகொண்டிருந்தான். “வா, போகலாம். டெலிபோனை உடைத்துவிடோதே. உன் சினேகிதங்களெல்லாம் உனக்கு மாலை போடணும்கறாங்க. வா போகலாம்,” என்று அவர் கையைப்பற்றி இழுத்துப் போனான்.“ஆ! ஆ! விடு என்னை! விடு என்னை! நான் போன் செய்ய வேண்டும்,” என்று அப்புசாமி அவனிடம் முரண்டினார்.“போன் செய்யணுமா? பெங்களூருக்கு உன்னை அனுப்பி வைக்கிறோம். விதவிதமாக அங்கே பண்ணலாம். இப்போ வா. கலாட்டா பண்ணாமல்.”“அட ராமா! நான் பைத்தியமில்லை.

 

        சும்மா நடிப்பு. சூபரெண்ட்டுக்கு எல்லாம் தெரியும். என் கையை விடு.”“அட சும்மா இருக்கமாட்டே! இங்கே வந்தவர்களில் யார்தான் தான் பைத்தியம்ணு ஒப்புக்கிறாங்க. நீ வரப்போறியா இல்லையா?” வார்டன் பிடி இறுகியது. பெரிய ஹாலில் மற்ற பைத்தியங்களுடன் அப்புசாமி விடப்பட்டார்.அப்புசாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பைத்தியமாகியும் பெருமை இல்லையே.மாலை ஐந்து மணி சுமாருக்கு அப்புசாமி, யாரும் பார்க்காத நேரம், மெதுவாக ஆபீஸ் அறையை நெருங்கினார். ஆபீஸ் வாசலில் நாற்காலியில் உட்கார்ந்து அமைதியாகப் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் சூட், பாண்ட போட்ட வாலிபர். அப்புசாமியைப் பார்த்ததும், “ஏன் பயந்த மாதிரி வருகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் நான் செய்கிறேன்.” நான் இங்கே உதவி சூபரெண்டுதான்,” என்றார்.அப்புசாமி தன் கஷ்டங்களை அழமாட்டாத குறையாகச் சொல்லி ஹோவென்று புலம்பினார். வாலிபர் அவரைத் தேற்றி, “உங்கள் பர்ஸில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்?” என்றார். அப்புசாமி தன் பர்ஸிலிருந்த ஒரே ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து வாலிபரிடம் கொடுத்தார். “எப்படியாவது போன் மூலம் சொன்னாலும் போதும், ‘ஆடிட்டர் வீடா?’ என்று கேட்க வேண்டியது. ‘எதிர் வீட்டுச் சீதாலட்சுமிப் பாட்டியைக் கூப்பிடுங்கள். என்று சொன்னால் கூப்பிடுவார்கள். கூப்பிட்டு இந்த மாதிரி…”‘கும்’ என்று ஒரு குத்து விழுந்தது அப்புசாமியின் முதுகில்.

 

       “ஏய்யா தாத்தா, லஞ்சமா கொடுக்கிறே எனக்கு? லஞ்சப் பேயே!” என்று இடி இடியென்று சிரித்தார் ‘உதவி சூபரெண்ட்’ போல் நடித்த ஆசாமி. அதுவும் ஒரு பைத்தியம்!அப்புசாமி, ‘செத்தேனே,’ என்று நினைத்துக் கொண்டவர், சூபரெண்ட் அறை திறந்திருக்கவும் குடுகுடுவென்று உள்ளே ஓடித் தாளைப் போட்டுக் கொண்டார்.‘ஆகா! டெலிபோன்!’ என்று அப்புசாமி அடுத்த கணம் துள்ளிக் குதித்தார். கதவை உள்புறம் தாள் போட்டுக் கொண்டார். டெலிபோன் செய்ய விழைந்தார். ஆனால் என்ன ஏமாற்றம்? டெலிபோனில் ஒரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. மாமதிக்க நேரமில்லை அப்புசாமிக்கு. பூட்டை அங்கிருந்த ஒரு இரும்புப் பேப்பர் வெயிட்டினால் தட்டித் திறக்க முயன்றார்.அதற்குள் இடி முழங்குவது போலக் கதவை ஒரு வார்டன் தட்ட ஆரம்பித்து விட்டான். “அடடே! ஏதோ ஒன்று ஆபீஸ் ரூமில் புகுந்து கொண்டு டெலிபோனை உடைக்கிறது! ஓடிவாங்க, ஓடி வாங்க!” அவன் அலறியதைத் தொடர்ந்து இன்னும் நாலைந்து வார்டன்கள் கதவைத் தள்ள ஆரம்பித்தனர்.அப்புசாமி டெலிபோனை உடைக்காமல் ஜாக்கிரதையாகப் பூட்டை மட்டும் உடைத்து டெலிபோனில் பேசி முடித்துவிட்டார். தன் மாபெரும் கடமை முடிந்த திருப்தியோடு கதவின் தாளை அகற்றினார்.வாட்டசாட்டமான வார்டன்கள் நாலைந்து பேர் குபீரென்று அப்புசாமியின் மேல் விழுந்து அமுக்கினார்கள்.

 

      அப்புசாமி, “ஆ! ஆ! நான் பைத்தியமில்லை! பைத்தியமில்லை!” என்று கத்தினார். ஆனால் அதற்குள் அப்புசாமி ஒரு ‘வயலன்ட்’டைப்-கொடூரவகை-பைத்தியம் என்று தீர்மானிக்கப்பட்டு அவரைக் குண்டுக் கட்டாகத் தூக்கிப் போய்க் கம்பி போட்ட தனி அறையில் அடைத்துவிட்டார்கள்.அப்புசாமி இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பைத்தியக்கார உலகத்தைப் பார்த்துப் பொறுமினார்.‘சீதே! சீதே! என்னை மீட்க வரமாட்டாயா?‘போன் மூலமாகத் தெரிவித்தும் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வரவில்லையே? சே! நீ நீயெல்லாம் ஒரு மாசம் பத்து ரூபாய்க்கு மஞ்சள்! பதினைந்து ரூபாய்க்குக் குங்குமம்! ‘சுமங்கலிப் பாட்டி’ என்று விருது வேறு?’கம்பி வழியே அப்புசாமி பார்த்துக் கொண்டு இவ்வாறாகப் பலப்பல சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தார். அடுத்தகணம் அவர் கண்களில் ஒளி சுடர்விட்டது. உடம்பு பூராவும் உற்சாகத்தால் துள்ளியது.‘யார், யார், யார்? அவள் யாரோ? மயங்க வைத்தாள் அவள் யாரோ?சீதாப்பாட்டியேதான். ஆஸ்பத்திரி சூபரெண்டும் அவர்கூட நடந்து வந்து கொண்டிருந்தார். சீதாப்பாட்டி கையை கையை ஆட்டி, அவருடன் லாகவமாக உரையாடியவாறே நடந்து வந்த தோரணை சாட்சாத் விஜயலட்சுமி பண்டிட் ஏதோ ஒரு அரசியல் தூதருடன் பேசிக்கொண்டே நடந்து வருவதுபோல் அப்புசாமிக்குத் தோன்றியது.ஒரு கணம், தனக்கு விடுதலை நேரம் வந்துவிட்டது என்று மகிழ்ந்தார்.

 

       மனைவிக்கு இதயபூர்வமான நன்றியை அவர் மனம் தெரிவித்த அதே நேரம், இப்படியும் கூறியது. ‘உன் சாதனையின் இறுதிக் கட்டம், பலன் தரும் கட்டம் இதோ வந்துவிட்டது. அவளைக் கண்ணீர் விட்டுக் கதறச்செய். ‘நாதா! இனிமேல் உங்களை, ‘பைத்தியம் மாதிரி’ ‘கிராக் மாதிரி ‘பித்துக்குளித் தனமாய்’ என்ற அடைமொழிகளில் திட்டமாட்டேன்’ என்று வாக்கு மூலம் வாங்கிக் கொள்!’சூபரெண்ட் தன் கைப்பட அப்புசாமியின் அறைக் கதவைத் திறந்தார்.ஆஸ்பத்திரி சூபரெண்டும், “புரொபசர் சார், நல்ல வேடிக்கை செய்தீர்கள் நீங்கள் ‘தென்னிந்தியப் பைத்திய விடுதிகள்’ என்பது பற்றி சிகாகோ யுனிவர்ஸிடிக்கு ஆராய்ச்சி பூர்வமான கட்டுரை எழுதப்போவதாக தெரிவித்திருந்தால் நான் ஏராளமான விவரம் தந்திருப்பேன். வீண் சிரமப் பட்டிருக்க வேண்டாம் நீங்கள். எனக்கு அட்மிட் செய்கிறபோதே சந்தேகம்தான், நீங்கள் நல்ல மனிதர்தான் என்று.” என்றார்.அப்புசாமிக்குப் புரிந்தது. ‘ஓகோ! சீதா என்னுடைய விடுதலைக்காக நான் ஆராய்ச்சிக்காக வந்தவன் என்று சவடால் அடித்திருக்கிறாள் போலிருக்கிறது.’ என்று எண்ணிக் கொண்டார்.“சும்மா ஒரு வேடிக்கைக்கு!” என்று அப்புசாமியும் மழுப்பினார்.

 

       ஆஸ்பத்திரி அதிகாரி அப்புசாமிக்கு விடுதலை கொடுத்து அனுப்பினார்.சீதாப்பாட்டி எதிர் வீட்டு ஆடிட்டரின் காரை இரவல் வாங்கி வந்திருந்தாள். கம்பீரமாக அதில் ஏறி உட்கார்ந்தார் அப்புசாமி. அவர் மனத்தில் வெகு திருப்தி.கார் போய்க் கொண்டிருக்கும்போது, “எப்படி? இனிமேல் ஐயாவைப் பைத்தியம் கிய்த்தியம் என்று சொல்வாயா?’ என்றார் கர்வமாக.சீதாப்பாட்டி, “போதும் வாயை மூடுங்கள்! இவ்வளவு நாள் பண்ணிய பைத்தியக்காரத் தனத்துக்கெலலாம் சிகரம் வைத்தது போன்ற பைத்தியக்காரத் தனத்தைச் செய்துவிட்டீர்கள். ‘இங்லண்ட் ரிடர்ன்ட்’ என்ற ஆனர் இல்லாவிட்டாலும், ‘மென்ட்டல் ஹாஸ்பிட்ல் ரிடர்ன்ட்’ என்ற பட்டம் வாங்கிக் கொண்டுவிட்டீர்கள்! பைத்தியம் என்றால் நீங்கள்தான் அசல் பைத்தியம்?”அப்புசாமிக்குத் தலை சுற்றியது!

by parthi   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.