LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

அமர காவியம் - திரை விமர்சனம் !!

இயக்குனர் : ஜீவா சங்கர்


நடிகர் : சத்யா


நடிகை : மியா 


இசை : ஜிப்ரான்


நான் படத்தை தொடர்ந்து, ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அடுத்த படம் தான் இந்த அமர காவியம். 


இந்த படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில், நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக கார்த்திகா என்ற கதாபாத்திரத்தில் கேரளா நடிகை மியா நடித்திருக்கிறார். 


இந்த படம் ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே முதல் படம் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. 


சரி வாங்க கதை உள்ளே போலாம்......


படம் தொடங்கியதும், ஹீரோ ஜீவாவை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். 


அப்போது தனது கடந்த கால நிகழ்வுகளை(அதுதான் பிளாஸ்பேக்) நினைத்து பார்க்கிறார். 


இப்போதான்.... படத்தின் மெயின் கதைகுள்ளே போறாங்க....


ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நாயகன் ஜீவாவும், நாயகி கார்த்திகாவும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்... ஜீவாவின் நண்பராக வரும் பாலாஜியும் அதே வகுப்பில் தான் படிக்கிறார். 


ஜீவாவின் நண்பரான பாலாஜி, கார்த்திகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். பாலாஜியின் தந்தையும் கார்த்திகாவின் தந்தையும் நண்பர்கள் என்பதால், கார்த்திகாவிடம் காதலை சொல்ல தயங்குகிறார் பாலாஜி. 


தன் காதலை கார்த்திகாவிடம் சொன்னால் தன் தந்தைக்கு தெரிந்து விடும் என்ற பயத்தால் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.


இதனால் தன் காதலை கார்த்திகாவிடம் புரிய வைக்க நண்பரான ஜீவாவை தூது அனுப்புகிறார் பாலாஜி. 


ஜீவாவும் பாலாஜியின் காதலை கார்த்திகாவிடம் சொல்கிறார். ஆனால் கார்த்திகாவோ நான் பாலாஜியை காதலிக்கவில்லை. உன்னைதான் காதலிக்கிறேன் என்று ஜீவாவிடம் சொல்லி பாலாஜியின் காதலை துவம்சம் செய்கிறார்.


மேலும் நாளை இதே நேரத்தில் இதே இடத்தில் சந்திக்கும் போது உன் பதிலை கூறுமாறு சொல்கிறாள் கார்த்திகா. இதனை கேட்டு அதிர்ச்சியடையும் ஜீவா, வீட்டிற்கு சென்று சிந்தித்து மறுநாள் தன் காதலை சொல்கிறார். 


அப்புறம் என்ன இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்....


ஜீவாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர் என்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் கார்த்திகா. அதேபோல் ஜீவாவும் கார்த்திகாவை தோழி என தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். 


இருவரும் ஒருநாள் தனிமையான இடத்தில் நெருக்கமாக இருக்கும்போது போலீஸ் இவர்களை பார்த்து விடுகிறது. இருவரையும் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும்படி சொல்கிறார்கள். அதன்படி இருவரின் பெற்றோர்களும் போலீஸ் ஸ்டேனுக்கு விரைந்து வருகிறார்கள். 


அங்கு போலீசார், இருவரும் காதலிப்பதாகவும், நெருக்கமாக இருந்ததாகவும் பெற்றோர்களிடம் கூறுகிறார்கள். இதனால் இரு குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் பெற்றோர்கள் ஜீவாவையும், கார்த்திகாவையும் பிரித்து கூட்டி செல்கிறார்கள். 


ஒருநாள் கார்த்திகாவை சந்திப்பதற்கு வீட்டிற்கு செல்கிறார் ஜீவா. அங்கு கார்த்திகாவின் தந்தை வாகனத்தை எரித்து விடுகிறார் ஜீவா. வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்க்கும் இடைவேளையில் கார்த்திகாவிடம் பேசுகிறார் ஜீவா. 


அப்போது கார்த்திகாவின் அம்மா அவர்கள் பேசுவதை பார்த்துவிடுகிறார். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஜீவாவை கைது செய்து விடுகிறார்கள். 


போலீஸ் விசாரணையில் ஜீவா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்.


இதற்கிடையில் கார்த்திகாவின் பெற்றோர்கள் வீட்டை காலி செய்து விட்டு செல்கிறார்கள். கார்த்திகா, ஜீவாவின் நண்பனான பாலாஜியிடம் தாங்கள் இடம் மாறும் இடத்தின் முகவரியை கொடுத்துவிட்டு செல்கிறார். 


ஆனால் பாலாஜியோ, அந்த கடித்தத்தை ஜீவாவிற்கு தெரியாமல் மறைத்து விடுகிறார். 


பிறகு ஜீவா, கார்த்திகாவை தேடி பழைய வீட்டிற்கு செல்கிறார். அங்கு இல்லாததால் அவளை தேடி அலைகிறான். 


இறுதியில் ஜீவா, கார்த்திகாவை கண்டுபிடித்து கரம் பிடித்தாரா? இல்லையா? ஜீவாவை ஏன் போலீசார் கைது செய்கிறார்கள் என்பது தான் மீதி கதை... 


நாயகனாக வரும் சத்யா, தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, படத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாக நடித்திருக்கிறார்.  


கதாநாயகியாக வரும் மியாவுக்கு இது முதல் படம் போல தெரியவில்லை.... இவருடைய நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.  


காட்சிகளின் வேகம் அதிகமாக இருந்திருந்தால், படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 


ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.


மொத்தத்தில் அமர காவியம்..... ஒரு முறை பார்க்கலாம்...  

by Swathi   on 06 Sep 2014  0 Comments
Tags: அமர காவியம்   Amara Kaaviyam                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.