LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவிற்கான இந்திய தூதர் டாக்டர்.எஸ்.ஜெயசங்கர் அமெரிக்க-இந்திய அமைப்புகளால் விருந்து கொடுத்து வரவேற்கப்பட்டார்

பிப், 15, 2014 மாலை 6 மணிக்கு அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் டாக்டர்.எஸ்.ஜெயசங்கர் அமெரிக்க-இந்திய அமைப்புகளால் விருந்து கொடுத்து வரவேற்கப்பட்டார்.

 

சமீபத்தில் விடைபெற்ற திருமதி.நிருபமாராவ் அவர்களுக்கு அடுத்து தமிழரான டாக்டர்.எஸ்.ஜெயசங்கர் அமெரிக்க தூதராக நியமிககப்பட்டார். அவரை வரவேற்கும் நிகழ்ச்சியை அமெரிக்க-இந்தியர்களைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தின. அதில் மேரிலாந்து வெளியுரவுத்துரையை சார்ந்த டாக்டர்.ராஜன் நடராசன் (Deputy Secretary of State for Policy and External Affairs) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பலர் கலந்துகொண்டனர். இந்திய-அமெரிக்க உறவில் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்படுத்தும் பொருட்டு 1977-ல் இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்த  டாக்டர்.எஸ்.ஜெயசங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது அமெரிக்க இந்தியர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தயுள்ளது.


நிகழ்ச்சியில் பேசிய மேரிலாந்து  மாகாண திட்ட மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் (துணைச் செயலாளர்) டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் மேரிலாந்து கவர்னர் கொடுத்தனுப்பிய வாழ்த்து செய்தியை படித்தபின் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழறிஞர் திரு.மறைமலை இலக்குவனார் அவர்களை குறிப்பிட்டு இந்த நிகச்சிக்கு வந்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் வணக்கம் என்று தமிழில் சொல்லி தன் உரையை துவக்கியது தமிழர்களை பெருமிதம் கொள்ளச்செய்தது.   இந்நிகழ்ச்சியில் வாஷிங்க்டன் தமிழ்ச் சங்க தலைவர் திருமதி.கல்பனா மெய்யப்பன், முன்னாள் தலைவர் திரு.ஜான் பெனடிட், திரு.கோபிநாத், திரு.பாலகன் ஆறுமுக சாமி, டாக்டர்.சேதுராமன், திரு.பீட்டர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 


வாசிங்டன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுடன் தமிழில் உரையாடிய திரு. ஜெயசங்கரிடம் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்த தமிழ்ச்சங்க நிர்வாகிகள், குழு படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றனர்.

 

Profile of Ambassador Dr.S.Jayasankar can be found at

https://www.indianembassy.org/pages.php?id=90

 

 

5
by Swathi   on 17 Feb 2014  0 Comments
Tags: அமெரிக்கவிற்கான இந்திய தூதர்   இந்திய தூதர்   டாக்டர்.எஸ்.ஜெயசங்கர்   மேரிலாந்து   Indian Ambassador   Dr.S.Jayasankar   Dr.S.Jayasankar welcome Function  
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவிற்கான இந்திய தூதர் டாக்டர்.எஸ்.ஜெயசங்கர் அமெரிக்க-இந்திய அமைப்புகளால் விருந்து கொடுத்து வரவேற்கப்பட்டார் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் டாக்டர்.எஸ்.ஜெயசங்கர் அமெரிக்க-இந்திய அமைப்புகளால் விருந்து கொடுத்து வரவேற்கப்பட்டார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.