LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
-

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு

 

சுந்தர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தான். " இவ்வளவு வேகமாக எங்கே ஓடுகிறாய்? '' வழியிலெ அவனைப் பாத்த ஒவ்வொருத்தரும் கேட்டாங்க.. அவனோ "என் கூட வாங்க, என் கூட வாங்க" அப்படீண்ணு சைகையாலெ சொல்லீட்டு நிக்காம ஓடினான். ஆத்தங்கரையிலிருக்கற ஆல மரத்தடியிலெ எல்லோரும் வந்து சேந்தாங்க.
அங்க முன்னாடியே கொஞ்சம் பேர் வந்திருந்தாங்க
"டேய் சுந்தர்... நீ ஓடுன எடத்துல புல்லு கூட மொளக்காது. அப்படி ஓடி வந்தயே என்ன காரணம்?'' கோபால் கேட்டான்.
"நான் பாகக்கும்போது இந்த பீட்டரும் ஓடிட்டிருந்தான். அவன்கிட்டயும் நான் இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவனும் என் கூட வாங்கற மாதிரி சைகை காட்டிட்டு நிக்காமல் ஓடுனான். அதுதான் நானும் அப்படியே செஞ்சேன்'' அப்படீண்ணான் சுந்தர்.
"ஐயோ.. பீட்டரா அப்படிச் சொன்னான். அவன் பேச்சை யாராவது கேட்பாங்களா அவன் வாயைத் தெறந்தாலே பொய்யாவல்ல கொட்டும். ஆனா அவனோட பொய்க்கதைகள கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலத் தோணும்" முகம்மது கொஞ்சம் கோபத்தோட பேசினான். பீட்டர் சொல்லப்போற பொய்க்கதைகளைக் கேக்கறதுக்கு அவனுக்கும் ஆசையிருக்குண்ணு அவனோட மொகம் சொல்லிச்சு.
ஆலமரத்தடியில் கிடந்த கல்லுமேல ஏறினான் பீட்டர் "அன்பான நண்பர்களே... நான் ஏன் ஓடி வந்தேன் தெரியுமா? உடனே அவனோட நண்பன் ஒருத்தன் "அது எங்களுக்குத் தெரியாதே...''  அப்படீண்ணான்.
"இதோ இந்த ஆல மரத்த்துக்கு மேல ஒரு யானை தூங்கிட்டிருந்துச்சுங்கற சேதியைக் கேள்விப்பட்டேன். அதுதான் ஓடி வந்தேன்''  அப்படீண்ணான். உடனே பீட்டரோட இன்னொரு நண்பன் "மரத்துக்கு மேல யானை எப்டி ஏறிச்சாமா? '' அப்படீண்ணு கேட்டான்.
"அது எப்படித் தெரியுமா? தரையில் ஒரு விதை கிடந்துச்சு. அது வழியாக வந்த யானை அந்த விதை மேல படுத்து தூங்கிருச்சு. விதை முளைச்சு பெரிய மரமாயிருச்சு. யானையோ தூங்கி எழவும் இல்லை அப்படித்தான் அந்த யானை மரத்தின் மேல தூங்கும்படியாயிருச்சு''  ண்ணு பதில் சொன்னான்.
"பரவாயில்லை நீ நல்லாத்தான் கப்சா வுடறே. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுண்ணு கேட்டிருக்கேன். ஆனா ஒன்னைப் மாதிரி பொய்க்கதைச் சொல்றவனை நான் என் வாழ்க்கையிலேயே பார்த்தேயில்ல''  மணிவண்ணன் பீட்டரோட தெறமய பாராட்டிப் பேசினான். அதைக் கேட்டதும் பீட்டருக்கு இன்னும் உற்சாகம் பொங்கிருச்சு.
"இப்போது இந்த மரத்தைப் பாருங்க. மரத்தோட உச்சியைப் பாருங்க. யானை தூங்கிட்டிருக்கா? இல்லையே. அந்த யானை எங்கே போச்சுத் தெரியுமா?'' ண்ணு கேட்டு ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்தினான் பீட்டர்.
எல்லோரும் மூச்சு விடக் கூட மறந்து அவனையே பார்த்துட்டிருந்தாங்க. "அதோ அந்த மூலையிருந்து ஒரு கொசு பறந்து வந்து அந்த யானையைத் தூக்கிட்டுப் போயிருச்சு. ''
" கொசு யானையைத் தூக்கிட்டு எங்கே பேச்சு...?'' ஒருத்தன் கேட்டான்.
"பனை மரத்தைப் புடுங்கிப் பல் குத்துறவங்க ஊருக்குண்ணு''  பீட்டர் பதில் சொன்னான்.
யப்பா... இந்தப் பீட்டர் என்னமா கற்பனை பண்றான். பனமரத்தைப் புடுங்கி பல்குத்துறவங்கண்ண அவங்க எம்மாம் பெரியவங்களா இருப்பாங்க. அவங்க கை காலெல்லாம் எப்படி இருக்கும்? அவங்க சாப்பாடு எப்படி இருக்கும்? அவங்க வீடு எப்படி இருக்கும்... ஆகா யோசிக்க யோசிக்க நல்லா இருக்கு.
நீங்களும் யோசிச்சுப் பாருங்க.

சுந்தர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தான். " இவ்வளவு வேகமாக எங்கே ஓடுகிறாய்? '' வழியில் அவனைப் பாத்த ஒவ்வொருத்தரும் கேட்டாங்க.. அவனோ "என் கூட வாங்க, என் கூட வாங்க" அப்படீண்ணு சைகையால் சொல்லீட்டு நிக்காம ஓடினான். ஆத்தங்கரையி இருக்கும் ஆல மரத்தடியில் எல்லோரும் வந்து சேர்ந்தாங்க.


அங்க முன்னாடியே கொஞ்சம் பேர் வந்திருந்தாங்க


"டேய் சுந்தர்... நீ ஓடுன எடத்துல புல்லு கூட முளைக்காது . அப்படி ஓடி வந்தயே என்ன காரணம்?'' கோபால் கேட்டான்.


"நான் பார்க்கும்போது இந்த பீட்டரும் ஓடி கொண்டிருந்தான் . அவன்கிட்டயும் நான் இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவனும் என் கூட வாங்கற மாதிரி சைகை காட்டிட்டு நிக்காமல் ஓடினான். அதுதான் நானும் அப்படியே செய்தேன்'' என்றான் சுந்தர்.


"ஐயோ.. பீட்டரா அப்படிச் சொன்னான். அவன் பேச்சை யாராவது கேட்பாங்களா அவன் வாயைத் திறந்தாலே  பொய்யாக  கொட்டும். ஆனா அவனோட பொய்க்கதைகள கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலத் தோணும்" முகம்மது கொஞ்சம் கோபத்தோட பேசினான். பீட்டர் சொல்லப்போற பொய்க்கதைகளைக் கேக்கறதுக்கு அவனுக்கும் ஆசையிருக்குத்துனு அவனோட முகம்  சொல்லியது .


ஆலமரத்தடியில் கிடந்த கல்லுமேல ஏறினான் பீட்டர் "அன்பான நண்பர்களே... நான் ஏன் ஓடி வந்தேன் தெரியுமா? உடனே அவனோட நண்பன் ஒருத்தன் "அது எங்களுக்குத் தெரியாதே...''  என்றான் .


"இதோ இந்த ஆல மரத்த்துக்கு மேல ஒரு யானை தூங்கி கொண்டிருக்கிறது என்ற  சேதியைக் கேள்விப்பட்டேன். அதுதான் ஓடி வந்தேன்'' . உடனே பீட்டரோட இன்னொரு நண்பன் "மரத்துக்கு மேல யானை எப்டி ஏறிச்சாமா? '' அப்படீண்ணு கேட்டான்.
"அது எப்படித் தெரியுமா? தரையில் ஒரு விதை கிடந்தது . அது வழியாக வந்த யானை அந்த விதை மேல படுத்து தூங்கியது . விதை முளைத்து பெரிய மரமாகியது . யானையோ தூங்கி எழவும் இல்லை அப்படித்தான் அந்த யானை மரத்தின் மேல தூங்கும்படியாயிருச்சு''  என்றான்.


"பரவாயில்லை நீ நல்லாத்தான் கட்டு கதை விடுற . அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுண்ணு கேட்டிருக்கேன். ஆனா ஒன்னைப் மாதிரி பொய்க்கதைச் சொல்றவனை நான் என் வாழ்க்கையிலேயே பார்த்தேயில்லை ''  மணிவண்ணன் பீட்டரோட திறமையை  பாராட்டிப் பேசினான். அதைக் கேட்டதும் பீட்டருக்கு இன்னும் உற்சாகம் பொங்கியது .


"இப்போது இந்த மரத்தைப் பாருங்க. மரத்தோட உச்சியைப் பாருங்க. யானை தூங்கிட்டிருக்கா? இல்லையே. அந்த யானை எங்கே போச்சுத் தெரியுமா?'' என்று  கேட்டு ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்தினான் பீட்டர்.


எல்லோரும் மூச்சு விடக் கூட மறந்து அவனையே பார்த்துட்டிருந்தாங்க. "அதோ அந்த மூலையிருந்து ஒரு கொசு பறந்து வந்து அந்த யானையைத் தூக்கிட்டுப் போயிருச்சு. ''


" கொசு யானையைத் தூக்கிட்டு எங்கே பேச்சு...?'' ஒருத்தன் கேட்டான்.


"பனை மரத்தைப் புடுங்கிப் பல் குத்துறவங்க ஊருக்குண்ணு''  பீட்டர் பதில் சொன்னான்.


யப்பா... இந்தப் பீட்டர் என்னமா கற்பனை பண்றான். பனமரத்தைப் புடுங்கி பல்குத்துறவங்கண்ண அவங்க எம்மாம் பெரியவங்களா இருப்பாங்க. அவங்க கை காலெல்லாம் எப்படி இருக்கும்? அவங்க சாப்பாடு எப்படி இருக்கும்? அவங்க வீடு எப்படி இருக்கும்... ஆகா யோசிக்க யோசிக்க நல்லா இருக்கு.
நீங்களும் யோசிச்சுப் பாருங்க.

by Swathi   on 11 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
06-Jun-2018 09:41:03 Anupriya said : Report Abuse
செம மோக்க ஜோக்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.