LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!

டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!

December 26, 2013 at 12:53am
மானுட விடுதலைக்கு, பெண் விடுதலையை தலித் விடுதலையை முன் நிபந்தனைகளாகக் கொண்ட அன்னை மீனாம்பாள், பெண்களுக்கு மட்டுமல்ல தலித் மக்களுக்கும் தலைவராக வாழ்ந்தார்.  தமிழ் வள்ளலாகவும், ஆதிதிராவிடர் மகாஜனசபாவின் புரவலராகவும், முதன் முதலில் கப்பலோட்டிய தமிழராகவும் புகை உச்சியில் இருந்த கோடீஸ்வரப் பிள்ளை என்று அழைக்கப்பட்ட மதுரைப்பிள்ளையின் பேத்திதான் அன்னை மீனாம்பாள்.
அன்னை மீனாம்பாள், 1902 இல் பிறந்தார்.  அன்னை மீனாம்பாளின் தந்தை வாசுதேவப் பிள்ளை தலித் சமுதாயத்திலியிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதி.  1918இல் அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் ஏற்பட்டது.  தலைவர் சிவராஜ் அவர்கள் துணைவராக வாய்க்கபெற்றார்.
அன்னை மீனாம்பாள், இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டு காலம் கவுரவ நீதிபதியாக இருந்தவர்.  கவுரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வில், உங்கள் கணவர் வழக்குரைஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதாடுகிற பக்கம் தீர்ப்புச் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டார்கள்.  அதற்கு அன்னை மீனாம்பாள் கணவர் என்பது வீட்டோடுதான்.  நீதி மன்றத்தில் அவர் வழக்குரைஞர், நான் நீதிபதி. கணவன் மனைவி உறவு அங்கே கிடையாது என்று ஆளுமையுடன் பதிலளித்தார்.  நீதிபதி பொறுப்பின் போது உலகத்தையும், வாழ்க்கையையும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் பெருமளவு புரிந்து கொண்டார்.
அன்னை மீனாம்பாள் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் வரவேற்புக் குழுத்தலைவராக, திறப்பாளராக, தலைவராக, சிறபுரையாளராக முக்கியத்துவம் பெற்றியிருந்தார்.  ஈ.வெ. ராமசாமிக்கு 20/11/1938 இல் தமிழக பெண்கள் மாநாட்டில் நாயக்கர் பட்டத்தை ஒழித்து பெரியார் என்ற மதிப்பு மிக்க பட்டத்தை தந்தவர் அன்னை மீனாம்பாள். 
டாக்டர் அம்பேத்கர் அன்னை மீனாம்பாள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.  ஒருமுறை செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையாருடன், டோகோட்ரோ அம்பேத்கர் பம்பாயில் பேசிக்கொண்டு இருந்த போது "சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்" என்றார்.  அதற்கு முத்தையா அவர்கள் சென்னையிலா? அதுவும் உங்களுக்கா? என்று ஆச்சரியப்பட அதற்க்கு அண்ணலும் ஆமாம், அவர் பெயர் மீனாம்பாள். தலைவர் சிவராஜின் துணைவி என்று விளக்கமாகச் சொன்னார்.  1942-இல் அன்னை மீனாம்பாள் தலைவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் தங்கியிருக்கையில் டாகடர் அம்பேத்கர் தன கைவண்ணத்தில் அற்புதமாகச் சமைத்து அவரே அன்போடு பரிமாறினார்.  டாக்ற்றோர் அம்பேத்கர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்த வைத்தவர் அன்னை மீனாம்பாள்.

மானுட விடுதலைக்கு, பெண் விடுதலையை தலித் விடுதலையை முன் நிபந்தனைகளாகக் கொண்ட அன்னை மீனாம்பாள், பெண்களுக்கு மட்டுமல்ல தலித் மக்களுக்கும் தலைவராக வாழ்ந்தார்.  தமிழ் வள்ளலாகவும், ஆதிதிராவிடர் மகாஜனசபாவின் புரவலராகவும், முதன் முதலில் கப்பலோட்டிய தமிழராகவும் புகை உச்சியில் இருந்த கோடீஸ்வரப் பிள்ளை என்று அழைக்கப்பட்ட மதுரைப்பிள்ளையின் பேத்திதான் அன்னை மீனாம்பாள். அன்னை மீனாம்பாள், 1902 இல் பிறந்தார்.  அன்னை மீனாம்பாளின் தந்தை வாசுதேவப் பிள்ளை தலித் சமுதாயத்திலியிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதி.  1918இல் அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் ஏற்பட்டது.  தலைவர் சிவராஜ் அவர்கள் துணைவராக வாய்க்கபெற்றார்.

 

அன்னை மீனாம்பாள், இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டு காலம் கவுரவ நீதிபதியாக இருந்தவர்.  கவுரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வில், உங்கள் கணவர் வழக்குரைஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதாடுகிற பக்கம் தீர்ப்புச் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டார்கள்.  அதற்கு அன்னை மீனாம்பாள் கணவர் என்பது வீட்டோடுதான்.  நீதி மன்றத்தில் அவர் வழக்குரைஞர், நான் நீதிபதி. கணவன் மனைவி உறவு அங்கே கிடையாது என்று ஆளுமையுடன் பதிலளித்தார்.  நீதிபதி பொறுப்பின் போது உலகத்தையும், வாழ்க்கையையும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் பெருமளவு புரிந்து கொண்டார்.

 

அன்னை மீனாம்பாள் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் வரவேற்புக் குழுத்தலைவராக, திறப்பாளராக, தலைவராக, சிறபுரையாளராக முக்கியத்துவம் பெற்றியிருந்தார்.  ஈ.வெ. ராமசாமிக்கு 20/11/1938 இல் தமிழக பெண்கள் மாநாட்டில் நாயக்கர் பட்டத்தை ஒழித்து பெரியார் என்ற மதிப்பு மிக்க பட்டத்தை தந்தவர் அன்னை மீனாம்பாள். டாக்டர் அம்பேத்கர் அன்னை மீனாம்பாள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.  ஒருமுறை செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையாருடன், டோகோட்ரோ அம்பேத்கர் பம்பாயில் பேசிக்கொண்டு இருந்த போது "சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்" என்றார்.  அதற்கு முத்தையா அவர்கள் சென்னையிலா? அதுவும் உங்களுக்கா? என்று ஆச்சரியப்பட அதற்க்கு அண்ணலும் ஆமாம், அவர் பெயர் மீனாம்பாள். தலைவர் சிவராஜின் துணைவி என்று விளக்கமாகச் சொன்னார்.  1942-இல் அன்னை மீனாம்பாள் தலைவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் தங்கியிருக்கையில் டாகடர் அம்பேத்கர் தன கைவண்ணத்தில் அற்புதமாகச் சமைத்து அவரே அன்போடு பரிமாறினார்.  டாக்ற்றோர் அம்பேத்கர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்த வைத்தவர் அன்னை மீனாம்பாள்.

by Swathi   on 27 Dec 2013  5 Comments
Tags: Meenambal Sivaraj   Sivaraj   Meenambal   Annai Meenambal Sivaraj   அன்னை மீனாம்பாள்   சிவராஜ்   மீனாம்பாள்  
 தொடர்புடையவை-Related Articles
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
கருத்துகள்
21-Nov-2020 12:19:38 பிரின்சு என்னாரெசு பெரியார் said : Report Abuse
அன்னை மீனாம்பாள் அவர்கள் பெரியார் ஈ.வெ.ராமசாமி ‘என்றும்’ அழைக்கப்பட்டுவந்தவரை, இனிமேல் பெரியார் ‘என்றே’ அழைக்கவேண்டும் என்று தீர்மானம் இயற்றி பட்டம் தந்த தமிழ்நாடு பெண்கள் மாநாடு நடத்தியோரில் முதன்மையானவர்களுள் ஒருவராவார். ஆனால், நாயக்கர் பட்டத்தை ஒழித்து பெரியார் என்ற பட்டத்தைத் தந்தார் என்ற தகவல் தவறானது. நாயக்கர் என்ற ஜாதிப் பட்டத்தை தந்தை பெரியார் 1927ஆம் ஆண்டே துறந்துவிட்டார். 1929 செங்கல்பட்டு மாநாட்டில் இன்னும் பெருவாரியான மக்களையும் அவ்வாறு ஜாதிப்பட்டம் துறக்கச் செய்தார் என்பது தான் சரியான வரலாறு.
 
19-Mar-2019 20:48:35 நரேந்திரன் பறையர் said : Report Abuse
அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களை பற்றிய தகவல் பதிந்தமைக்கு நன்றி.
 
27-Oct-2018 22:39:08 Sugumaran said : Report Abuse
Goodnews
 
25-May-2015 07:22:19 மு இரா மாணிக்கம் said : Report Abuse
அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் பற்றி இதுவரை படித்ததில்லை அறிய பல செய்திகளை உள்ளடக்கிய தொகுப்பு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
 
03-Jan-2015 23:55:36 ப. லிங்கநாதன் said : Report Abuse
நல்ல பயனுள்ளதாக இருந்தது இன்னும் விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.