LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

அன்னக்கொடி - திரை விமர்சனம்

நடிகர் : லட்சுமணன்

 

நடிகை : கார்த்திகா

 

வில்லன் : மனோஜ் 

 

இயக்குனர் : பாரதிராஜா

 

இசை : ஜீ.வி. பிராகாஷ்

 

ஒளிபதிவு : சாலை சகாதேவன்

 

விமர்சனம் :

 

கதையின் கதாநாயகன் லட்சுமணன் ஒரு ஆடு மேய்க்கும் இளைஞன். இவருக்கும் பக்கத்து ஊரில் ஆடு மேய்க்கும் கதாநாயகி கார்த்திகாவும் இடையே காதல் மலருகிறது. லட்சுமணன் ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர் தான் மனோஜின் தந்தை. இவர் வாங்கிய பணத்திற்கு சரியாக வட்டிகட்டவிட்டால், கணவன் கண் முன்னே அவனது மனைவியை இழுத்துக்கொண்டு போகும் கொடூர மனம் உடையவர். வில்லனாக வரும் மனோஜ் லட்சுமணனின் ஆட்டு மந்தையில் உள்ள ஆட்டை திருடிச் சென்று விடுகிறார். இதனால் மனோஜுக்கும், லட்சுமணனுக்கும் இடையே பகை உண்டாகிறது. 

 

வட்டி பணத்தை வசூல் செய்ய கார்த்திகா வீட்டுக்குச் சென்ற மனோஜ் அவரது அழகில் மயங்கி அவரை அடைய நினைக்கிறார். இந்நிலையில் சாராயம் காய்ச்சி கொண்டிருக்கும் கார்த்திகாவின் அம்மாவையும், கார்த்திகாவையும் போலீசார் கைது செய்கின்றனர். இதனை அறிந்த மனோஜ், போலீசாருக்கு பணம் கொடுத்து இருவரையும் விடுவித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். பிறகு கார்த்திகாவின் காதல் கதையை அவரது அம்மாவிடம் போட்டு உடைக்கிறார். இதனால் லட்சுமணன் மீது கார்த்திகாவின் அம்மா கோபம் கொள்கிறார். லட்சுமணனின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய மறுநாளே அவரது தந்தை மகனை அழைத்து கொண்டு கார்த்திகாவை பெண் கேட்க செல்கிறார்கள். அங்கே கார்த்திகாவின் அம்மா, லட்சுமணன் மற்றும் அவரது தந்தை மீது சாணத்தை கரைத்து ஊற்றி அவமானப்படுத்துகிறார். இந்த சண்டையின் உச்சகட்டமாக கார்த்திகாவின் அம்மா லட்சுமணனின் அப்பாவை அடிக்க, கோபத்தில் லட்சுமணன் கார்த்திகாவின் அம்மாவை எட்டி உதைக்கிறார். உடனே கார்த்திகாவின் அம்மா மனோஜ் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். அங்கு லட்சுமணனுக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனையும், அவனது தந்தைக்கு இரண்டு நாள் தண்டனையும் கிடைக்கிறது. தண்டனை முடிந்து வெளியே வந்த லட்சுமணனின் தந்தை, மனோஜ் தந்தையிடம் வட்டிக்குப் பணம் வாங்கி தனது மகனை ஜாமீனில் எடுக்கிறார். வெளியில் வந்து லட்சுமணன் கார்த்திகாவை கரம் பிடித்தாரா? இல்லை மனோஜ் கார்த்திகாவை அடைந்தார என்பதே படத்தின் மீதி கதை. 

 

பலம் :

 

1.அறிமுக படத்தில் லட்சுமணன் கிராமத்து இளைஞர் வேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார். 

 

2.வில்லனாக வரும் மனோஜ், கதாநாயகியாக வரும் கார்த்திகா ஆகியோரின் நடிப்பில் கிராமத்து மண்வாசனையை வீச வைத்திருக்கிறார் பாரதி ராஜா.

 

பலவீனம் :

 

1.படத்தின் பாடல்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. மேலும் பின்னணி இசையும் பரவாயில்லை.

 

2.பாரதிராஜாவின் பழைய படங்களை போலவே இந்த படத்தின் கதையிலும் தொய்வு.

by Swathi   on 29 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
களத்தில் சந்திப்போம் களத்தில் சந்திப்போம்
பூமி பூமி
ஈஸ்வரன் ஈஸ்வரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.