LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன்

அந்தக் காலம்தான்
நன்றாக இருந்தது.

பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடங்கிடைக்கும்.

மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.

எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.

வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.

சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.

எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.

மழை
நின்று நிதானமாகப் பொழியும்.

சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.

நல்ல நூல்களுக்கு
அன்னம் பதிப்பகம்தான்.

வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.

எளிதில்
மணப்பெண் கிடைத்தாள்.

வெஸ்ட் இண்டீசை
வெல்லவே முடியாது.

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.

நகரத்தின் எல்லாக் கடைகளிலும்
மிரட்சியின்றி நுழைய முடியும்.

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.

ராமராஜனை
விரும்பி ரசித்தோம்.

அதிகாலைகள்
பறவைக் கீச்சுகளால் நிரம்பியிருந்தன.

புதுத்துணிகளை விஷேசங்களுக்கு என்று
உடுத்தாமல் வைத்திருந்தோம்.

ஊசல் சுவர்க்கடிகாரத்திற்கு
சாவி கொடுத்தோம்.

தானாய்த் துயில்களைந்து எழுந்தோம்.
இருள்கட்டியவுடன் உறங்கச் சென்றோம்.

ஆம்
அந்தக் காலம் நன்றாக இருந்தது !


- கவிஞர் மகுடேசுவரன்.

by Swathi   on 16 Sep 2015  4 Comments
Tags: Antha Kalam   அந்தக் காலம்   Kavignar Magudeswaran   கவிஞர் மகுடேசுவரன்           
 தொடர்புடையவை-Related Articles
அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன் அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன்
அல்லோலகல்லோலம் என்றால் என்ன அல்லோலகல்லோலம் என்றால் என்ன
தெரியுமோ ? - கவிஞர் மகுடேசுவரன் தெரியுமோ ? - கவிஞர் மகுடேசுவரன்
பூம்பூம் மாடு - கவிஞர் மகுடேசுவரன் பூம்பூம் மாடு - கவிஞர் மகுடேசுவரன்
கோடை  - கவிஞர் மகுடேசுவரன் கோடை - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
12-Feb-2020 13:58:44 க. நடராஜன் said : Report Abuse
நினைவை வருடும் கவிதை நலம்
 
10-May-2018 07:23:37 மு.வளளியம்மை said : Report Abuse
மலரும்நினை வுகள்.நன்றி
 
27-Jun-2017 05:36:39 எஸ் ஜி ராஜேந்திரன் said : Report Abuse
50 வருடங்களுக்கு பிந்தைய கால பிரயாணம் செய்ய வைத்தமைக்கு நன்றி.
 
27-Jul-2016 06:02:24 ராம்குமார் said : Report Abuse
உண்மையிலேயே பள்ளி பருவத்திற்கு சென்று வந்தேன். கவிதை அருமை. நன்றிகள் பல. திருவிழாவில் ராட்டினம் சுற்றினோம். மணி நேரத்திற்கு சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றினோம். மஞ்சள் பையில் புத்தகம் எடுத்து சென்றோம். இன்னும் பல.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.