LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

அந்த பண்டிகை நாளில் - சரஸ்வதி ராசேந்திரன்

ஊரே  தீபாவளி கொண்டாட்டத்தில்  மூழ்கியிருந்தது. காதை பிளக்கும் வெடிகள், கண்ணைப் பறிக்கும்  கலர் கலராய் பூச்சொரியும் பூச் சட்டிகள் குழந்தைகளின் சந்தோஷ கூக் கூரல்கள். எதுவுமே கவிதாவை அசைக்கவில்லை.. அடிபட்டு அடங்கி கிடக்கும் புலிபோல் ஒடுங்கி கிடந்தாள். .அது நடந்து மாதாங்கள் கடந்ததா .யுககங்கள்  கடந்து விட்டனவா ?  நினைத்துப்பார்க்கவே முடியவில்லை அவளால் அப்படியொரு  மாற்றங்கள். பெருமூச்சுகள் எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவு இருட்டு.குழப்பங்கள், பயங்கள் .

மறக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறாள், ஆனால் முடியவில்லை, அந்த அளவுக்கு  காவியனை  விரும்பித்தான்  காதல் செய்தாள், அவன் இப்படி செய்வான் என்று அவள்  நினைத்துக்கூட பார்க்கவில்லை  அவள் கண்முன் பழைய காட்சிகள் சுழன்றன ..ஆம் இரண்டு வருடங்களுக்கு முன் இதே தீபாவளி நாளன்று தான் காவியனை சந்தித்தாள், எதிர் வீட்டு ஆண்ட்டியின் தம்பி மகனாம்

அமெரிக்காவில் வேலை பார்க்கிறானாம் அவன் கொளுத்திய ஆயிரம் வாலா சரம் வெடித்து இவள் வீட்டு மாடியில் வந்து விழ்ந்த ஒருதுண்டு ஜன்னல் திரைச் சீலையில் விழுந்து பர்றி எறிய, வந்ததே கோபம் கவிதாவுக்கு ..உடனே எதிர் வீடு சென்று  சப்தமிட - அமைதியாக அவள் திட்டுவதை கேட்ட காவியன்  வெளியே வந்து .

‘சாரி மேடம் ஆண்ட்டி தவறு செய்யலே,, நாந்தான் வெடித்தேன்  வெரி சாரி ‘ சாரி சொல்லிட்டா சரியாகிடுமா ? படித்தவர்தானே நீங்கள்’

இப்படி குடியிருப்பு பகுதியில் இது போன்ற வெடிகளை கொளுத்தக்கூடாதுன்னு தெரியாதா  இல்லே யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்ற நினைப்பா?’’

'மேடம். நான் செய்தது தவ்றுதான் ,இப்ப என்ன செய்யணும்கிறீங்க. வேணா நான் எறிந்த துணிக்கு காசு கொடுத்திடறேன்’’

‘’சரி உயிர் போயிருந்தாலும் காசு கொடுத்து தீர்த்துடுவீங்களா?’’

‘இப்ப என்ன செய்யணும்? தோப்புக்கரணம் போடனுமா? இல்லெ என்னை ஜெயிலிலே போடனுமா?’ அமைதியாக வே பேசினான் காவியன்.  அவன் மன்னிப்பு கேட்ட பின்பும் நாம் ஏன் இப்படி

சண்டை போட்டோம் என்று வெட்கமாக போனதால் முனகியபடியே வந்துவிட்டாள். கவிதா .

அடுத்த நாள், அவன்   ஜன்னல்   திரைச்சீலையை போலவே  ஒன்று வாங்கி கொண்டுவர வெட்கமாக போய்விட்டது கவிதாவிற்கு

‘என்ன நீங்கள் இதற்குப்போய்.’

‘நான் செய்தது  தப்புதானே அதனால் தான்   பரவாயில்லை, இல்லெ தைத்து கொடுக்கணும்னு சொன்னாலும் செய்கிறேன்  வெரிசாரி ’

இருவரும் சமாதனமாகி பின்  பழகி .அது காதலில் போய்முடிந்தது. அவன் ஊருக்குப்போகும் வரை இருவரும் தினமும்

பேசுவதும், ஊர் சுற்றுவதுமாக இருந்தார்கள்.கவிதாவின் அம்மா சரோஜா  அப்படியாவது தன் மகள் திருமணம் செய்து கொண்டாள் சரிதான் என்று  கண்டும் காணாதது மாதிரி இருந்தாள். காவியன் ஊர்

போனதும் தன் பெற்றோர்களுடன் வந்து நிச்சயம் செய்வதாக சொல்லிப் போனான்., ஆனால் காவியன் வரவே இல்லை. அடுத்தவருடம்  இதே தீபாவளி தினத்தன்று நிச்சயம் செய்ய வருவதாக  கூறி ரெடியாக இருக்கும்படி சொல்லியிருந்தான் ,

கவிதா  இறக்கை கட்டாத பறவையாக படப்டத்துக்கொண்டிருந்தாள்

வீடே கோலகலமாக  இருந்தது . நேரம் ஓடியது , நிமிஷத்திற்கு நிமிஷம் இருதய துடிப்பு அதிகமானது  கவிதாவிற்கு, குறிப்பிட்ட நேரம் வந்த பின்னும் எவ்வளவு நேரம் வரை அனுசரித்துத் தள்ளி வைக்கமுடியுமோ அவ்வளவு நேரம் வரை காத்திருந்து பார்த்தார்கள்

ஆனால் காவியனோ, அவனது பெற்றொர்களோ வரவேயில்லை

கல்யாணவீடாக திகழ்ந்த  வீடு இழவு வீடூ போலானது, உறவுகள், ஊரார்  முன் இப்படி  அவமானப்பட்டு போய் விட்டோமேன்னு போய் படுக்கையில் வீழ்ந்தவள்தான் கவிதா அன்றிலிருந்து யாருடனும் பேசாமல் அறையில் அடைந்து கிடந்தாள் .

''.ச்சே,  என்ன மனுஷன்   கொஞ்சம்  கூட  பொறுப்பில்லாமல், கவிதா  உனக்கு  இவனை விட்டா வேறு ஆளே கிடைக்கலையா?..இருந்து இருந்து இவனைப்போய்’ தங்கைகேட்டாள்

‘போதும்  நிறுத்து  இனி இது பற்றி  யாரும் பேச வேண்டாம்  நான் கல்யாணமே  வேண்டாம்னு நினச்சேன்  அவர் பரவாயில்லைன்னாலும்  அவர்  வீட்டார்கள் வந்தார்களா? அவர்களும்  வராததால் ...இந்த கல்யாணம்   நடக்கும்னு  நான் நினைக்கவில்லை . அவரவர்  வேலையை பாருங்கள் ,ஐயம் சாரி , இத்தனை காலம்  கல்யாணத்த  விரும்பாதா நான் ,இப்போ  மனம்  மாறி  திருமணம்  செய்து கொள்ள விழைந்து  முட்டாள் தனம்தான்  எனக்கு கொடுப்பினை கிடையாது  எல்லோரும் போங்க   என்னைத் தனியா விடுங்க' என்று  கறாராக பேசினாள் .

அதைக் கேட்ட  தோழி போடி  பையித்தியம் மாதிரி பேசாதே ,இவன்  

தான் பெரிய உலகத்திலேயே  பெரிய மன்மதனோ? போயி வேலைப்பாரடி .

ஏய்  உனக்குத்  தெரியாது, என் மன  நிலை, இந்த வருத்தம் போக  எனக்கு டைம்  வேணும்   பேசாம போடி  என்று விரட்டிவிட்டாள் தோழியை. அன்றிலிருந்து இப்படித்தான் ஏன் இப்படி என் மனசை கொன்றார் என்று  நினைத்து  நினைத்து  வருத்தம் அடைந்தாள்

ஒன்று மட்டும்   புரிந்தது  அவர் எல்லா மனிதரையும் போல் தான்  ஒரு பெண்ணின் உடல்கள் தான் தேவை உள்ளம் தேவையில்லை

எல்லா ஆண்களும்போல் தான் அவரும்  என்று புரிந்து விட்டது அவர் அமெரிக்கன் ஸ்டையிலில்  அந்த கலாச் சாரத்தில்  வாழ்ந்ததால், டேட்டிங் போக கூப்பிட்டார் இவள் போகாததால்  இந்த கல்யாணத்தை  நிறுத்திவிட்டார் போலும் .போகட்டும்   என்னால்  இவரைப்போல்  ஹிப்பிபோல் வாழமுடியாது  திருமணத்தை  நான் தவம்  மாதிரி நினைப்பவள் போனால் போகட்டும்  

தோழி  சொன்னது போல்  இவனை நினைத்து  நான்  ஏன் என்னை  தனிமை படுத்திக் கொள்ளணும், யாரை நம்பி நான் பிறந்தேன் ? உதறிவிட்டு  எழுந்தாள் .

எழுந்து குளித்தாள், புத்தாடை அணிந்து கீழே போனாள், இவளைப் பார்த்த மொத்த குடும்பமும்  அசந்து போனது ,ஏய் வசந்தி ,வா வெடி  கொளுத்துவோம் என்று தங்கையை கூப்பிட - வசந்தி அக்காவின் மாற்றத்தைப் பார்த்து  எல்லோரும்  வியந்து   உற்சாகமானார்கள்  அந்த தீபாவளி இனிதாக  நடந்தது.

 

- சரஸ்வதி ராசேந்திரன்

by Swathi   on 19 Jan 2015  1 Comments
Tags: Saraswathi Rajendran   Pandigai   Festival   சரஸ்வதி ராசேந்திரன்   பண்டிகை        
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில்  தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
கலாச்சார மீறல் - சரஸ்வதி ராசேந்திரன் கலாச்சார மீறல் - சரஸ்வதி ராசேந்திரன்
செத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன் செத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன்
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன் ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன்
சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா.... சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா....
ரத்து - சரஸ்வதி ராசேந்திரன் ரத்து - சரஸ்வதி ராசேந்திரன்
கருத்துகள்
04-Aug-2015 06:41:33 abu said : Report Abuse
மிகவும் யதார்த்தமான கதை . வாழ்வு ஒரு முறைதான் அதை நாம் வாழ வேண்டும். எதற்காகவும் சோர்வடைய கூடாது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.