LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அப்பா… வேணாம்ப்பா… குடி நோயாளிகள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் !!

நல்ல நிறுவனத்தில் மரியாதைக்குரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதனின் கதை தான் ’’அப்பா..வேணாம்ப்பா‘’. குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பண்பான மனைவி, இரண்டு குழந்தைகள், நல்ல பதவி, என எல்லாம் இருந்தாலும் அவருக்குரிய மிகப்பெரிய பிரச்னை மது குடிப்பது தான். திருமணமாவதற்கு முன்பே அவரிடம் இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி காலை எழுந்தவுடனேயே குடித்தே ஆக வேண்டும் என்ற மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

 

அந்த குடிப்பழக்கம் அவருடைய மானம், மரியாதை, வேலை, சொந்தம், நட்பு என எல்லாவற்றையும் இழக்க வைக்கிறது. அதற்குப் பின்னும் கூட அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. அவரால் ஏற்பட்ட தாங்க முடியாத பிரச்னைகளின் காரணமாக அவருடைய மனைவி, குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிகிறார்.  அதுவரை இருந்து வந்த மனைவியின் ஆதரவும் போன பின் பிச்சைக்காரன் போல் வாழ்கிறார். அப்பொழுதும் குடியை அவரால் நிறுத்த முடியவில்லை. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக அதே மருத்துவமனையில் உள்ள குடிகாரர்களுக்கான மருத்துவ சிகிச்சையிலும் சேர்கிறார். அந்த நிலையிலும் மனைவி அவரை காண வரவில்லை.

 

அங்கு தான் வாழ்க்கையில் முதன் முதலாக தான் ’’குடிநோயாளி’’ என்பதை உணர்கிறார். சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போல் கட்டுப்படுத்த முடியாத குடியும் ஒரு நோய் என்பதை உணர்கிறார். சுமார் இரண்டு மாதங்கள் சிகிச்சைக்குப் பின் வித்தியாசமான மனிதனாக வெளிவரும் சேகரை மனைவி உட்பட சமுதாயமே குடிகாரனாகத் தான் பார்க்கிறது. வேலை இல்லாமலும் , தங்க இடமில்லாமலும் துன்பப் பட்ட அவர் குடிநோயாளிகளின் உதவியால் வாழ்க்கையை தெரிந்து கொள்கிறார்.

 

மீண்டும் அவமானப்பட்டு மறுபடி குடிக்கிறார். ஆனால் இந்த முறை அதைத் தொடராமல் ’’தான் வாழ்க்கை முழுவதுமே குடிநோயாளிதான், குடியைத் தொடாமல் இருப்பது மட்டும்தான் அதற்கு ஒரே மருந்து’’ என்பதை மனப்பூர்வமாக உணர்கிறார். தமிழ்நாடு உட்பட உலகெங்கிலும் உள்ள குடிநோயாளிகளுக்கான ‘’ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’’ என்ற அமைப்பின் உதவியை நாடுகிறார்.

 

அவரைப் போன்ற குடிநோயாளிகள் சந்தித்து தங்கள் வாழ்க்கையைப் பரிமாறிக்கொள்ளும் கூட்டங்களுக்குத் தொடர்ந்து போகிறார். அது அவரின் மனநிலையை மாற்றுகிறது. ஒரு புது மனிதனாக மாறுகிறார்.

 

அதன் பின் அவரின் குடும்பத்துடன் இணைகிறாரா? இல்லையா? என்பதுதான் ‘’அப்பா…வேணாம்ப்பா…’’ என்ற இத்திரைப்படத்தின் கதை.

Appa Venampa Movie Official Poster
by Swathi   on 08 Dec 2014  0 Comments
Tags: Appa Venampa   அப்பா… வேணாம்ப்பா…                 
 தொடர்புடையவை-Related Articles
அப்பா… வேணாம்ப்பா… குடி நோயாளிகள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் !! அப்பா… வேணாம்ப்பா… குடி நோயாளிகள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.