LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அப்பாவுடன் வாழ்ந்த கணங்கள்

கொண்டு வந்த பணத்தை

அம்மாவின் கைகளில் கொடுத்து

பற்றாக்குறைக்கு அம்மாவிடம் வசவு

வாங்கி கைகட்டி நின்ற கணங்கள் !.

 

இரு புறமும் இருவர்களின்

பிஞ்சு விரல்களை இறுக்கி

பிடித்து நடை போட்ட கணங்கள் !.

 

தவறுகள் செய்தால் அடிக்கவும்

ஓங்கிய கரங்கள், சில நேரம்

அம்மாவும் அதில் இருந்த கணங்கள் !

 

விரித்து வைத்த கரங்கள்,

ஆளுக்கொரு தலையணையாய்,

அம்மாவும் சில நேரம் தலை

வைத்து படுத்த கணங்கள் !

 

கூப்பிய கரங்கள் அனைவரையும்

திருமணத்திற்கு வரவேற்று, தலை

மேல் கரம் வைத்து

வழி அனுப்பிய கணங்கள் !

 

பேர குழந்தைகளை வாரி

எடுத்த கொஞ்சிய கணங்கள் !.

 

இன்று யாரோ கையை

கட்டு என்கிறார்கள், கால்

விரலையும் கட்டு என்கிறார்கள்,

விடை பெற வேண்டுமாம்

உலகத்தை விட்டு !.

Living with Dad
by Dhamotharan.S   on 29 Aug 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.