LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

அரைபிளேடும் அமைச்சரும்

நானும் அவரும் ( அமைச்சர் கக்கன் ) ஒரு சமயம் ஒரே இரயில் பெட்டியில் பிரயாணம் செய்ய நேர்ந்தது . இருவரும் மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம் .

நான் அக்காலத்தில் மிகவும் ஆடம்பரப் பிரியனாய் இருந்தேன் . எலக்ட்ரிக் ஷேவரில் தான் சவரம் . ஒடிகோலன் கலந்த After Shave Lotion, ஸ்நோ பவுடர் இத்யாதிகளுடன் நான் இருப்பதைப் பார்த்துச் சிரித்தார் திரு . கக்கன் .

‘இது என்னங்க அவ்வளவு பெரிய வேலையா ? நம்ம வழக்கம் இவ்வளவு தாங்க’ என்று சொல்லி ஒரு பிளேடை எடுத்தார் . குறுக்கில் பாதியாக உடைத்தார் . ஒரு பாதியால் மளமளவென்று முகச்சவரம் செய்து கொண்டார் . ஒரு கீறல் , ஒரு வெட்டு , சிறு ரத்தக் கசிவு ஒன்றுமில்லாத அந்த லாவகத்தை நான் ரசித்தேன் .

அவரது குரலும் சிரிப்பும் என் செவியில் இப்போதும் ஒலிக்கிறது . சிந்தையில் அவர் முகம் தெரிகிறது . மேலும் திரு . கக்கன் சொன்னார் ,

‘இது ஜெயிலிலிருந்த காலத்துப் பழக்கம் , மந்திரியானா மாறிடுமா ? ஒரு சின்ன வித்தியாசம் உண்டுங்க , அந்தப் பாதியை இப்ப சமயத்திலே மறந்து அப்படியே போட்டுடறேன் . முந்தியெல்லாம் அதையும் பத்திரமா எடுத்து வெச்சுக்குவோம் . எப்பவும் சிக்கனமா இருக்கிறது தாங்க நல்லது’

நான் காந்திஜியை நினைத்தேன்

- ஜெயகாந்தனின் ,

‘யோசிக்கும் வேளையில் ….’ என்ற நூலிலிருந்து .

இவ்வாறு தமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் காந்தியின் தொண்டனாக வாழ்ந்து காட்டியவர் கக்கன் . அரசியலில் பெறுகிற வெற்றி என்பது தொண்டு செய்ய மக்கள் தமக்கு வழங்கும் ஆயுதம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தார் . ‘ சமுதாயத் தொண்டு செய்ய அரசியல் பணியின் உதவியை எடுத்துக் கொள்கிறேன்’ என்ற காந்தியடிகளின் வாக்கினைக் கக்கன் தமது வாழ்க்கையாகவே அமைத்துக் கொண்டார் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.