LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை!

”அறம்” திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். முதலில் இது தமிழ் சினிமாவிற்கு மிகவும் அவசியமான திரைப்படம். அனைவரும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய திரைப்படம்.

இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை!

பிரம்மாண்டத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் மட்டுமே காட்டி “ஹாலிவுட்” தரத்தினை எட்டிப் பிடித்துவிட்டதாக மார் தட்டிக்கொண்ட இயக்குனர்களுக்கிடையே, அந்த ஹாலிவுட்டிற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த தரத்தினை கதையிலும் கருத்திலும் காட்டியிருக்கிறார் இயக்குனர் கோபி நயினார்!

சினிமா இரசிகர்களை திருப்திப்படுத்த எத்தனை பாடல்கள் வைக்கலாம், எத்தனை சண்டைக்காட்சிகள் வைக்கலாம், பாடல் காட்சிகளை எந்த வெளிநாட்டுப் பிரதேசத்தில் படம் பிடிக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கும் இயக்குனர்களிடையே, ஒரு வரண்ட கள்ளிக் காட்டில் இருக்கும் ஒரு ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றியே ஒரு முழு திரைப்படத்தையும் சுவை குறையாமல், விறுவிறுப்புடனும், நெகிழ்ச்சியுடனும் எடுத்துக் காட்டியிருக்கும் கோபி நயினாரை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை!

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், சூர்யா, அஜித் போன்ற ஆண் சூப்பர் ஸ்டார்களே அரசியலும் அறமும் பேசிய அந்த க்ளிஷே பிம்பத்தினை உடைத்து அதில் ஒரு பெண்ணைப் பொருத்தியது மிகவும் வரவேற்கத்தக்கது! நயன்தாராவும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவில் பெண்களின் சித்தரிப்பு குறித்து நம்மைத் தலை நிமிரச் செய்திருக்கிறது அறம்!

விண்வெளிக்கு ராக்கெட் விடும் இந்தியாவில் 350 குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு அதிர்ச்சியான செய்தி?! நமது அறிவியல் ஆராய்ச்சிகளும் தொழில்நுட்பங்களும் நமக்குப் பயன்படாவிட்டால் பின் எதற்கு?!

 

-தாரா சிவா , வெர்ஜினியா 

by Swathi   on 15 Nov 2017  0 Comments
Tags: Gopi Nainar   கோபி நயினார்   அறம்   Aramm           
 தொடர்புடையவை-Related Articles
வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
உன் தாலி........! உன் தாலி........!
நட்சத்திர வார பலன்கள் (10 – 12 – 2017 முதல் 16 -12 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (10 – 12 – 2017 முதல் 16 -12 – 2017 வரை)
”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும்  டிசம்பர் 18 முதல் 25 வரை ”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும் டிசம்பர் 18 முதல் 25 வரை
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு  - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது
ஆ காக்கும் அகமது - உங்களது சொந்த மாடு திட்டம் - திண்டிவனத்தை கலக்கும் பாய் பண்ணை ஆ காக்கும் அகமது - உங்களது சொந்த மாடு திட்டம் - திண்டிவனத்தை கலக்கும் பாய் பண்ணை
மழை பெய்து முடிந்த  பிறகு நெற்பயிர் தோகைகள்  மஞ்சள்  நிறத்தில் இருந்தால் மழை பெய்து முடிந்த பிறகு நெற்பயிர் தோகைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.