LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அர்ஜெண்டினா நாட்டில் மாயமான நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டிற்குப் பிறகு கண்டுபிடிப்பு!

அர்ஜெண்டினாவின் சன் ஹுவான் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

அர்ஜென்டினாவின் மார்டெல் பிளாடா கடற்படை தளத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி 44 சிப்பந்திகளுடன் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. நீர்முழ்கிக் கப்பலின் பேட்டரி அமைப்பில் தண்ணீர் புகுந்ததால் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சன் ஹுவான் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது.

இதை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை அதிகாரிகள் ஈடிபட்டனர் மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசுகள் தேடும் பணிக்கு உதவிகள் செய்தன. நீண்ட நாட்களாக தேடியும் கப்பல் இருக்கும் இடம் தெரிய வராததால், கடலில் மூழ்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கப்பலை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கிய முதலமாண்டு நினைவு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் 800 மீட்டர் ஆழத்தில் அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அர்ஜெண்டினக் கடற்படை கூறியது.

இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலை மேலே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்தக் கப்பல் எப்படி மூழ்கியது, மீண்டும் அந்தக் கப்பல் மிதக்குமா? அதில் இருந்த சிப்பந்திகளின் நிலை என்னவானது? என அவர்களது உறவினர்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, அதற்கான பதிலை தெரிவிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

by Mani Bharathi   on 20 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின! எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!
சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை! சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை!
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் "வலைத்தமிழ் மொட்டு" வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு -  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
முதன்முறையாக பூமியைப் போன்ற அளவில் புதிய கிரகத்தை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு! முதன்முறையாக பூமியைப் போன்ற அளவில் புதிய கிரகத்தை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியீடு! செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியீடு!
பூமிக்கு வரும் காந்தப்புயல்: கொடைக்கானல் ஆராய்ச்சி மையம் நாசாவுடன் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை தகவல்கள்! பூமிக்கு வரும் காந்தப்புயல்: கொடைக்கானல் ஆராய்ச்சி மையம் நாசாவுடன் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை தகவல்கள்!
முதன் முறையாக வானில்  பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்! முதன் முறையாக வானில் பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.