|
||||||||
அரிசி அடை(arisi adai) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - அரை கப், பச்சரிசி - முக்கால் கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், இஞ்சி-சிறிது, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஊற விடவும். பிறகு, அரிசியைக் களைந்து மிளகு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். 2.பின்பு இந்த மாவுடன் தேங்காய்ப்பால், துருவிய தேங்காய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். 3.கல் காய்ந்ததும் அடை தட்டி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|