LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்

     ஒரு காட்டில் உடல் கொழுத்து பலம் மிகுந்த சிங்கம் ஒன்று வசித்த வந்தது.அந்தச் சிங்கம் ஒரு வரைமுறையின்றி நாள்தோறும் கண்முன் தென்படும் விலங்குகளையெல்லாம் அடித்துக் கொன்ற தின்று வந்தது.பசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்முன் தென்படும் விலங்குகளைக் கொன்று அழிப்பது அதன் பொழுது போக்காக இருந்தது.சிங்கத்தின் அந்த அக்கிரமச் செயலால் பீதியும், கவலையும் அடைந்த வனவிலங்குகள் ஒருநாள் ஒன்று திரண்டு சிங்கத்திடம் சென்றன.அனைத்து விலங்குகளும் சிங்கத்திடம் மண்டியிட்டு வணங்கி அரசப் பெருமானே. தங்கள் குடிமக்களாகிய எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டிய தாங்கள் எங்கள் இனத்தவர்களைக் கண்டபடி அழித்து நிர்மூலப் படுத்துவது நியாயமாகுமா ?


     மன்னராகிய தாங்கள் பசி நீங்கப் பெற்றவராக உடல் வலிமை மிக்கவராக இருந்தால்தான் எங்களுக்கு நிச்சயமான பாதுகாப்பு கிட்டும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். எங்களைப் போன்ற விலங்குகள் தான் உங்களுக்கு உணவாக முடியும் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா ? தங்களுக்குத் தேவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களைக் கொன்றழிப்பது தங்களின் விளையாட்டு என்று ஆகிவிட்டால் நாங்கள அனைவரும் பூண்டற்றுப் போய் விடுவோம், அப்போது தாங்கள் பசி நீங்க வழியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டி நேரிடும் அல்லவா!இவ்வாறெல்லாம் வன விலங்குகள் மிகவும் பணிவுடன் கூறின. சரி நான் என்ன செய்ய வேண்டுமென்ற எதிர்பார்க்கிறீர்கள் ? என்று சிங்கம் கேட்டது.


     மகிமை மிக்க மன்னவா, நமக்குள் ஓர் ஏற்பாடு செய்துக் கொள்வோம். இன்று முதல் தங்களுடைய உணவு நேரத்தில் நாஙகள் முறை வைத்துக் கொண்டு எங்களில் ஒருவரை உணவாக அனுப்புகிறோம். தாங்கள் அதோடு அன்றைய தினம் திருப்தியடைந்து விட வேண்டும். தாங்கள் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டால் எங்கள் குலமும் படு நாசத்திலிருந்து தப்பிப் பிழைக்கும், தங்களுக்கும் தட்டின்றி வாழ்நாள் முழுவதும் உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.இவ்வாறு வன விலங்குகள் ஒருமித்த மனத்துடன் ஒரு திட்டத்தைச் சிங்கத்திடம் சமர்ப்பித்தன. சிங்கம் யோசித்துப் பார்த்தது.காட்டில் வன விலங்குகள் எல்லாம் ஒரு குறுகிய காலத்தில் பூண்டற்று போனால் அப்புறம் பசிக்கு விலங்குகள் கிடைக்காமலேயே போய்விடும். ஆகவே விலங்குகளின் கோரிக்கையை ஏற்பதுதான் நல்லது என்ற முடிவுக்குச் சிங்கம் வந்தது.

by kalaiselvi   on 07 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தந்தையை திருத்தும் மகன் தந்தையை திருத்தும் மகன்
புதிய நண்பர்கள் புதிய நண்பர்கள்
தப்பி வந்த முதலை தப்பி வந்த முதலை
ஒரு நீண்ட பயணம் ஒரு நீண்ட பயணம்
நாணயஸ்தன் நாணயஸ்தன்
வகுப்புக்கு தாமதம் வகுப்புக்கு தாமதம்
பரிசும் ஊக்கமும் பரிசும் ஊக்கமும்
முட்டாள் வேலைக்காரன்! முட்டாள் வேலைக்காரன்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.