LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்!

மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்!

மருத்துவர் கா. கணசேன் அரியலூரில் தமிழ் அன்னை மருத்துவமனை நடத்தி வருகிறார் . ஆங்கில வழி மருத்துவமுறையை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1968 ல் படித்து முடித்தவர் இவர் . தற்போது இவருக்கு வயது 71 . மருத்துவராக இருந்தாலும் தமிழ் மீது அதீத பற்று கொண்ட இவர் தன்னுடைய மருத்துவ சீட்டையே தமிழில் எழுத துவங்கி உள்ளார் என்றால் பாருங்களேன் . ஏறத்தாள 17 ஆண்டுகளாக இவர் தமிழ் மொழியில் தான்
மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார் . தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தமிழில்
பேசுமாறு அறிவுறுத்துகிறார். ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார் . 

இவரிடம் வரும் நோயாளிகளும் இவரிடம் தூய தமிழ் மொழியிலேயே உரையாடுகிறார்கள்.
மருந்து சீட்டில் தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஏற்படும்படியான வாசகங்களை எழுதி உள்ளார் .

தமிழன் நீ என்றால் ஆங்கில கலப்பின்றி இனிய தமிழில் பேசு ' போன்ற வாசகங்களை எழுதியிள்ளார் . தன்னுடைய மருத்துவ பட்டப் படிப்பையும் தமிழில் மொழி பெயர்த்து சுருக்கியும் எழுதி உள்ளதை பார்க்கலாம் . மேலும் தமிழர்களின் தி. பி. திருவள்ளுவர் ஆண்டையும் எழுதுகிறார் . கிபி ஆண்டையும் குறிப்பிடுகிறார் . தமிழ் ஆண்டையும் தமிழ் மாதத்தையும் குறிப்பிட்டு எழுதும் உலகில் ஒரே மருத்துவர் இவராகத் தான் இருப்பார்.
 
மேலும் ஆங்கில மருத்துகளை தமிழில் எழுதும் போது ஒலி அளவில் வேறுபாடு வரும் . இதனால் மருந்து வழங்குவோருக்கு குழப்பம் ஏற்படும் . அக் குழப்பத்தை நீக்கும் வகையில் மருந்து சீட்டில் இடது புறத்தில் ஆங்கில ஓசைக்கு நிகரான தமிழ் வரி வடிவத்தையும் குறிப்பிட்டு காட்டியுள்ளார்.

 

தமிழில் மருந்து சீட்டு


இப்படியான தமிழ் பற்று உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று நாம் கேட்கையில் , அவர் 'எனக்கே தெரியவில்லை தமிழ் பற்று எனக்கு இப்போது முற்றிவிட்டது' எனக் கூறினார். அருகில் உள்ள ஸ்டார் மொபைல் என்ற அலைபேசி கடைக்கு விண்மீன் கைபேசியகம்
என்று தமிழ் பெயராக மாற்றுமாறு அறிவுரை செய்துள்ளார் . யாரை பார்த்தாலும் தூய தமிழில் உரையாட வலியுறுத்துகிறார். 'தமிழா நீ தமிழில் பேசு' என்ற நூலையும் இப்போது வெளியிட உள்ளார் இவரை போன்ற சிறந்த மொழிப் பற்றாளர்கள் இருக்கும் வரை தமிழுக்கு என்றுமே அழிவில்லை என்பது மட்டும் உறுதி. மருத்துவத்துறையில் ஆங்கிலம் இல்லாமல்
ஒன்றுமே செய்ய முடியாது என நினைபவர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும் . தமிழ்
மொழியை மருத்துவத்துறையில் வளர்க்க வேண்டும் .

வாழ்க தமிழ் !

- நைனா முகமது

by Swathi   on 18 Aug 2014  2 Comments
Tags: தமிழ் மருத்துவர்   அரியலூர் மருத்துவர்   தமிழ் அன்னை மருத்துவமனை   Tamil Doctor   Tamil Annai Hospital        
 தொடர்புடையவை-Related Articles
மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்! மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்!
கருத்துகள்
30-Aug-2014 08:29:55 ARULPRAKASH.A said : Report Abuse
Ungalai Neril Paarthal Kannirudan Kaalil Vilunthu Vanankuven....Iya. Naan Maruthuva Thurail Aaivaga Nutpunar Pattayam Mudithullen(DMLT)....Iya. Naanum Ithai Kadaipidipen.....
 
30-Aug-2014 08:29:13 ARULPRAKASH.A said : Report Abuse
Ungalai Neril Paarthal Kannirudan Kalil Vilunthu Vanankuve....Iya. Nan Maruthuva Thurail Aaivaga Nutpunar Pattayam Mudithullen(DMLT)....Iya. Naanum Ithai Kadaipidipen.....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.