LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    இயற்கை விவசாயம் Print Friendly and PDF

இயற்கை சமையலில் அசத்தும் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் !!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் கடந்த ஒரு வருடமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. 


ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் உலக்கை, மண்பானை தண்ணீர், அதை குடிக்க மண் குடுவை, சுவற்றில் பளீர் நிறத்தில் அழகாக எழுதப்பட்ட சிறுதானியங்களின் மருத்துவ குணங்களைச் சொல்லும் வாசகங்கள்... எனப் பழமை மாறாமல் இருக்கிறது, இந்த ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய உணவகம்.


சமையல், வரவேற்பு, உபசரிப்பு என இங்கு மற்ற பணியில் இருப்பவர்கள் அனைவரும் பெண்களே !


ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் குறித்து அதன் உரிமையாளர் லட்சுமி பேசும்போது, 


இந்த உணவகத்தை கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறோம். 


கம்பு, ராகி ,சோளம் ,வரகு,தினை, சாமை, குதிரைவாலி, மாப்பிளைசம்பா அரிசி, கருங்குருவை அரிசி , காட்டுயானம் அரிசி ,சிகப்புக்கவுனிஅரிசி ,கருப்புக்கவுனி அரிசி போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட இட்லி ,தோசை ,பொங்கல் ,ஆப்பம் ,கார தோசை ,குஸ்கா போன்றவை தயார் செய்கிறோம். தினம் ஒரு கீரை சூப், நெல்லிசாறு, இஞ்சிசாறு, ஆவாரம்பூ டீ , போன்றவையும் கிடைக்கிறது . வெள்ளைசர்க்கரை, மைதா, போன்றவை உபயோகம் இல்லை. 


தினை முறுக்கு, கம்புமுருக்கு, குதிரைவாலிமுருக்கு, சாமைமுறுக்கு, வரகுகாரசேவு, எள்உருண்டை, கடலை உருண்டை , ஜவ்வரசிலட்டு போன்ற கார மற்றும் இனிப்பு வகைகளும் கிடைக்கின்றன.


முகவரி


ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம்,


31.பாபுகான் வீதி, உடுமலைப்பேட்டை ., 


திருப்பூர் மாவட்டம்.


செல்-9489324220.

by Swathi   on 11 Jun 2014  1 Comments
Tags: Arogya Unavagam   Parambariya Unavagam   இயற்கை உணவகம்   பாரம்பரிய உணவகம்           
 தொடர்புடையவை-Related Articles
இயற்கை சமையலில் அசத்தும் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் !! இயற்கை சமையலில் அசத்தும் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் !!
இயற்கை உணவுகளை பிரபலப் படுத்தும் தாய்வழி இயற்கை உணவகம் !! இயற்கை உணவுகளை பிரபலப் படுத்தும் தாய்வழி இயற்கை உணவகம் !!
கருத்துகள்
06-Mar-2017 20:47:08 சந்தான அரவிந்த் said : Report Abuse
இ விஸ்டோஸ்டர்ட் நாட்டுரல் அக்ரிகழட்டுறே pleasehelpmeandguideme சார்/மேடம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.