LOGO
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம்

 

பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக் கலந்த ஒரு பானம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது அடுப்பில் வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக் கூடிய பானவகையைச் சேர்ந்தது. தேர்த் திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி தேரை வடம்பிடித்து இழுத்து வருவார்கள். வேர்க்க, விறு விறுக்க தேர் இழுத்து வரும் பக்தர்களுக்காக பானகம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறு நிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள்.

இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத் தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள். நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத் தூண்டும்.

 தேவையான பொருட்கள்:

  1. புளி –  எலுமிச்சை அளவிலான உருண்டை
  2. வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
  3. ஏலக்காய் பொடி –   1/4 டீ ஸ்பூன்
  4. சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
  5. மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
  6. தண்ணீர் – 2 கப்


செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும்.

கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும்.

வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத் தூள் சேர்த்து கலக்கவும்.

இதை அப்படியே பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும்.

கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம். 

Traditional Jaggery Drink for Fatigue and Tiredness during Hot Summer Days

The taste of sweet, sour and spicy all three mixed together and form a jaggerry drink. A jaggery drink removes fatigue and gives refreshment for body. No need to boil we make it fresh and drink. If you are not yet a method of preparing jaggery drink , just taste it for a while. With a sweet and sour taste of drink stimulate you to drink again and again. 

Ingredients for Jaggery Drink : 

Tamarind - Lemon Sized

Jaggery - 2 Tbsp

Cardamom Powder - 1/4 Tsp

Dry Ginger Powder - 1/4 Tsp

Pepper Powder - 1/4 Tsp 

Water - 2 Cups

 

Method : 

Please tap the jaggery powder and dissolve the tamarind in 2 cups water. Mix the jaggery powder into tamarind solution and stir until jaggery completely dissolved. Finally filter it. Then add pepper powder, cardamom powder, dry ginger powder stir well and drink. 

Pepper and dry ginger is a good throat medicines. 

by Swathi   on 30 Nov 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
என்ன செய்தால் உணவாயுப்பொருள்கள் கெடாமல் இருக்கும்? என்ன செய்தால் உணவாயுப்பொருள்கள் கெடாமல் இருக்கும்?
உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid
உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது?
தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில் தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்
தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்.. தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ் ..டிப்ஸ்.. டிப்ஸ் ..டிப்ஸ்..
கிச்சன் கையேடு கிச்சன் கையேடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.