LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தேனீ மாவட்டத்தை சேர்ந்த திருமதி அமுதா பெரியசாமி இயேசு கலைஞரை வழியனுப்ப நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி

திருமதி அமுதா பெரியசாமி IAS தேனீ மாவட்டத்தை சேர்ந்தவர். எனக்கு மிகவும் பிடித்த IAS அதிகாரிகளில் இவரும் ஒருவர்.1997 - 1998 ல் ஈரோடு மாவட்ட திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர். 


அவரும் அன்று பணியாற்றிய திரு.கருப்பையா பாண்டியன், IAS அவர்களும் எனது இல்லத்திற்கும், எனது கிராமத்திற்கும், பல பொது காரியங்களுக்காக பலமுறை வந்து இருக்கின்றனர். 

அன்று முதல் இன்று வரை மிக நேர்மையாகவும், ஏற்கும் பணியை சிறப்பாக செப்பனே ஆற்றி பெருமை சேர்ப்பவர் திருமதி. அமுதா பெரியசாமி IAS .

 

சாமானியன், ஏழை, கீழ்த்தட்டு மக்களின் சிரமங்களை உணர்ந்து என்றுமே தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் பாடுபட்டு கொண்டு இருக்கும் ஒரு உன்னதமான அதிகாரி.

 

2004 ஆம் வருடம் சுனாமிக்கு பின் தமிழக பெண்கள் நல வாரியத் தலைவராக மிக சிறந்த சேவையை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆற்றியவர். அதே போல சென்னை வெள்ளத்தின் போது அக்கரமிப்பு செய்து இருந்த பெரும் அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பெரும் செல்வாக்குடையவர்களின் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு பல ஆயிரம் மக்களின் உயிரையும், உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும், காப்பாற்றியவர். சென்னை தாம்பரம் அருகே JCB வாகன ஓட்டுநர் பெரும் அரசியல்வாதிகள் மிரட்டலுக்கு உள்ளாக்கி பணியை நிறுத்தியபோது, தானே வாகனத்தை இயக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றியவர்.

 

கடந்த வருடம் PRIDE OF TAMILNADU விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான பிரிவில் விருதை நான் பெரும் பொழுது, நான் பெற்ற அந்த விருதை விட, அதிகாரிகளுக்கான பிரிவில் திருமதி. அமுதா பெரியசாமி IAS அவர்களுடன் சேர்ந்து பெற்றதனாலேயே பெரும் உவகை கொண்டேன்.

 

நேற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு பிறகு தமிழக அரசின் நன்முடிவாய் ஒரு நேர்மையான அதிகாரியான,திருமதி.அமுதா பெரியசாமி IAS , தனி சிறப்பு அதிகாரியாய் நியமித்து (OSD) அரசு சார்பாக ஆயத்த பணிகளையும் ஒருங்கிணைப்பு பணிகளையும் அவர் செயல் ஆற்றியதையும் கண்டு நெஞ்சம் மகிழ்கிறது. இறுதியாய் அவரும் ஒரு பிடி மண்ணை தந்து கலைஞரின் அடக்கத்திற்கு மரியாதையை செய்து வணங்கி நடந்தது பொழுது அவரது பண்பிற்கான எடுத்துக்காட்டாகவே அது அமைந்தது.

திருமதி. அமுதா பெரியசாமி IAS அவர்களை முன்னோடியாக கொண்டு, நேர்மையாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் பணிபுரிய வேண்டும் என பல இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.

 

தமிழுக்கும் தமிழர்க்கும் அவரது சேவை தொடரட்டும்.

 

வாழ்க பல்லாண்டு !!

 

- கார்த்திகேய சிவசேனாபதி 
09 /08 /2018

by Swathi   on 09 Aug 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்
சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு! சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு!
தபால் துறை தேர்வுகளை தமிழிலும் நடத்துவதற்கு குரல் எழுப்பி வெற்றி கண்ட தமிழக எம்.பி.க்களுக்கு நன்றி! தபால் துறை தேர்வுகளை தமிழிலும் நடத்துவதற்கு குரல் எழுப்பி வெற்றி கண்ட தமிழக எம்.பி.க்களுக்கு நன்றி!
கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்! கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்!
5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை! 5 ஆம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மேதை!
தீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தேதி- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு! தீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தேதி- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக பல்கலைக் கழகங்கள் அதிரடி உத்தரவு! தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக பல்கலைக் கழகங்கள் அதிரடி உத்தரவு!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா, மெல்லிசை மன்னரை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா, மெல்லிசை மன்னரை "நினைத்தாலே இனிக்கும்"
கருத்துகள்
10-Aug-2018 06:17:20 தாமோதரன்.ஸ்ரீ said : Report Abuse
யார் அந்த பெண்? மிகவும் பண்பாக, அதே நேரத்தில் விரைவாகவும் செயல்படுவதை பார்த்து வியந்தோம். இப்பொழுது தெரிந்தது, அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று. வாழ்த்துக்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.