LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வுப் பணிகள்

 தமிழ்நாடு அரசு,தொல்லியல் துறை இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவமிக்க  இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுள்ளது .அழகன்குளம் ,கொடுமணல்,கொற்கை ,பூம்புகார் ,தோண்டி,திருக்கோவிலூர் ,மாங்குளம்,மாங்குடி,பேரூர் ,பரிகுளம் ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொண்டு அப்படத்தின் தொன்மை மற்றும் பண்பாட்டுக் கூறுகள்  வெளிக்கொணரப்பட்டன .

 

தமிழ்நாடு அரசு,தொல்லியல் துறை 2016-2017 ஆம் ஆண்டு ரூ .55 இலட்சம் மதிப்பில் விரிவான தொல்லியல் அகழாய்வினை மேற்கொண்ட  தமிழகத்திற்கும் ரோம் நாட்டிற்கும் இடையேயான வர்த்தக தொடர்பினை வெளிப்படுத்தியது. அதே போன்று தமிழகத்தில் வைகைக்கரையில் சங்ககால நாகரிகத்தினை வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் 2017-2018 ஆம் ஆண்டு மற்றும் 2018-2019 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ .55 இலட்சம் மற்றும் ரூ .47 இலட்சம் மதிப்பில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

 

இது போன்று தமிழகத்தில் எண்ணற்ற இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள்,ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களால் தெடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் பண்பாடு ,மரபினை வெளிக்கொணரும் வகையில் தமிழகத்தின்  தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடர் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள தொல்லியல் துறை திட்டமிடப்பட்டுள்ளது . 

 

2019-2020 ஆம் ஆண்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட  இருக்கும் இடங்கள்: 

 

  1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்கள்,சிவகங்கை மாவட்டம் 
  2. ஆதிச்சநல்லூர் ,தூத்துக்குடி மாவட்டம். 
  3. கொடுமணல்,ஈரோடு  மாவட்டம். 
  4. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் .

 

2019-2020 ஆம் ஆண்டில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கும் பகுதிகள்: 

 

1) வேலூர் ,திருவண்ணாமலை ,தருமபுரி ,கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரலாற்றுக்கு  முந்தைய கால தொல்லியல் இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவுள்ள இடங்களைக் கண்டறிவதற்கு விரிவான கள ஆய்வு .

 

2) தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் தாமிரபரணி  ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள தொன்மை வாய்ந்த பகுதிகளைக் கண்டறிய விரிவான கள ஆய்வு .

 

மாநில அரசின் பரிந்துரையின்படி மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய (CABA) நிலைக்குக் குழுவின் ஒப்புதலுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளன. மேற்படி நிலைக்  குழுவின் அனுமதி பெற்ற பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கண்ட இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் தொடங்கப்படவுள்ளன. 

 

*கீழடி

                சங்க காலத் தமிழர்களின் வாழ்வில் சிறப்புகளை வெளிக்கொணரும் விதமாக கீழடி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தொடர் அகழாய்வுகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. கீழடி மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள கொந்தகை ,மணலூர் மற்றும் அகரம் போன்ற பகதிகளில் இந்த ஆண்டு அகழாய்வுகள் செய்திடத் திட்டமிடப்பட்டுள்ளது .

 

ஆதிச்சநல்லூர் 

           கடந்த 1876 மற்றும் 1904 ஆண்டுகளில் செய்யப்பட்ட  அகழாய்வுப் பணிகளுக்குப் பின்னர் சமீபத்தில் கடந்த 2003 முதல் 2005 வரை மத்திய தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தது .அதற்கான முழுமையான அறிக்கையை விரைவில் தயாரித்து வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே, மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், வெண்கலப் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், பொற்பட்டங்கள் மற்றும் மட்பாண்டங்கள் கிடைத்தன.

 

தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆதிச்சநல்லூர் பகுதியில் தொடர் அகழாய்வுகளை மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மக்கள்  வாழ்ந்த பகுதிகள், தொழிற்கூடங்கள் மற்றும் ஈமச் சின்னங்கள் அடங்கிய பகுதிகளை நோக்கியதாக இந்த அகழாய்வுகள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது .

 

கொடுமணல் 

          கடந்த 1985-ஆண்டு முதல் பல கட்டங்களாக இந்திய தொல்லியல்துறை ,தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் மேற்கொண்ட அகழாய்வுகளில் பெருங்கற்காலம்  மற்றும் வரலாற்றுத் தொடக்க காலத்தைச் சார்ந்த பல அரிய கல்மணிகள் தயாரித்தல் ,இரும்பு உருக்குத் தொழிற்கூடங்கள் இருந்ததற்கானச் சான்றுகள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன.எனவே பிற்பகுதியில் தொடர் அகழாய்வு செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது . 

 

கள ஆய்வு 

 

1.சேலம் ,தருமபுரி, கிருஷ்ணகிரி ,வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பழங் கற்காலத்தை சார்ந்த தொல்லியல் இடங்களைக் கண்டறிவதற்கான விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் முறையான அகழாய்வு செய்யப்படும்.

 

2.தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தொன்மை வாய்ந்த  பகுதிகளைக் கண்டறிவதற்கான விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இடைக் கற்காலப் பண்பாடு நிலவிய தொல்லியல் இடங்களில் முறையாக அகழாய்வு செய்வதற்குரிய விரிவான திட்டம் தயாரிக்கப்படும் .

 

ஆழ்கடல் அகழாய்வு 

            பழந்தமிழரின் கடல்கடந்த வாணிகத் தொடர்புகளை ஆழமாக ஆய்வு செய்யும் பொருட்டு ஏற்கனவே தமிழ்நாடு தொல்லியில் துறை பூம்புகார், கொற்கை ,அழகன்குளம் மற்றும் வசவசமுத்திரம் ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொண்டுள்ளது, கிரேக்க, ரோமானிய மற்றும் அரபு நாட்டு வணிகர்களுடான தொடர்பை முறையாக ஆராயும் பொருட்டு சங்ககால மற்றும் இடைக்கால துறைமுக நகரங்கள் அமைந்த பகுதிகளில் ஆழ்கடல் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கடலியல் தேசிய நிறுவனம் (National Institute of Oceeanography)-த்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டங்கள் குறித்து முதற்கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

 

நிதி ஒதுக்கீடு 

          தமிழ்நாட்டில் விரிவான வரலாற்று சிறப்புமிக்க தொன்மை வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்திட வருடந்தோறும் ரூ .2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 28 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.