LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உலக பொதுவாழ்வு சிந்தனையாளர்கள் பட்டியல் 32 வது இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் !!

உலக அளவில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள், வல்லுனர்கள், தலைவர்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இதழான ‘பாரின் பாலிசி' வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலை தன் வாசகர்களிடம் ஆன்லைன் வாக்குபதிவு மூலம் இந்த இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. பெரும்பாலும், அமெரிக்க, ஐரோப்பிய வாசகர்கள் தான் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதலிடத்தில் ஸ்னோடென் :

 

இந்த நூறு பேர் கொண்ட பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது, அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் உயர் அதிகாரி எட்வர்ட் ஸ்னோடன். உலக தலைவர்களை, உலக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை எல்லாம் அமெரிக்க உளவுத்துறை எந்த அளவுக்கு உளவு பார்க்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியவர்.

 

32வது இடத்தில் கெஜ்ரிவால் :

 

இந்த பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 32வது இடம் பெற்றுள்ளார். அரசின் நிர்வாக திறமையற்ற நிலையை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டி, அவர்களை ஈர்த்தவர். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சமீபத்தில் தேர்தலில் பிரபலமான தலைவராக விளங்கியவர். மக்களை இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் என்று இந்த இதழ் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

 

77வது இடத்தில் ஊர்வசி புடாலியா

 

இந்தியாவில் சமூக சேவை செய்து பிரபலமானவர்கள் ஊர்வசி புடாலியா, கவிதா கிருஷ்ணன். இவர்கள் இருவரும் 77 வது இடத்தில் உள்ளனர். ‘இந்தியாவில் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து, திடமான போராட்டங்களில் இறங்கி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தவர்கள் என்று இவர்கள் பற்றி பாரின் பாலிசி இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

மேலும் இந்த பட்டியலில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், ராணுவ அத்துமீறல்களை வெளிச்சம் போட்டு காட்டி பரபரப்பை ஏற்படுத்திய ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, பெண் கல்விக்காக போராடி வரும் சிறுமி மலாலா, சர்வதேச பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ராஜேந்திர பச்சோரி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபி, ஈரான் பிரதமர் ஹசன் ரஹானி, போப் பிரான்சிஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்ற பிரபலங்கள் ஆவர்.

by Swathi   on 12 Dec 2013  0 Comments
Tags: உலக சிந்தனையாளர்கள்   அரவிந்த் கெஜ்ரிவால்   Arvind Kejriwal   Global Thinkers   AAP Leader   Top 100 Global Thinkers   ஆம் ஆத்மி கட்சி  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான  வாழ்த்துக்கள்.... இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்....
பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...! பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...!
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !! டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !!
டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்! டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்! டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்!
டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் !! டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் !!
டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 10 நாளில் முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் - அரவிந் கெஜ்ரிவால் !! டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 10 நாளில் முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் - அரவிந் கெஜ்ரிவால் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.