LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டெல்லி மாநிலத்தின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்பு !!

டெல்லி மாநிலத்தின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை(டிசம்பர் 26) தேதி பதவியேற்க உள்ளார். அவருடன் 6 பேர் அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர். 

 

முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்தி முதன் முதலாக ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, இந்திய தலை நகரில் ஆட்சி அமைக்க இருப்பது இந்திய அரசியலை ஒரு மாற்றுப் பாதைக்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக போகும் 45 வயதே ஆன கெஜ்ரிவால், டெல்லியின் மிக இளம் வயது முதல்வராகப்போகிறார். இவரது தலைமையில் இடம்பெறப்போகும் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை இறுதி செய்வதற்காக அக்கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் சோம்நாத் பாரதி, மணீஷ் சிசோடியா, கிரிஷ் சோனி, ராக்கி பிர்லா, சவுரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திட ஜெயின் ஆகிய 7 பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்பது என இறுதி செய்யப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இளம் வயது அமைச்சர்கள் :

 

கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள அனைவரும் சராசரியாக 40 வயது உடையவர்களாகவே உள்ளனர். இதனால் டெல்லி மாநில சட்டமன்றம், இளைஞர்கள் நிறைந்த மன்றமாக காட்சியளிக்க போகிறது. 

 

மணீஷ் சிசோடியா 

 

அமைச்சர்களில் 41 வயதான மணீஷ் சிசோடியா துணை முதலமைச்சர் ஆக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மணீஷ் சிசோடியா ஒரு பத்திரிகையாளர் ஆவார். அவர், தகவல் அறியும் உரிமை போராட்டத்துக்காக தனது வேலையை ராஜினாமா செய்தவர். கெஜ்ரிவால் நடத்திய எல்லா போராட்டங்களையும் ஒருங்கிணைத்த இவர், கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார்.

 

சோம்நாத் பாரதி

 

39 வயதான சோம்நாத் பாரதி ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். அவர் ஆம் ஆத்மி கட்சியின் சட்டப் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கிறார். 

 

வினோத்குமார்

 

39 வயதான வினோத்குமார், இரண்டு முறை கவுன்சிலராக இருந்தவர். தன் தொகுதியில் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி புகழ் பெற்றவர். 

 

சவுரப் பரத்வாஜ் 

 

39 வயதான சவுரப் பரத்வாஜ் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர். லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தால் கவரப்பட்ட இவர் கெஜ்ரிவாலிடம் இணைந்தார். 

 

ராக்கி பிர்லா

 

இளம் அமைச்சர் டெல்லி மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகானை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் ராக்கி பிர்லா. 26 வயதே ஆன இவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார். அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு லோக்பாலுக்காக போராட களம் இறங்கினார். வங்கியில் ரூ.2½ லட்சம் கடனுடன் இருக்கும் இவர், டெல்லி சட்டமன்றத்தின் இளம் வயது அமைச்சராக இருப்பார் என கூறப்படுகிறது. 

 

ராம்லீலா மைதானம் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற ராம்லீலா மைதானத்தில் நாளைய தினம் பதவியேற்பு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் சிறப்பு அழைப்புகள், விவிஐபி பாஸ் போன்றவை தேவையில்லை என்று கேஜ்ரிவால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

by Swathi   on 24 Dec 2013  0 Comments
Tags: இளம் அமைச்சரவை   டெல்லி சட்டசபை   அரவிந்த் கெஜ்ரிவால்   Aam Aadmi Party   Delhi Government   AAP to form Govt   Delhi Govt  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான  வாழ்த்துக்கள்.... இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்....
தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை.. தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை..
பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...! பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...!
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !! டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !!
டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்! டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்! டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்!
டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் !! டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.