LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

அசை நீட்டம் (அளபெடை)

ஓரசை நீட்டம் ஈரசை அளவே.
கருத்து : சிந்துப்பாக்களின் சீர்கள் ஒவ்வொன்றிலும் உள்ள குறிலசை, நெடிலசைகள் (தனிச் சொல்லுக்கு முன்னும், அரையடி இறுதி, அடியிறுதி இடங்களையும் தவிரப் பிற இடங்களில்) நீள வேண்டுமாயின் அவற்றின் மொத்த நீளம் ஈரசை அளவுள்ளதாக இருக்கும். அதற்குமேல் நீளுதல் இல்லை. 
விளக்கம் : சிந்துப்பாவின் அசைகள் சமமான ஓசையுடையவை. அந்த அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறுதல் இயலாது. அவற்றின் நீளம் பாடுவோரின் பாடும் விரைவைப் பொறுத்தது. பாடகர் மெல்ல நிறுத்தி (மந்தகதியில்) பாடினால் ஒவ்வொரசையும் இரண்டு மாத்திரை அளவும் ஒலிக்கலாம். விரைவாகப் (துரித கதியில்) பாடினால் ஒவ்வோரசையும் அரை மாத்திரையாகவும் ஒலிக்கலாம். எவ்வளவு ஒலித்தாலும் அசைகள் அனைத்தும் சமமான நீளமே ஒலிக்கும். அதற்கேற்றபடி குறில்கள் நீண்டும் நெடில்கள் குறுகியும் ஒலிக்கும். 
சிந்துப்பாடல்களை உருப்படிகளைப் போல கண்ட இடங்களில் நீட்டி முழக்கிப் பாடக்கூடாது. அதில் தனிச் சொல்லுக்கு முன்னும், அரையடி இறுதி, அடியிறுதி இடங்களையும் தவிரப் பிற இடங்களில் எழுத்துகள் இரண்டசைக்கு மேல் நீள்வதில்லை. அங்குள்ள எல்லாச் சீர்களும் அந்நடைக்குரிய எண்ணிக்கையுள்ள அசைகளைக் கொண்டிருக்கும்.
காட்டு : “ஆறுமுக வடிவேலவனே” என்ற கண்ணி (பின் இணைப்பில் பார்க்க) மும்மை நடைப் பாடல் அதற்கேற்றவாறு அதன் ஒவ்வொரு முழுச் சீரிலும் மும்மூன்று அசைகள் உள்ளன. (முழுச்சீர் என்பது முழுதும் எழுத்துகளால் அசைவரக் கூடிய இடங்களில் வௌம் சீர். “ஆறுமுக வடிவேலவனே” என்ற பாடலின் அடி, அரையடிகளின் முதற்பாதியில் நான்கு சீர்களும், பிற்பாதியில் வரும் முதலிரண்டு சீர்களும் முழுச்சீர்கள்) 
நீண்ட அசைகளாக (அளபெடைகளாக) பேச், போச், சோ, கே நா ஆகிய அசைகள் 2 அசையளவு நீளுகின்றன. இந்நீட்டங்களைப் பே எச், போ ஒச், சோஒ, கேஎ, நாஅ என்று அளபெடைகளாக எழுதுவதே முறை. தனிச்சொல்லுக்கு முன்னும், அரையடி இறுதி, அடி இறுதிகளிலும் இப்பாடலில் நீளும் அசைகளை லைஇஇ, லைஇஇஇஇ, சுஉஉஉ, சுஉஉஉஉஉ, லிஇஇஇ, லஇஇஇஇ, னேஎஎஎ, னேஎஎஎஎ, என்று எழுத வேண்டும்.** 
** இசையில் அளவிறந்து இசைக்குங்கால் ஆவி பன்னிரண்டு மாத்திரை ஈறாகவும், ஒற்று பதினொரு மாத்திரை ஈறாகவும் இசைக்கும் என்றார் இசை நூலார் (நன்னூல்: 101, சங்கர நமச்சிவாய உரை)
நெடில் ஏழும், ஙஞணநமன வயலள ஆய்தம் என்னும் பதினோர் ஒற்றுகளும் எழுத்திலக்கணப்படி அளபெடுக்கும் எழுத்துகள். ஆனால் இசையில் இவற்றுடன் குறில் ஐந்தும் அளபெடுக்கும். குறில் அளபெடுப்பது குற்றெழுத்தளபெடை எனப்படும். சுஉஉஉ என்பது குற்றெழுத்தளபெடை.## அளபெடுக்காத வல்லினம் ஆறும், ரழ என்ற மெய்களும், நீள வேண்டிய அசைக்கு இறுதியாக வந்தால் பேஎச், போஒச், வாஅர், வாஅழ், என்பன போல் அம்மெய்களுக்கு முன் உயிர் அளபெடுத்து இறுதியில் (அளபெடை எழுத்துக்குப் பின்) அம்மெய்களைப் பெறும். அளபெடுப்பவை மெய்களாயின் போம்ம்ம்ம் என்பது போல் இறுதி மெய்யே அளபெடுக்கும். ஆனால் தெளிவாகப் பார்த்துப் புரிந்து கொள்வதற்கு ஏற்றபடி இந்நூலில், அளபெடுக்குமிடங்கள் அளபெடை அறிகுறிகளுக்குப் பதில் புள்ளிகளாகக் காட்டப்பட்டுள்ளன.@ இனிவருமிடங்களிலும் இப்புள்ளி உள்ள இடங்கள், அளபெடுக்கும் இடங்களைக் குறிப்பதாகக் கொள்க. 
## இயற்கை அளபெடை செயற்கை அளபெடை எழுத்துப்பே றளபெடை இசைநூ லளபெடை ஒற்றுபே றளபெடை ஒரோவழிக் கூடில் ஐந்தென மொழிப அளபெடை; அவைதாம் குற்றெழுத் தளபெடை நெட்டெழுத் தளபெடை ஒற்றெழுத் தளபெடை எனவொரு மூன்றாய் மொழிமுதல் இடைகடை மூன்றிலும் வருமே. (சுவாமிநாத தேசிகர், 1973:253) @ இசைநூல்களில் உருப்படிகளை இசைக்குறியீட்டில் எழுதும்போது நீட்டங்களை புள்ளியிட்டெழுதுதல், அளபெடை இட்டு எழுதுதல், என்னும் இரண்டு முறைகளும் கடைப் பிடிக்கப்படுகின்றன. (கோமதி சங்கரய்யர். வா.சு.1984, 207, 208) 

10.

தனிச்சொல் முன்னரும் அரைடை இறுதியும் 

அடியின் இறுதியும் அமையும் அசைகள் 

இரண்டிறந் திசைத்தலும் இயல்பா கும்மே.

கருத்து : சிந்துப் பாடல்களில் தனிச் சொல்லுக்கு முன்னரும் அரையடியின் இறுதியிலும், அடியின் இறுதியிலும் அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசை நீளத்திற்கு மேல் நீண்டு இசைத்தலுமுண்டு. 

விளக்கம் : இசையில் எழுத்துகள் அளவிறந்து நீண்டிசைப்பது உண்டு என்பதைத் தொல்காப்பியர்:

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

உளஎன மொழிப இசையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல். எழு. நூ. மரபு: 33)

என்று கூறுகின்றார்.

ஆவியும் ஒற்றும் அளவிறந் திசைத்தலும்

மேவும் இசைவின்ளி பண்டமாற் றாதியின் (நன். 101)

என்ற நன்னூர் நூற்பா உரையில் - இசையில் அளவிறந்திசைக்குங்கால் ஆவி 12 மாத்திரை ஈறாகவும், ஒற்று 11 மாத்திரை ஈறாகவும் இசைக்கும் என்கிறார் இசை நூலார் என்று கூறுகிறார் சங்கர நமசிவாயர். 

தனிச்சொல் வருகின்ற பாடல்களில் அதற்கு முன்புள்ள அசைகள் உரிய அளவு நீண்டிருக்கும் என்பது ஒரு தனித் தன்மையாகும். இத் தன்மையினைப் பிற்காலச் சிந்துப் பாடல்களில் காணலாம். இந்த இயல்பை முதன் முதலாகச் சம்பந்தர் தேவாரத்தில் காண்கிறோம். 

காட்டு :

மாதர் மடப்பிடியும் - மட

அன்னமும் அன்ன தோர்

நடையுடை - மலைமகள் துணையென மகிழ்வர்

பூத இனப்படைநின் - றிசை

பாடவும் ஆடுவர்

அவர்படர்சடைநெடு முடியதோர் புனலர்

வேதமோ டேழிசைபா - டுவர்

ஆழ்கடல் வெண்டிரை

இரைந்நுரை கரைபொருது விம்மிநின் றயலே

தாதவிழ் புன்னைதயங் - கும

லர்ச்சிறை வண்டறை

எழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே

(திருஞானசம்பதர்: யாழ்முரி -1. ப. 351)

ஆறுமுக வடிவேலவனே என்ற பாடலில் அரையடி இறுதிகளில் உள்ள அசைகள் நான்கசை நீளம் நீண்டிருக்கின்றன. அடி இறுதிகளில் உள்ள அசைகள் ஆறசை நீளம் நீண்டிருக்கின்றன. (பாடலில் இவ்விடங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன) 

இப்பாடல் மும்மைநடைப் பாடல். இதில் ‘ஆறுமு’ ‘கவடி’ ‘வேலவ’ என்பன போன்ற பகுதிகள் தாளத்தின் ஒவ்வோர் எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சீராகக் கொள்ளப்படும். இரண்டாம் வரியில் லை என்பது இசையளவில் நீண்டு ஒரு சீராகிறது. நான்காம் வரியில் உள்ள லை என்பது இசையளவில் இரண்டு முழுச்சீர்களாக நீள்கிறது. இப்படி மிகுதியாக நீளும் இசை நீட்டங்கள் பெரும்பாலும் தனிச்சொல் முன்னரும், அரையடி இறுதிகளிலும், அடியிறுதிகளிலும் மட்டுமே காணப்படும். 

‘இசைத்தலும்’ என்ற உம்மையால் இசையாமையும் உண்டென்பது பெறப்படுகிறது. 

காட்டு :

நீலத்தி ரைக்கடல் ஓரத்திலே - நின்று

நித்தம்த வம்செய்கு மரியெல்லை - வட

மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (பா.கவி. ப. 165)

இதில் தனிச்சொல்லுக்கு முன்னரும் அரையடி இறுதியிலும் சிறிதும் ஓசை நீளவில்லை.

11.

குறிலசை நீட்டம் அருகுதல் சிறப்பே

கருத்து : சிந்துப் பாடல்களில் வருகின்ற (உயிர்க்குறில், உயிர்மெய்க் குறில், ஆகிய) குறிலசைகள் இரண்டு அசை அளவுக்கு மேல் நீண்டுவரும் இசை நீட்டம் மிகவும் குறைவாக வருதல் சிறப்புடையதாகும். (குறிலசைகள் நீட்டம் பெறாமல் வருதலே சிறப்பு) 

விளக்கம் : சிந்துப் பாடல்களில் ஓவ்வொரு சீரிலும் முதலசையாக வருவன மற்ற அசைகளினும் சற்றுக் கூடுதலாக அழுத்தம் (stress) பெறுகின்றன. அதற்கேற்றபடி அவ்வசைகளைப் பெரும்பாலும் நெடில், நெடிலொற்று, குறிலொற்றாகவே உள்ளன. தனிக்குறில் சீர் முதலில் பெரும்பாலும் வருவதில்லை. 

காட்டு : ‘ஆறுமுக வடி வேலவனே’ என்ற பாடலில் முழுமையாக உள்ள 48 சீர்களிலும் முதலசையாக மூன்று தனிக்குறில்களே வருகின்றன. அவை க, ன, ரு. 

ஆறுமு டி

வெள்ளைத்த மா கத்

தங்குமு ரு கோ னே

ஏனையவை குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகளாக உள்ளன. முதலசை நெடிலசையாக வராமல் குறிலசையாக வரும் இடங்களில் முதலசையுடன் இரண்ட்டாம் அசை, ஓசை நீட்டமாகவன்றி, எழுத்துள்ள அசையாக இருக்கும். 

காட்டு :

ஆறுமு டி

வெள்ளைத்த மா கத்

தங்குமுரு கோ னே  

இதில் க, ன, ரு சீர்முதல் குறிலசைகள். இவற்றின் இரண்டாம் அசை ஓசை நீட்டமாக இல்லாமல், வ, மா, கோ என்ற எழுத்துள்ள அசைகளாக வந்துள்ளன. 

எனவே இறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் ஈரசையாய் நீளும் குறிலசையும், சீர்த் தொடக்கத்தில் வரும் குறிலசையும் சிறப்பில்லாத அசைகள். ஆனதால் (சிறப்பிலசைகள் நூற்பா 13இல் காண்க) அவை சிந்துப் பாடல்களில் அருகி வருதல் (குறைந்த அளவில் வருதல்) சிறப்பாகும். 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.