LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

அசைக்கும் சீர்க்கும் புறனடை

சீர்முதல் நெடிலசை சிறப்பொடு நடக்கும்
சீர்முதல் குறிலசை சிறுவர விற்றே.
கருத்து : சிந்துப் பாடல்களில் உள்ள சீர்களின் முதலில் வரும் நெடிலசைகள் சிறப்பொடு நடக்கும். சீர்களின் முதலில் வரும் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும்.
விளக்கம் : நெடிலசை என்பன குறிலொற்றாகவும், நெடிலாகவும் நெடிலொற்றாகவும் வருவன.
ஓரசையாகவோ, ஈரசையாக நீண்டோ வரும் நெடிலசைகள் சிறப்பசைகள் என்பது முன்னர் கூறப்பட்டது. (நூ. 12)
அதுவன்றியும் ஓசை மிக்க எழுத்துகளாகப் பேராசிரியரால் குறிப்பிடப்படுவன நெட்டெழுத்தும், அந்நெட்டெழுத்துப் போல் ஓசையெழும் மெல்லெழுத்தும், லகார, ளகாரங்களுமே (தொ, பொருள், செய், பேரா, உரை. சூ..242)
எனவே நெட்டெழுத்துகள் ஓசை மிக்கன என்பது தெளிவு. ஆகவே சிறப்பசை என்று சிறப்பிக்கப்பட்ட குறிலொற்றும், நெடிலும், நெடிலொற்றும் சிந்துப் பாடலின் சீர்களில் முதலசையாக வரின் அப்பாடல் ஓசைச் சிறப்புடையதாக இருக்கும்.
சீர்த் தொடக்கத்தில் வரும் குறிலசைகள் சிறப்பிலசைகள். ஆகவே சீர்முதலில் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலில் ஓரசைக்குமேல் நீளாத அசைகளை உடைய சீர்கள் 48 உள்ளன. (தனிச் சொற்களும் அரையடி இறுதிகள், அடியிறுதிகளில் உள்ள அசை நீட்டங்களும் நீங்கலாக) அவற்றில் முதலசைகளாக ‘க’ ‘ன’ ‘ரு’ என்ற மூன்று குறிலசைகளே உள்ளன. ஏனைய 45 முதலசைகளும் நெடிலசைகளாய் உள்ளன.
எனவே சிந்துப் பாடல்களில் சீர்முதலில் நெடிலசைகள் வரின் பாடல் சிறக்கும் என்பதும், சீர்முதல் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும் என்பதும் தெளிவாகின்றன.
---- 
22.
ஒருபாட் டிடையே ஒருநடை அன்றி வேறொரு நடைச்சீர் விரிவுதல் அரிதே.
கருத்து : சிந்துப் பாடல்களில் மும்மை நான்மை, ஐம்மை, எழுமை ஆகிய இவற்றில் யாதேனுமொரு நடையில் இயங்குமொரு பாடலில் அப்பாடலின் நடைக்குரிய சீர்களே அமைந்திருக்கும். அப்பாடலின் நடுவில் அப்பாடலின் நடைக்குரிய சீரன்றி வேறொரு நடைக்குரிய சீர் கலந்து வருதல் அரிய வழக்காகும்.
விளக்கம் : ஒரு பாடல் மும்மை நடைப் பாடலாயின் ஒவ்வொரு முழுச்சீரிலும் மும்மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம் (முழுச்சீர் என்பது முழுவதும் எழுத்துகளால் அசை வரக்கூடிய இடங்களில் வரும் சீர் - ‘ஆறுமுக’ என்ற பாடலில் அடி, அரையடிகளில் முற்பாதியில் நான்கு சீர்களும் பிற்பாதியில் வரும் முதலிரண்டு சீர்களும் முழுச்சீர்கள்). அவை தனி உயிராகவோ மெய்யின் மேலேறிய உயிராகவோ இருக்கும்.
ஆறுமுக என்ற பாடல் மும்மை நடைப்பாடல். மும்மை நடைக்குரிய சீர்களே பாடல் முழுவதும் உள்ளன. அதே போன்று ‘தெள்ளுதமிழுக்கு’ என்ற நான்மை நடைப்பாடலில் நான்மைச் சீர்களும், ‘சீர்வளர் பசுந்தோகை’ என்ற ஐம்மை நடைப்பாடலில் ஐம்மை நடைச்சீர்களும், ‘பொன்னுலவு’ என்ற எழுமை நடைப் பாடலில் எழுமை நடைக்குரிய சீர்களும் பாடல் முழுவதும் வருவதை உணரலாம்.
ஒரு பாட்டினிடையே ஒருநடைச் சீரன்றி வேறொரு நடைச்சீர் விரவாமல் வருவது பெருவழக்கு. மிகவும் அரிதான ஒரு பாட்டினிடையே அப்பாட்டின் தாள நடைச்சீரன்றி வேறொரு தாளநடைச் சீர் வருதல் உண்டு. அ·து அரிய வழக்காதலால், ‘விரவுதல் அரிதே’ என்றார் ஆசிரியர்.
காட்டு : கலப்பு நடை (ஐம்மை + எழுமை)
திருவு . ற்றி    லகுகங் . க வரையி.ற்பு கழ்மிகுந் . த
திகழ . த்தி  னமுறைந் . த வா . ச . னை - மிகு
மகிமை . ச்சு  கிர்ததொண் . டர் நே . ச . னைப்- . ப . ல .
தீயபாதக  காரராகிய
சூரர்யாவரு  மாளவேயொரு
சிகர . க்கி  ரிபிளந் . த வே . ல . னை- உ . மை .
தகர . க்கு  ழல்கொள்வஞ் . சி பா . ல . னை .
மருவு . ற்றி  ணர்விரிந் . து மதுப . க்கு லமுழ . ங் . க
மதுமொய் . த்தி டுகடம் . ப ஆ . ர . னை - . வி . க .
சிதசி . த்ர  சிகிஉந் . து வீ . ர . னை  - . எ . ழில் .
மாகநாககு  மாரியாகிய
மாதினோடுகி  ராதநாயகி
மருவ . ப்பு  ளகரும் . பு தோ . ள . னை - . எ . னை .
அருமை . ப்ப  ணிகொளும் . த யா . ள . னை . -
(கா. சி. க. வ. ப. 1131)
இதில் ‘தீயபாதக’ ‘மாகநாககு’ என்று வரும் முடுகியல் சீர்கள் நான்கும் எழுமை நடையிலும் ஏனைய சீர்கள் ஐம்மை நடையிலும் நடப்பதைப் பாடியுணரலாம்.

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.