LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அப்புசாமி

அதிரடிக் குரலோன் அப்புசாமி

 

ஆறாத சுடச்சுட பொங்கலை ஆற அமர அமர்ந்து அப்புசாமி ஒரு வாய் எடுத்துச் சுவைத்திருப்பார்.
“ஸைலேன்ஸ்!” என்ற மாபெரும் கத்தல் அவரைத் தூக்கிவாரிப்போட வைத்தது. அவரை என்பதைவிட அவர் கையிலிருந்த பொங்கலை. அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பொங்கல் பொட்டலம் துள்ளி மண்ணில் விழுந்து புரண்டது.
ஐயோன்னா வருமா, அப்பான்னா வருமா? சுண்டலாக இருந்தாலும் பொறுக்கி எடுத்துத் துடைத்துக் கிடைத்து, குழாய்த் நீரில் அலம்பிக் கிலம்பி, உலகத் தமிழ் மாநாட்டுத் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் போல் தட்டுத் தடுமாறித் தப்பும் கிப்புமாக ஓரளவு சமாளித்துவிடலாம்.
ஆனால் இது சுத்தமாகப் போயே போன தென்னக காங்கிரஸ் கேஸ். அட, விழுந்ததுதான் விழுந்தது! இப்படியா விழ வேண்டும்!
வெண் பொங்கலுக்கு, அதுவும் மார்கழி மாசத்து வெண் பொங்கலுக்கு, அதுவும் விடியற்காலையில் கோவிலில் ஓசியில் கிடைக்கிற பொங்கலுக்கு இத்தனை ருசியா,
சே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்றே!
எந்தச் சோதா அப்படிக் கத்தியது என்று சுதந்திரப் பூங்காவைச் சுற்று முற்றுமாக ஒரு நோட்டம் விட்டார்.
அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “ஸைலேன்ஸ்!” என்று மறுபடி அதே இடிக்குரல் வெளிப்பட்டு அவரை நடுங்க வைத்தது.
சிமெண்ட் பெஞ்சிலிருந்து எழுந்தவர் தொம்மென்று உட்கார்ந்துவிட்டார்.
இருளில் மரத்தில் ஒளிந்திருந்த காக்கா, குருவிகள் மற்றும் அடையாள அட்டைகளில்லாத பறவை இனங்கள் அந்த ‘ஸைலேன்ஸ்’ சத்தம் கேட்டுக் குபீரென்று பறந்தன.
மரங்களிலிருந்து வயதான சருகுகள் பொலபொல என உதிர்ந்தன; -தேவர்கள் இலைமாரி பொழிவது போல.
எங்கேயிருந்து வந்தது இந்தப் பயங்கர ஒலி? பொங்கலை மண்ணுக்கனுப்பிய பொல்லாத சத்தம் வந்த திசை எது?
பூங்காவில் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான செடிக் கூண்டுகள் கும்பலாக ஒரு பக்கம் கடாசப்பட்டிருந்தன. அவற்றின் அருகிலிருந்த ஒரு மொட்டை பெஞ்ச்சில் சாதுவாக ஒரு மொட்டைத்தலை வாலிபன் உட்கார்ந்திருந்தான்.
அப்புசாமி ஆச்சரியப்பட்டுப் போனார், “இவ்வளவு ஒல்லிப் பிச்சானாக இருக்கிற நீங்களா அவ்வளவு பெரிய சத்தம் எழுப்பியது?”
“இது சாதா ரகம். விடியற்காலையில் மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுமேன்னு கொஞ்சம் மெதுவாக கத்தினேன்” என்றான் தொண்டையை நீவிக் கொண்டு.
“எங்கே, இன்னொரு தரம் கத்துங்க பார்க்கலாம்!” அப்புசாமி நேயர் விருப்பம் தெரிவித்தார் ஆர்வத்தோடு.
“ஸ்டுடியோவுலே நான் ஒரு தரம் கத்தறதுக்கு ஒரு ரூபா இருபது பைசா தருவாங்க.”
“ஸ்டுடியோ?” அப்புசாமி நெய்ப்பிசுக்கான விரலால் தலையைச் சொறிந்து கொண்டார். “நீங்க ஸ்டுடியோவிலே வேலை செய்யறவரா?”
சைலேன்ஸ் சஞ்சீவின்னு நீங்க கேள்விப்பட்டதில்லையா?” அந்த வாலிபன் கேட்டு விட்டு, “கொஞ்சம் இருங்க. பனி விலகறதுக்குள்ளே இன்னும் நாலு ஸைலேன்ஸ் வுட்டுட்டுப் பேசறேன்.” என்றவன் “ஸைலேன்ஸ்!” என்று கத்தினான். அவன் கத்தின ஒலி அலை
அப்புசாமியின் காதில் ரொய்ங்கென்று புகுந்து தலை கிர்ர்ர் அடித்துத் தொப்பென்று உட்கார்ந்து விட்டார்.
ஸைலேன்ஸ சஞ்சீவிக்கு சினிமா ஸ்டுடியோ ஒன்றில் சற்று வித்தியாசமான வேலை. படப்பிடிப்பில் ஷாட் ரெடியானதும், ‘ஸைலென்ஸ்’ என்று உரக்கத் கத்த வேண்டும். ஒரு தடவை கத்துவதற்கு ஒரு ரூபாய் இருபது பைசா. மூணு வருஷமாகக் கத்தி வருகிறான். ஒரு நாளைக்குச் சராசரி பத்து ஷாட் கூலி கிடைக்கும். மாதச் சம்பளத்தில் அமர்த்திக்கொள்ள யாரும் முன் வரவில்லை.
“என்னவோ வண்டி ஓடுது சார். இந்தக் குளிர் காலத்திலே, பனியிலே நல்லா பிராக்டிஸ் பண்ணிப்பேன். நமக்குத் தொண்டைதானே சோறு போடுது.”
சஞ்சீவியின் வாழ்க்கையைக் கேட்டதும் அப்புசாமிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
ஆகா, மனிதர்கள்தான் எத்தனை விதங்களில் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். நாமும் இருக்கிறோமே?
சஞ்சீவியிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டை அடைந்தார். பஸ்ஸில் ஏறியதும் கம்பியைப் பிடித்துக் கொண்டு முன்னேறினாரே தவிர, டிக்கெட் வாங்கவில்லை. சஞ்சீவி பற்றிய சிந்தனையேதான்!
“யோவ் பெரிசு! எங்கேய்யா போவணும்? சரசரன்னு முன்னாலே போயிட்டா உங்க தாத்தாவா வந்து டிக்கெட் எடுப்பான்?” கண்டக்டர் காய்ந்தார்.
அப்புசாமிக்குக் கண்டக்டரின் குரல் காதில் விழவில்லை. மனசுக்குள் ‘ஸைலேன்ஸ்’ குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. ‘நம்மால் அவ்வளவு பெரிசாகக் கத்த முடியுமா?’
கண்டக்டர் மகா எரிச்சலாகி, “யோவ் சாவு கிராக்கி டிக்கெட் வாங்காம டபாய்ச்சுடலாம்னு பார்க்கிறியா? யோவ் பெரிசு! காது கீது செவுடா? நடிக்கிறியா? வேலை காட்றயா வேலை? வயசாச்சேன்னு பாத்தா மரியாதையைக் கெடுத்துகிருவாங்க… பார்த்தீங்களா, அந்தக் கிழவனை? இவ்வளவு கத்தறேனே… வந்து டிக்கெட் எடுக்கறானா பார்.”
அப்புசாமியின் மனசு பூரா ‘சைலேன்ஸே’ நிரம்பியிருந்தது. ‘அது மாதிரி நாம கத்த முடியுமா? அடேங்கம்மா, எப்பேர்ப்பட்ட சிங்கக்குரல்! அணுகுண்டுக்குரல் ஒரு மனுஷத் தொண்டையிலிருந்து இத்தா சோடு சத்தம் வெளியிலே வருமா? பயல் நாறாட்டம் இருக்கான். நான்கூட சீதேக் கியவியோடு சண்டை போடறப்போ. சபதம் போடறப்போ உரக்கக் கத்தியிருக்கேன், ஆனால் இது அதி உன்னத மஹா கத்தல். ஆ! என்ன மாதிரி கத்தினான்!
அடுத்த கணம், அவரையும் அறியாமல் ‘ஸைலேன்ஸ்!’ என்ற கத்தல் அவரிடமிருந்து வெளிப்பட்டுவிட்டது. நல்ல உரத்த சத்தமாகவே ஸைலேன்ஸ் வந்துவிட்டது. பூங்காவில் ஒலித்த சஞ்சீவியின் குரலில் பாதி அளவாவது கத்தியிருப்பார்.
கண்டக்டரின் கையிலிருந்த டிக்கெட் புத்தகங்கள் தொபதொபவென்று கீழே விழுந்தன.
டிரைவர் கிர்ரீச் என்று பிரேக் அடித்தார். பஸ்ஸிலிருந்த பயணிகளுக்கு மூச்சு முட்டியது. காதில் கும்மென ரீங்காரம்.
அப்புசாமியே ஆச்சரியப்பட்டார், நம் தொண்டைக்குள்ளிருந்தா இவ்வளவு பெரிய ஸைலேன்ஸ் கிளம்பியது என்று – சில ஒல்லித் தாய்மார்கள் அஞ்சு கிலோ குழந்தையைப் பிரசவித்து ஆச்சரியப்படுவதுபோல.
தன் குரல் கேட்டுப் பயணிகள் எல்லாரும் திகைப்பதையும், பஸ் பூராக் கப்சிப்பென்று அமைதியாகி, ஒரு வகைப் பீதி படர்ந்த முகத்துடன் விழிப்பதையும் அப்புசாமி பார்த்தார். மகா மகிழ்ச்சி ஏற்பட்டது.
“அட, நம்ம சவுண்டும் பரவாயில்லையே!’ என்று மகிழ்ந்தவர், தன்னையே சோதித்துக் கொள்வது போல, ‘ஸைலேன்ஸ்!’ என்ற இரண்டாம் தடவையாகக் கத்தினார்.
கண்டக்டருக்குத் தன்னைத்தான் அப்புசாமி அப்படி ‘ஸைலேன்ஸ்!’ என்று கத்திக் கண்டிக்கிறார் என்று தோன்றிவிட்டது.
‘அடேங்கம்மா! என்ன மாதிரி சவுண்ட்!’ என்று பிரமித்த கண்டக்டர் அடுத்த நிமிஷன் தானே அப்புசாமியை நாடி வந்து பயமும் மரியாதையும் வியப்புமாக அவரைப் பார்த்தான். “பெரீவரே எங்க போகணுங்க?” என்று பணிவாகக் கேட்டு டிக்கெட் தந்துவிட்டுப் போனான்.
சீட்டில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞன் எழுந்து, “பெரீவரே, நீங்க உட்காருங்க. நான் அடுத்ததிலே இறங்கறேன்,” என்று அவருக்கு இடம் கொடுத்தான்.
அப்புசாமி தனது ஸ்டாப்பிங் வந்து இறங்குகிற வரையில் பஸ்ஸில் ஒரு துளிச் சத்தமில்லை. கப்சிப், எல்லாரது பார்வையும் அப்புசாமியையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன.
சீதாப்பாட்டி மத்தியானம் ஒரு இருபது நிமிட குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். கையில் விரித்து வைத்துக்கொண்ட ரீடர்ஜ்டைஜஸ்ட் தொப்பென்று மார் மீது குப்புற விழுந்திருக்கும். கதவைத் தடடியோ, மணியை அழுத்தியோ தூக்கத்தைக் கெடுத்துக் தொந்தரவு செய்யாமல் உள்ளே வருவதற்காக அப்புசாமியிடமும் ஒரு சாவி தந்து வைத்திருந்தாள். அவர் அதை இடுப்பு அரைஞாணின் கறுப்புக் கயிற்றில் ஒரு பின்னூசியில் கோத்து வைத்திருப்பார். மூக்கால்வாசி நேரங்களில் அதை எடுக்க சோம்பல் பட்டுக் கொண்டு மணியை அழுத்திவிடுவார்.
அப்புசாமி தனது உரத்த சிந்தனையோடு தெருவில் நடந்து கொண்டிருந்தார். ஓர் அரியகலை தனக்குக் கை வந்துவிட்டது போன்ற பெருமிதம் அவருக்குள் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.
‘ஸைலேன்ஸ்!’ என்று தன்னாலும் உரக்கக் கத்த முடிகிறதே! கொஞ்சம் பயிற்சி மேற்கொண்டால் அந்த சஞ்சீவியைவிட நன்றாகவே – சே சே! அவன் பிழைப்பில் மண்ணைப் போடக்கூடாது பாவம் ஏழை. நாம் நம்ம சந்தோஷத்துக்காகக் கத்திக்கலாம். ஏன், சீதேக் கிழவியை விரட்டறதுக்காகக்கூடக் கத்தலாம்.
இப்பேர்ப்பட்ட மகா சக்தி தனக்குள் ஒளிந்திருப்பதை எவரும் இதுவரை கண்டுபிடித்துச் சொன்னதில்லையே!
நாதப் பிரம்மம். பிரம்ம நாதம். பிரம்மாண்ட நாதம்.
‘சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி…’ ஆகா! சத்தம் – நாதம் – ஒலி அணுகுண்டு.
மனித குலம் ரகசியமாகப் பேசிப் பேசியே நாசமாய்ப் போனது. கோழைகளாகிக் குள்ள நரியாகியது. சிறு மனிதா, சிங்கம் போல் கர்ஜனை செய்யடா, சிவாஜிகூட தன் சிம்மக் குரலால் தானே முன்னுக்கு வந்தார்?
மனிதா, முழங்கு! உன் குரலை எழுப்பி உலகைக் கூப்பிடு.
அப்புசாமி அங்குமிங்கும் சுற்றிவிட்டு மதியத்துக்கு வீடு வந்து சேர்ந்தபோது, சீதாப்பாட்டியிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலிகள் செல்லம் கொஞ்சியவாறு பிரிந்து கொண்டிருந்தன.
அப்புசாமி குறும்பாகச் சிரித்துக் கொண்டார். ஒரு ‘ஸைலேன்ஸ்’ போட்டுக் கிழவியை அலறி அடித்துக் கொண்டு எழுந்திருக்கும்படிச் செய்தால் என்ன?
அடுத்த விநாடி “ஸைலேன்ஸ்!” என்று ஒரு கத்தல் போட்டார்.
சீதாப்பாட்டி திடுக்கிட்டுத் தூக்கிவாரிப்போட, அரக்கப் பரக்க எழுந்து மிரள மிரள விழித்து, ஏதோ பூகம்பம் வந்துவிட்டதுபோல அறைக் கோடிக்கு ஓடினாள். அங்கிருந்து புத்தக அலமாரிக்கு விரைந்து சென்று அதைப் பிடித்துக்கொண்டாள். டீபாயைச் சரி செய்தாள். அதன்மீதிருந்த பூஜாடியை நிமிர்த்தி வைத்தாள்.
“நீங்க… நீங்க… நீங்க எப்ப வந்தீங்க? யார் கத்தினது? ஏன் வாட் இஸ் இட் கோயிங் ஆன் ஹியர்?”
அப்புசாமி இரண்டாவது ‘ஸைலேன்ஸ்’ போட்டார்.
சீதாப்பாட்டி காதில் கை வைத்துக்கொண்டு படுக்கையில் தொப்பென்று உட்கார்ந்து விட்டாள். காது ஜிவ்ஜிவு என்றது. அவள் கன்னத்தை யாரோ பலமாகத் தாக்கி விட்டது போல் இருந்தது.
“வாட் ஹாப்ப ண்ட் டு யூ? வாட் ஸ் ராங் வித் யூ சார்? ஏன் இந்த மாதிரி காட்டுக் கத்தலாக் கத்தினீங்க? பயந்தே போய்விட்டேன். ஹாரிபிள். கிறுக்குப் பிடுச்சுட்டுதா என்ன?” படபடத்தாள்.
அப்புசாமி மூன்றாவது முறையாக ஸைலேன்ஸைப் பிரயோகித்தார்.
சீதாப்பாட்டி கப்சிப் ஆனது மட்டுமில்லை; அடுத்த அறைக்கு ஓடிக் கதவைத் தாழ் போட்டு கொண்டு விட்டாள்.
அப்புசாமி ரேப் செய்ய வந்த பழைய ஸ்டைல் வில்லன் மாதிரி சிரித்துக் கொக்கரித்தார்.
“இந்த சீதேக் கிழவியையும் பயப்படுத்த என்கிட்டே ஓர் ஆயுதம் இருக்கிறதே! சப்பாஷ்!” என்று எண்ணிக் கொண்டவர், உற்சாக மிகுதியோடு “சைலேன்ஸ்,” என்று கத்த வாயெடுத்தார்.
அடுத்த நிமிஷம் அவர் வாயைச் சீதாப்பாட்டியின் கரம் பொத்தியது. குரல் கெஞ்சியது. “ப்ளீஸ், டோன்ஸ் ஷெளட் அகெய்ன். என் ஹார்ட் பீட் எப்படி அடிக்கிறது பாருங்கள்.”
“நான் அடிக்கடி இப்படித்தான் கத்துவேன்மே. இதெல்லாம் துட்டு சமாசாரம். ஒரு தடவை கத்தினால் பத்து ரூபா தர ஆள் ரெடியா இருக்குதுமே… நான் பைத்தியக்காரனாட்டம் கத்தறேன்னு பார்த்தியா?”
“நீங்க என்ன சொல்றீங்க?”
“உன்கிட்ட அந்த கதையெல்லாம் சொல்லிட்டிருக்க நான் ஒண்ணும் பிஸ்கோத்து இல்லே. இப்போ கைமேல நீ பத்து ரூவா வெச்சால் கத்தாமலிருக்கேன். என்ன சொல்றே?”
சீதாப்பாட்டி, “ப்ளீஸ்… ப்ளீஸ்… கத்தாதீங்க இதோ டென் ருபீஸ்!” என்று அவசர அவசரமாகக் கைப் பையைத் திறந்து பத்து ரூபாயை அவரிடம் தந்தாள்.
“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் சஞ்சீவியைச் சேரும்” என்று பாடியபடி ரூபா நோட்டுக்கு ஒரு முத்தம் தந்து ஜிப்பாப் பையில் போட்டுக் கொண்டு வெளியேறினார் அப்புசாமி.
சீதாப்பாட்டியின் முகம் சினத்தால் சிவந்தது, ‘ப்ளாக்மெயிலில் இது ஒரு ரகமா?’
வெற்றி மதர்ப்பில் ரூபாயுடன் செல்லும் கணவனையே கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். கோபம் கவலையாக மாறியது சில விநாடிகளில்.
‘அவர் ஒரு பயங்கர பிளாக்மெயில்காரர் பத்து ரூபாய் ரேட்டை நாளைக்கே நூறு ரூபாய் என்று கூட மாற்றலாம். ஐ காண்ட் டான்ஸ் ·பர் ஹிஸ் டியூன்ஸ். என்ன மாதிரி டெவலப் பண்ணிகிட்டுப் போவாரோ தெரியலையே…’ என்ற கவலை ரேகைகள் அவள் முகத்தில படிந்தன.
“சைலேன்ஸ்!”
அப்புசாமி தெருக்கோடியில் போய் எழுப்பிய ஓசை காற்றில் விரைந்து வந்து அவள் காதைத் தாக்கியது. ‘ரோடில் நின்றும் கத்த ஆரம்பித்து விட்டாரா?’
.
அவமானமும் ஆத்திரமும் சீதாப்பாட்டியின் முகத்தில் தெறித்தன.
வசூல் அமோகமாக ஆகிக் கொண்டிருந்தது. “டேய் ரசம், ‘தை பிறக்க வழி பிறக்கும்’னு பெரியவங்க தெரியாமச் சொல்லலை” என்றார் அப்புசாமி, சில்லறையை எண்ணிக்கொண்டே.
“தாத்தா,” என்றான் ரசகுண்டு ரூபாய் நோட்டுகளை எண்ணியவனாக. தை பிறக்க வழி பிறக்காம இருக்கணுமேன்னுதான் தாத்தா என் கவலை. இன்னிக்கு மட்டும் பதினாறு சென்ட்டர்லே நீங்க நாற்பத்தெட்டு தடவை கர்ஜனை கொடுத்திருக்கீங்க.”
அப்புசாமி பெருமிதத்துடன் தொண்டையை நீவிவிட்டுக் கொண்டார். தொண்டைக்குப் பிரத்தியேகமாக நண்பன் ரசகுண்டு தைத்துத் தந்திருந்த வெல்வெட் மிருதுவாக இருந்தாலும், மிகவும் இறுக்குவது போலிருந்தது.
“ரசம், இதை வேணுமானாக் கழற்றிக் கடாசிடட்டுமா?”
“தாத்தாவ்! கெடுத்தீங்களே காரியத்தை. காரத்தேகாரங்களுக்கு பிளாக் பெல்ட் மாதிரி இது உங்களுக்கு எவ்வளவு அழகாக இருக்கு! உங்க தொண்டைதான் இப்போ நம்ம சொத்து. உங்க தொண்டைதான் நம்ம முதலீடு, நம்ம வியாபாரம், நம்ம லாபம். ‘தாய்நாட்டுத் தொண்டை’ன்னு நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?”
“ஊஹ¥ம். தாய்நாட்டுத் தொண்டுன்னுதான்னு சொல்லுவாங்க,” என்ற அப்புசாமி.
“வசூலை எண்ணிக் கணக்குக் கட்டிட்டியா?” என்றார்.
“பதினாறு சென்ட்டர் வசூல் எழுபத்து மூணு ரூபா அம்பது பைசா தாத்தா. என் திருஷ்டியே பட்டுடும் போலிருக்கு. பீமாவைப் பூசனிக்காயும், கற்பூரமும் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கிறேன். நீங்க படுத்துகிட்டு ஆ காட்டுங்க…” என்றான் ரசகுண்டு.
அப்புசாமியின் திறந்த வாயில் ஒரு சின்னப் புனலை வைத்து ரசகுண்டு பிளாஸ்கிலிருந்து மிளகுரசத்தை ஊற்றினான், ரேடியேட்டருக்குத் நீர் கொட்டுவது போல.
சூடான மிளகுரசம் அவரது தொண்டைக்குள் இதமாக இறங்கியது.
‘ருக்மிணி நல்லாவே செய்யறாடா மிளகு ரசம்” என்று பாராட்டினார் அப்புசாமி.
“நீங்க முதலாளி என்கிற பயபக்தியுடன் செய்ததாச்சே தாத்தா! நம்ப அடுத்த சென்ட்டர் ‘மெரீனா பீச்!”
வெற்றிகரமான திரைப்படம்போல அப்புசாமியின் அதிரடிக் குரல் நகரில் பல பஸ் ஸ்டாப்பிங்குகளிலும், பூங்காக்களிலும், நடைபாதைகளிலும், ஒலிக்கத் தொடங்கின. ஒரு கத்தலுக்கு ஒரு ரூபாய் என்று திட்டமிட்டு நண்பர்கள் ரசகுண்டு, பீமாராவ் ஆகியோருடைய ஒத்துழைப்புடன் தனது நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார் அப்புசாமி.
க்ரீச்! பிரேக் அடித்தாள் சீதாப்பாட்டி. ஆனால் அதற்குள் காரியம் முடிந்துவிட்டது.
மீசையுடன் கூடிய ஒரு தலை தரையில் உருண்டு ஓடியது “மைகாட்! நான் என்ன செய்யப் போகிறேன்…”
சீதாப்பாட்டியின் இருதயம் நின்றே விட்டது – சில விநாடி!
அப்புறம் நிதானமாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது அது மனிதத் தலையல்ல; மனிதத் தலை வரையப் பட்ட பூசனிக்காய் என்று.
“பூசனி! பூசனி! நென்னு பூசனி!” என்று துடித்துப் பதறி பூசனிக்காயை எடுத்த பீமாராவ் அது இருந்த கோலத்தைப் பார்த்து, “ஒடதுணோயித்து! நென்னு பூசனி! நெத்து ரூவா பூசனிதொட்டு ஆக்ஸிடெண்ட்!”
பல்லவன் மோதிய ஆட்டோ மாதிரி பூசனிக்காய் நொறுங்கி வெகுவாக உடைந்துவிட்டிருந்தது.
சேதாரமான பூசனியைத் தூக்கிக் கொண்டு கோபமாகக் கார் அருகே பீமா நியாயம் கேட்க விரைந்தான்- லுங்கி கட்டிய கண்ணகியாக.
அவ்வா! நீ வா?” பாட்டியைப் பார்த்து பீமா ஆச்சரியப்பட்டான். “கார் மாத்திப் பிட்டீரா? அவ்வா, ஷோக்காயிதே!”
“மை டியர் ஸன்!” என்றாள் சீதாப்பாட்டி நிம்மதியுடன். “ஹாப்பி நியூ இயர் மை ஸன். அதைத் தூக்கிக் கீழே போட்டுவிட்டுக் காரில் ஏறு… நீ எங்கே போகணும்? டிராப் செய்துடறேன்…”
“அவ்வா!” தலையைச் சொறிந்தான் “பூசனி தெக்கன் பரேன்னு தாத்தானகிட்டே ஹேவிட்டு பந்தேன்.”
“பீமா உட்கார். உங்க தாத்தாகிட்டயே கொண்டு போய் இறக்கிவிடறேன். ஒரு பூசனிக்காயென்ன, ஒன்பது வாங்கித் தரேன்…உங்க தாத்தா கறிகாய் பிஸினஸ் வேறு பண்ணுகிறாரா? ந்யூஸ் டு மி!”
தாத்தாவின் கத்தல் பிஸினஸ் சக்கைப் போடு போடுவதாகவும் தொண்டைக்கு திருஷ்டி சுற்றிப் போடுவதற்காகத்தான் பூசனிக்காய் என்பதையும் பீமா ராவ் தெரிவித்ததைப் பாட்டி பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்து விட்டு அவன் கையில் நூறு ரூபாய் நோட்டு ஒன்றைத் தந்தாள்.
“சில்லறையாக் கொடுத்பிடி அவ்வா. கடைக்காரா சேஞ்ச் இல்லே ஹேளுவா!”
சீதாப்பாட்டி சிரித்தாள் “மை மோஸ்ட் பிலவட் ஸன்! திஸ் இஸ் நாட் ·பர் பூசனி. பாட்டியின் புதுவருட கி·ப்ட் புதுப் பூசனி வாங்க இந்தா ஐம்பது ரூபாய் பூசனி வாங்கிக் கொண்டு மீதியை நீயே எடுத்துக்கோ!”
“அவ்வா… நான் தும்ப அதிருஷட மாடிவை. மகாலட்சுமி நீயே…!”
சீதாப்பாட்டி பீமாராவைக் காய்கறிக் கடையருகே இறக்கிவிட்டாள். “பீமா, மை ஸன், நான் சொன்னதை டோன்ட் ·பர்கெட்!”
சீதாப்பாட்டி பீமாராவைக் காய்கறிக் கடையருகே இறக்கிவிட்டாள். “பீமா, மை ஸன், நான் சொன்னதை டோன்ட் ·பர்கெட்!”
“அந்தக் கியவி ஏண்டா இப்ப வரணும்? அவள் என்னைப் பார்க்க வேண்டிய அவசியமென்ன?
அப்புசாமி தொண்டையை நீவி விட்டுக்கொண்டு கவலைப்பட்டார்.
“தாத்தாவ்! தொண்டையை ஏன் அப்படி அழுத்தி அழுத்தி நீவுறீங்க… எடுங்க கையை…” ரசகுண்டு அதட்டினான்.
“கவலைடா. கவலை.” என்றார் அப்புசாமி. பீமாராவ் ஒரு குண்டைத் தூக்கிப் போடறானே! உன் காதிலே விழலையா? பொண்ணு வரப்போற மாதிரி பாட்டி வரப் போறாளாம் என்னைப் பார்க்க.”
‘வரட்டுமே. அதைப் பற்றி யோசிக்க நான் இருக்கேன். அதுக்காக நீங்க ஏன் தொண்டையை நீவுறீங்க…” என்ற ரசகுண்டு கோபமாக, “டேய் பீமா! உனக்கு அறிவிருக்காடா…” என்று பீமாராவ்மீது பாய்ந்தான்.
‘ஏனப்பா, ஏனு ஆயித்து நினகெ?”
“வெங்காயம் ஆச்சு! தாத்தா கழுத்துலே மப்ளர் கட்டி வைக்காம விட்டிருக்கியே… என்னாகும்டா கழுத்து? அறிவு வேணாம்? நமக்கெல்லாம் சோறு போடற தொண்டைடா… குளிர்காத்து எப்படி அடிக்குது. உறைக்கலையா உனக்கு?”
ரசகுண்டு பல்லைக் கடித்தான் – பீமாவைக் கடிக்க முடியாததால்.
பரபரப்புடன் ஒரு முரட்டு மப்ளரை அப்புசாமியின் கழுத்தில் சுற்றினான் பீமாராவ். ரசகுண்டின் மனைவி எந்த யுகத்திலோ போட்ட முள்ளு மப்ளர் அது.
“என் தொண்டையை எந்த மப்ளராலும் காப்பாற்ற முடியாதுடா? உங்க பாட்டிக் கியவி வரப் போகிறாள் என்றதுமே தொண்டை ஒழிந்தது என்று தீர்மானித்துவிட்டேன். தொண்டை நடுங்குது பார்,” என்றார் அப்புசாமி தீனமாக.
“தாத்தா, பெண்சாதியைப் பார்த்தால் புருஷன்களுக்குத் தொடைதான் நடுங்கும். உங்களுக்குத் தொண்டையும் நடுங்குது… நான் ஒருத்தன் இருக்கிற வரைக்கும் உங்களுக்கோ, உங்கள் தொண்டைக்கோ, சம்பாத்தியத்துக்கோ ஒரு ஆபத்தும் வராது… உங்க வருமானத்தின் வாயில் பாட்டியால் மண்ணைப் போட முடியாது” ரசகுண்டு ஒரு ‘ப்ரித்ராணாய சாதூனாம்’ போஸ் கொடுத்தான்.
வாசலில் சீதாப்பாட்டியின் கார் வந்து நின்றது. “அவ்வா பந்தாயித்து! அவ்வா பந்தாயித்து!” குதூகலமாக பீமாராவ் சீதாப்பாட்டியை வரவேற்க ஓடினான்.
அவன் கைக்குச் சரேல் என்று பிரேக் போட்டு நிறுத்தினான் ரசகுண்டு. பிளாட்பாரத்தை உடைத்துக் கொண்டு சரியும் இஞ்சின்போல பீமராவ் சரிந்து விழுந்தான்.
“ஓ! மை டியர் ஸன்!” என்றவாறு சீதாப்பாட்டி காரிலிருந்து இறங்கியவர் வேகமாக வந்து அவன் எழுந்திருக்க உதவி செய்தாள்.
“அடே ரசம்” என்று கடுகடுத்தார் அப்புசாமி. “அந்தக் கிழவிக்கு இங்கே என்ன வேலையாம்? கேட்டு உடனே சொல்.”
“தாத்தா…” என்ற ரசகுண்டு மியூஸிக் டைரக்டர் போலக் கையை ஆட்டினான். மெதுவாகப் பேசுங்கள். உங்கள் தொண்டையை அனாவசியமாகவெல்லாம் நீங்க உபயோகப்படுத்தக்கூடாது.”
“வெல் ஸெட்” என்றவாறு சீதாப்பாட்டி ரசகுண்டின் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள். “உங்கள் தாத்தாவின் தொண்டையை ஒரு அதிசயம். நான் வந்திருக்கிறது உங்களையெல்லாம் இன்வைட் செய்யத்தான். உங்கள் தாத்தாவுக்கு இப்படி ஒரு ரிமார்க்கபிள் குரல் இருக்கிறது என்பது எனக்கு இத்தனை வருஷமாகத் தெரியாமல் போயிட்டுதுடா ரசம்,”
“பாட்டி! நீங்க ஐஸ் வைக்காதீங்க. தாத்தாவோ நானோ அதற்கெல்லாம் மயங்கிடமாட்டோம். நீங்க முதல்வர்னா, தாத்தா கவர்னர். அவருக்கு உலக புகழ்ச்சி தேவையில்லை.”
“மை டியர் ஸன் நமக்குள்ளே ஆயிரம் கசமுசா இருக்கலாம். ஆனால் அதிருஷ்ட தேவதை கதவைத் தட்டுகிறபோது நாம் முட்டாள்தனமாகச் சும்மா இருந்து விடக்கூடாது. கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் பீபிள் நாளைக்கு ஸிடிக்கு வருகிறார்கள். ‘எங்கள் பா.மு.கழகத்துக்கும் அவசியம் வருகை தரணும்’னு இன்வைட் பண்ணியிருக்கிறேன். உங்க தாத்தாவின் வொன்டர்·புல் வாய்ஸையும் ஒய் நாட் அப்போ இன்ட்ரட்யூஸ் பண்ணிக்கூடாதுன்னு தோணித்து. அப்புறம் உங்கள் வில் அண்ட் ப்ளஷர். அவர் உங்களுக்குச் சிநேகிதர்தான். ஆனால் எனக்கு ஹ்ஸ்பெண்ட்! அவருக்கு ஒரு புகழ் வருகிறது என்றால், அது எனக்கும் புகழ்தான். அதைத் தடுப்பதோ அனுமதிப்பதோ உங்கள் இஷ்டம்.”
சீதாப்பாட்டி கிளம்பினாள்.
“பாட்டி, பாட்டி… இருங்க!” என்றான் ரசகுண்டு.
அவசரமாகத் தாத்தாவைக் கலந்தாலோசித்தான்.
“தாத்தாப்…! பாட்டி உங்க ரிக்கார்டு, கின்னஸ் அது இது என்கிறா ள். என்ன சொல்றீங்க?”
“இப்படித்தாண்டா அவள் என் நாக்கிலே தேன் தடவித் தடவி என் நாக்கே தேய்ஞ்சு போயிடுச்சு! ஆடு நனையுதேன்னு ஓநாய்க்கு ஏண்டா கவலை? இப்போ நான் சம்பாதிக்கிற வசூலும் போயிடப் போகுது. கிழவியை முதலிலே இடத்தைக் காலி பண்ணச் சொல்லு!” என்றார் அப்புசாமி கறாராக.
“தாத்தா ரொம்பக் கெடுபிடி பண்றாரே…” என்றான் ரசகுண்டு தலையைச் சொறிந்துகொண்டு.
“மை டியர் ஸன்” உங்க தாத்தாவுக்கு இது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிடி! அவரைச் சம்மதிக்க வைக்கிறது உன் கையிலதானிருக்கு…” என்ற பாட்டி, ஹேண்ட் பாக்கிலி ந்து தடித்த கவர்கள் இரண்டை எடுத்து அவனிடம் தந்தாள். “ஒன் ·பார் யூ… அண்ட் ஒன் ·பார் பீமா …மை
காம்பளிமெண்ட்ஸ்.”
“ஒரு வருஷ டயரியா பாட்டி.”
“டயரி மட்டில்லை…” என்று கண்ணைச் சிமிட்டி விட்டுப் பாட்டி நகர்ந்தாள். “பீமாகிட்டே எல்லாம் சொல்லியிருக்கேன். கேட்டுக்கே.”
ரசகுண்டு புரிந்துகொண்டு ஆவலுடன் டயரியைப் பிரித்தான். பத்து நூறு ரூபாய் நோட்டுக்கள் உள்ளே உறக்கிக் கொண்டிருந்தன.
“பாட்டின்னா, பாட்டிதான்! நாட்டு நடப்பு தெரிந்த பாட்டி!” என்று ரசகுண்டு மகிழ்ந்தான். “அவுது! அவுது!” என்று பீமாராவ் குதூகலமாக ஆமோதித்தான்.
அப்புசாமியின் தொண்டைக்கு விசேஷ ஆராதனை நடந்து கொண்டிருந்தது.
பன்னீர், சந்தனம் தடவி குங்குமப் பொட்டு இட்டு, பூமாலைச் சுற்றி ஊதுவத்தி கற்பூரம் காட்டி…
“ஏண்டா பசங்களா, பலிகடாவுக்கு அலங்கரிக்கிற மாதிரி… என் தொண்டைக்கென்னடா இத்தனை அலங்காரம்?”
“தாத்தா! கம்னே இரு. திருஷ்டிதோஷம் கழிபேகு.”
அப்புசாமி குழம்பினவராக, என்னடா ரசம் சொல்றான் இவன்?” என்றார்.
“நீங்க கின்னஸ் ரிகார்ட் ரிப்போர்ட்காரர்களைச் சந்திக்கப் போகறீங்க இல்லையா! உங்க தொண்டைக்கு இப்படி ஒரு அதிருஷ்டம் வந்திருக்கேன்னு யார் கண்ணும் படாமல் இருக்கணும்னு திருஷ்டி சுற்றிப் போடணும்கறான்.”
“என் மேலே எந்தக் கழுதைடா கண் வைக்கப் போறது?”
“நம்ம கண்ணே படும் தாத்தா… புறப்படறதுக்கு முன்னே பீமா ஒரு பூசனிக்காய்ச் சுற்றிட சொல்கிறான்.”
அப்புசாமி நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்து கெ ண்டார்.
பீமாராவ் பூசணிக்காய்க்கு மஞ்சள் குங்குமம் தடவினான். ரசகுண்டு கட்டிக் கற்பூரம் ஒன்றை வைத்துக் கொளுத்த, பீமா பூசணிக்காயைத் தூக்கி அப்புசாமியின் முகத்துக்கு மேலும் கீழுமாக, இட வலமாக இரண்டு தரம் காட்டினான்.
“மூன்றாவது சுற்றில் அவன் கை தடதடவென்று நடுங்கியது. வெந்து கொண்டி ந்த கற்பூரம் பயங்கரமாக ஆடியது.
“பீமா! பீமா பார்த்து, பார்த்து. கற்பூரம் தாத்தா ஜிப்பாவுக்குள் விழுந்துடப்ப போகுது… பார்த்து… பார்த்து,” என்று ரசகுண்டு எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே கற்பூரக்கட்டி பூசணிக்காய் மேலிருந்து சரிந்து அப்புசாமியின் ஜிப்பாவுக்குள், தபால்பெட்டியில் கடிதம் விழுவதுபோல விழுந்து விட்டது.
‘ஆ! ஊ!’ என்று அப்புசாமி அலற ரசகுண்டு இரண்டொரு விநாடி தாமதித்துவிட்டு அவர் உடம்பைக் கீழே தள்ளி நாலு புரட்டி புரட்டி உருட்டினானோ, அவர் உடையில் தீ பிடிக்காமல் தப்பினாரோ! வயிறு, மார்பு, தொண்டைப் பகுதிகளில் மட்டும் எரிச்சலான எரிச்சல்.
“தாத்தனுக்கு நிச்சயமா திருஷ்டி! திருஷ்டி!” என்று குதூகலித்தான் பீமாராவ். “திருஷ்டியினால்தான் கற்பூரம் தாத்தாவைச் சுட்டிருக்கு.”
” ஹய்யோ! ஹய்யோ!” என்றார் அப்புசாமி எரிச்சல் தாங்காமல்… “ஏதாவது மருந்து போடுங்கடா பாவிங்களா”
“பயப்படாதீங்க தாத்தா! உங்களுக்கு மலைபோல வந்த சோதனை பனிபோல நீங்கிட்டுது… திருஷ்டி மட்டும் கழிக்காமலிந்திருந்தால் நீங்க நெருப்பு புடிச்சு செத்தே இருப்பீங்க.”
“ஏண்டா பாவி, திருஷ்டிப் பூசணிக்காயைச் சுற்றினதாலே தாண்டா விபத்தே வந்தது!”
“நீங்க குழப்பிக்காதீங்க தாத்தா… திருஷ்டி உங்களுக்கு ஏற்கனவே பட்டாயிட்டுது. தெருத் தெருவா நின்னு ‘காள் காள்’னு கத்தினீங்களே! அப்பவே திருஷ்டிப்பட்டாச்சு அது உங்க உயிரையே வாங்கியிருக்கும். அப்படி உயிரை வாங்கிடாதிருக்க, ஒரு சின்ன நெருப்புக் காயம்… இத்தோட பெழைச்சீங்களே…”
“ஏண்டா ரசம்! எனக்கு கின்னஸ் ரிகார்டுலே இடம் கிடைக்குமாடா?”
“அது தெரியாது தாத்தா… ஆஸ்பத்திரியிலே நிச்சயம் கிடைக்கும். பாட்டிக்கு போன் செய்தோம். ஒரு நர்ஸிங்ஹோம்லே ஏற்பாடு பண்ணியிருக்கிறாங்க… பாட்டின்னா பாட்டிதான். பாருங்க, உங்க தொண்டைக்கு ஒரு ஆபத்துன்னதும் நர்ஸிங்ஹோமிலே சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டார். எங்களுக்கெல்லாம் ஆயிரம் ஆயிரம்…”
“பாவிங்களா… என்னடா உங்களுக்கெல்லாம்… ஆயிரம்?”
ரசகுண்டு சமாளித்தான். “ஆயிரம் பாராட்டுக்கள் தாத்தா… இந்தக் காலத்திலே யார் ஆயிரக்கணக்கில் பாராட்டறாங்க… சொல்லுங்க.”
நர்ஸிங்ஹோமில் அப்புசாமி “ஹம்மா! எரிச்சல்! எரிச்சல்!” என்று அலறியவாறு படுத்திருந்தார் – “தாகம்! தாகம்! தண்ணி! தண்ணி!”
நீர் கேட்ட அவர் வாயில் சிறிது சிறிதாக ஐஸ் க்ரீமே ஸ்பூன் ஸ்பூனாக இறங்கியது.
அப்புசாமி கண்ணை விழித்துப் பார்த்தார். கையில் ஐஸ்க்ரீமுடன் சீதாப்பாட்டி!
“நீயா?”
“உங்கள் தொண்டைக்கு ஒன்றுமில்லை. நீங்க ஐஸ் க்ரீம் தவிர வேற எதுவுமே ஒரு மாசத்துக்குச் சாப்பிடக்கூடாதாம்.டாக்டர் ஹாஸ் திவன் ஸ்ட்ரிக்ட் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்…”
“சீதே! நான் எவ்வளவு அதிருஷ்சாலி! நெருப்பு சுட்டதும், ஒரு நன்மைக்கே… ஹி ஹி!” என்றார்.
“ப்ளீஸ்! நீங்க பேசவே கூடாது… ரெஸ்ட்! ரெஸ்ட்! ரெஸ்ட்டிலேயே இருக்கணும். மறுபடியும் ‘ஸைலன்ஸ்’ கத்துக் கத்தினால் தொண்டையையே அறுக்கறாப்பலே ஆயிடும். வோகல்கார்ட் போயிட்டுதுன்னா அப்புறம் நீங்க பேசவே முடியாதுன்னும் சொன்னார்!” என்றவாறு ஐஸ்க்ரீம் கப்பை அவர் வாய்க்குள் சற்று அதிகமாகவே சாய்த்தார் சீதாப்பாட்டி.
அந்த இன்பம் அவர் வாயை நிறைத்து மார்பிலும், வயிற்றிலும் வ ந்து, அவரது காயங்களின் மீது குளுகுளு வென ஊர்ந்து சென்றது.
“உங்கள் கத்தல் முக்கியமா, தொண்டை முக்கியமா, சாய்ஸ் இனி யுவர்ஸ்!” என்றாள் சீதாப்பாட்டி.
“சீதே! எனக்கேன் கத்தல்? நீ இல்லாவிட்டால் நான் ஒரு வத்தல்!” என்றவாறு அடுத்த கப் ஐஸ்க்ரீம் சாப்பிடத் தயாராக அப்புசாமி வாயைத் திறந்து வைத்துக் கொண்டார்.

         ஆறாத சுடச்சுட பொங்கலை ஆற அமர அமர்ந்து அப்புசாமி ஒரு வாய் எடுத்துச் சுவைத்திருப்பார்.“ஸைலேன்ஸ்!” என்ற மாபெரும் கத்தல் அவரைத் தூக்கிவாரிப்போட வைத்தது. அவரை என்பதைவிட அவர் கையிலிருந்த பொங்கலை. அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பொங்கல் பொட்டலம் துள்ளி மண்ணில் விழுந்து புரண்டது.ஐயோன்னா வருமா, அப்பான்னா வருமா? சுண்டலாக இருந்தாலும் பொறுக்கி எடுத்துத் துடைத்துக் கிடைத்து, குழாய்த் நீரில் அலம்பிக் கிலம்பி, உலகத் தமிழ் மாநாட்டுத் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் போல் தட்டுத் தடுமாறித் தப்பும் கிப்புமாக ஓரளவு சமாளித்துவிடலாம்.ஆனால் இது சுத்தமாகப் போயே போன தென்னக காங்கிரஸ் கேஸ். அட, விழுந்ததுதான் விழுந்தது! இப்படியா விழ வேண்டும்!வெண் பொங்கலுக்கு, அதுவும் மார்கழி மாசத்து வெண் பொங்கலுக்கு, அதுவும் விடியற்காலையில் கோவிலில் ஓசியில் கிடைக்கிற பொங்கலுக்கு இத்தனை ருசியா,சே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்றே!எந்தச் சோதா அப்படிக் கத்தியது என்று சுதந்திரப் பூங்காவைச் சுற்று முற்றுமாக ஒரு நோட்டம் விட்டார்.அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “ஸைலேன்ஸ்!” என்று மறுபடி அதே இடிக்குரல் வெளிப்பட்டு அவரை நடுங்க வைத்தது.சிமெண்ட் பெஞ்சிலிருந்து எழுந்தவர் தொம்மென்று உட்கார்ந்துவிட்டார்.இருளில் மரத்தில் ஒளிந்திருந்த காக்கா, குருவிகள் மற்றும் அடையாள அட்டைகளில்லாத பறவை இனங்கள் அந்த ‘ஸைலேன்ஸ்’ சத்தம் கேட்டுக் குபீரென்று பறந்தன.

 

          மரங்களிலிருந்து வயதான சருகுகள் பொலபொல என உதிர்ந்தன; -தேவர்கள் இலைமாரி பொழிவது போல.எங்கேயிருந்து வந்தது இந்தப் பயங்கர ஒலி? பொங்கலை மண்ணுக்கனுப்பிய பொல்லாத சத்தம் வந்த திசை எது?பூங்காவில் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான செடிக் கூண்டுகள் கும்பலாக ஒரு பக்கம் கடாசப்பட்டிருந்தன. அவற்றின் அருகிலிருந்த ஒரு மொட்டை பெஞ்ச்சில் சாதுவாக ஒரு மொட்டைத்தலை வாலிபன் உட்கார்ந்திருந்தான்.அப்புசாமி ஆச்சரியப்பட்டுப் போனார், “இவ்வளவு ஒல்லிப் பிச்சானாக இருக்கிற நீங்களா அவ்வளவு பெரிய சத்தம் எழுப்பியது?”“இது சாதா ரகம். விடியற்காலையில் மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுமேன்னு கொஞ்சம் மெதுவாக கத்தினேன்” என்றான் தொண்டையை நீவிக் கொண்டு.“எங்கே, இன்னொரு தரம் கத்துங்க பார்க்கலாம்!” அப்புசாமி நேயர் விருப்பம் தெரிவித்தார் ஆர்வத்தோடு.“ஸ்டுடியோவுலே நான் ஒரு தரம் கத்தறதுக்கு ஒரு ரூபா இருபது பைசா தருவாங்க.”“ஸ்டுடியோ?” அப்புசாமி நெய்ப்பிசுக்கான விரலால் தலையைச் சொறிந்து கொண்டார். “நீங்க ஸ்டுடியோவிலே வேலை செய்யறவரா?”சைலேன்ஸ் சஞ்சீவின்னு நீங்க கேள்விப்பட்டதில்லையா?” அந்த வாலிபன் கேட்டு விட்டு, “கொஞ்சம் இருங்க.

 

       பனி விலகறதுக்குள்ளே இன்னும் நாலு ஸைலேன்ஸ் வுட்டுட்டுப் பேசறேன்.” என்றவன் “ஸைலேன்ஸ்!” என்று கத்தினான். அவன் கத்தின ஒலி அலைஅப்புசாமியின் காதில் ரொய்ங்கென்று புகுந்து தலை கிர்ர்ர் அடித்துத் தொப்பென்று உட்கார்ந்து விட்டார்.ஸைலேன்ஸ சஞ்சீவிக்கு சினிமா ஸ்டுடியோ ஒன்றில் சற்று வித்தியாசமான வேலை. படப்பிடிப்பில் ஷாட் ரெடியானதும், ‘ஸைலென்ஸ்’ என்று உரக்கத் கத்த வேண்டும். ஒரு தடவை கத்துவதற்கு ஒரு ரூபாய் இருபது பைசா. மூணு வருஷமாகக் கத்தி வருகிறான். ஒரு நாளைக்குச் சராசரி பத்து ஷாட் கூலி கிடைக்கும். மாதச் சம்பளத்தில் அமர்த்திக்கொள்ள யாரும் முன் வரவில்லை.

 

     “என்னவோ வண்டி ஓடுது சார். இந்தக் குளிர் காலத்திலே, பனியிலே நல்லா பிராக்டிஸ் பண்ணிப்பேன். நமக்குத் தொண்டைதானே சோறு போடுது.”சஞ்சீவியின் வாழ்க்கையைக் கேட்டதும் அப்புசாமிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.ஆகா, மனிதர்கள்தான் எத்தனை விதங்களில் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். நாமும் இருக்கிறோமே?சஞ்சீவியிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டை அடைந்தார். பஸ்ஸில் ஏறியதும் கம்பியைப் பிடித்துக் கொண்டு முன்னேறினாரே தவிர, டிக்கெட் வாங்கவில்லை. சஞ்சீவி பற்றிய சிந்தனையேதான்!“யோவ் பெரிசு! எங்கேய்யா போவணும்? சரசரன்னு முன்னாலே போயிட்டா உங்க தாத்தாவா வந்து டிக்கெட் எடுப்பான்?” கண்டக்டர் காய்ந்தார்.அப்புசாமிக்குக் கண்டக்டரின் குரல் காதில் விழவில்லை. மனசுக்குள் ‘ஸைலேன்ஸ்’ குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. ‘நம்மால் அவ்வளவு பெரிசாகக் கத்த முடியுமா?’கண்டக்டர் மகா எரிச்சலாகி, “யோவ் சாவு கிராக்கி டிக்கெட் வாங்காம டபாய்ச்சுடலாம்னு பார்க்கிறியா? யோவ் பெரிசு! காது கீது செவுடா? நடிக்கிறியா? வேலை காட்றயா வேலை? வயசாச்சேன்னு பாத்தா மரியாதையைக் கெடுத்துகிருவாங்க… பார்த்தீங்களா, அந்தக் கிழவனை? இவ்வளவு கத்தறேனே… வந்து டிக்கெட் எடுக்கறானா பார்.”அப்புசாமியின் மனசு பூரா ‘சைலேன்ஸே’ நிரம்பியிருந்தது. ‘அது மாதிரி நாம கத்த முடியுமா? அடேங்கம்மா, எப்பேர்ப்பட்ட சிங்கக்குரல்! அணுகுண்டுக்குரல் ஒரு மனுஷத் தொண்டையிலிருந்து இத்தா சோடு சத்தம் வெளியிலே வருமா? பயல் நாறாட்டம் இருக்கான்.

 

      நான்கூட சீதேக் கியவியோடு சண்டை போடறப்போ. சபதம் போடறப்போ உரக்கக் கத்தியிருக்கேன், ஆனால் இது அதி உன்னத மஹா கத்தல். ஆ! என்ன மாதிரி கத்தினான்!அடுத்த கணம், அவரையும் அறியாமல் ‘ஸைலேன்ஸ்!’ என்ற கத்தல் அவரிடமிருந்து வெளிப்பட்டுவிட்டது. நல்ல உரத்த சத்தமாகவே ஸைலேன்ஸ் வந்துவிட்டது. பூங்காவில் ஒலித்த சஞ்சீவியின் குரலில் பாதி அளவாவது கத்தியிருப்பார்.கண்டக்டரின் கையிலிருந்த டிக்கெட் புத்தகங்கள் தொபதொபவென்று கீழே விழுந்தன.டிரைவர் கிர்ரீச் என்று பிரேக் அடித்தார். பஸ்ஸிலிருந்த பயணிகளுக்கு மூச்சு முட்டியது. காதில் கும்மென ரீங்காரம்.அப்புசாமியே ஆச்சரியப்பட்டார், நம் தொண்டைக்குள்ளிருந்தா இவ்வளவு பெரிய ஸைலேன்ஸ் கிளம்பியது என்று – சில ஒல்லித் தாய்மார்கள் அஞ்சு கிலோ குழந்தையைப் பிரசவித்து ஆச்சரியப்படுவதுபோல.தன் குரல் கேட்டுப் பயணிகள் எல்லாரும் திகைப்பதையும், பஸ் பூராக் கப்சிப்பென்று அமைதியாகி, ஒரு வகைப் பீதி படர்ந்த முகத்துடன் விழிப்பதையும் அப்புசாமி பார்த்தார். மகா மகிழ்ச்சி ஏற்பட்டது.

 

    “அட, நம்ம சவுண்டும் பரவாயில்லையே!’ என்று மகிழ்ந்தவர், தன்னையே சோதித்துக் கொள்வது போல, ‘ஸைலேன்ஸ்!’ என்ற இரண்டாம் தடவையாகக் கத்தினார்.கண்டக்டருக்குத் தன்னைத்தான் அப்புசாமி அப்படி ‘ஸைலேன்ஸ்!’ என்று கத்திக் கண்டிக்கிறார் என்று தோன்றிவிட்டது.‘அடேங்கம்மா! என்ன மாதிரி சவுண்ட்!’ என்று பிரமித்த கண்டக்டர் அடுத்த நிமிஷன் தானே அப்புசாமியை நாடி வந்து பயமும் மரியாதையும் வியப்புமாக அவரைப் பார்த்தான். “பெரீவரே எங்க போகணுங்க?” என்று பணிவாகக் கேட்டு டிக்கெட் தந்துவிட்டுப் போனான்.சீட்டில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞன் எழுந்து, “பெரீவரே, நீங்க உட்காருங்க. நான் அடுத்ததிலே இறங்கறேன்,” என்று அவருக்கு இடம் கொடுத்தான்.அப்புசாமி தனது ஸ்டாப்பிங் வந்து இறங்குகிற வரையில் பஸ்ஸில் ஒரு துளிச் சத்தமில்லை. கப்சிப், எல்லாரது பார்வையும் அப்புசாமியையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன.சீதாப்பாட்டி மத்தியானம் ஒரு இருபது நிமிட குட்டித் தூக்கம் போடுவது வழக்கம்.

 

      கையில் விரித்து வைத்துக்கொண்ட ரீடர்ஜ்டைஜஸ்ட் தொப்பென்று மார் மீது குப்புற விழுந்திருக்கும். கதவைத் தடடியோ, மணியை அழுத்தியோ தூக்கத்தைக் கெடுத்துக் தொந்தரவு செய்யாமல் உள்ளே வருவதற்காக அப்புசாமியிடமும் ஒரு சாவி தந்து வைத்திருந்தாள். அவர் அதை இடுப்பு அரைஞாணின் கறுப்புக் கயிற்றில் ஒரு பின்னூசியில் கோத்து வைத்திருப்பார். மூக்கால்வாசி நேரங்களில் அதை எடுக்க சோம்பல் பட்டுக் கொண்டு மணியை அழுத்திவிடுவார்.அப்புசாமி தனது உரத்த சிந்தனையோடு தெருவில் நடந்து கொண்டிருந்தார். ஓர் அரியகலை தனக்குக் கை வந்துவிட்டது போன்ற பெருமிதம் அவருக்குள் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.‘ஸைலேன்ஸ்!’ என்று தன்னாலும் உரக்கக் கத்த முடிகிறதே! கொஞ்சம் பயிற்சி மேற்கொண்டால் அந்த சஞ்சீவியைவிட நன்றாகவே – சே சே! அவன் பிழைப்பில் மண்ணைப் போடக்கூடாது பாவம் ஏழை. நாம் நம்ம சந்தோஷத்துக்காகக் கத்திக்கலாம். ஏன், சீதேக் கிழவியை விரட்டறதுக்காகக்கூடக் கத்தலாம்.இப்பேர்ப்பட்ட மகா சக்தி தனக்குள் ஒளிந்திருப்பதை எவரும் இதுவரை கண்டுபிடித்துச் சொன்னதில்லையே!நாதப் பிரம்மம். பிரம்ம நாதம். பிரம்மாண்ட நாதம்.

 

    ‘சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி…’ ஆகா! சத்தம் – நாதம் – ஒலி அணுகுண்டு.மனித குலம் ரகசியமாகப் பேசிப் பேசியே நாசமாய்ப் போனது. கோழைகளாகிக் குள்ள நரியாகியது. சிறு மனிதா, சிங்கம் போல் கர்ஜனை செய்யடா, சிவாஜிகூட தன் சிம்மக் குரலால் தானே முன்னுக்கு வந்தார்?மனிதா, முழங்கு! உன் குரலை எழுப்பி உலகைக் கூப்பிடு.அப்புசாமி அங்குமிங்கும் சுற்றிவிட்டு மதியத்துக்கு வீடு வந்து சேர்ந்தபோது, சீதாப்பாட்டியிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலிகள் செல்லம் கொஞ்சியவாறு பிரிந்து கொண்டிருந்தன.அப்புசாமி குறும்பாகச் சிரித்துக் கொண்டார். ஒரு ‘ஸைலேன்ஸ்’ போட்டுக் கிழவியை அலறி அடித்துக் கொண்டு எழுந்திருக்கும்படிச் செய்தால் என்ன?அடுத்த விநாடி “ஸைலேன்ஸ்!” என்று ஒரு கத்தல் போட்டார்.சீதாப்பாட்டி திடுக்கிட்டுத் தூக்கிவாரிப்போட, அரக்கப் பரக்க எழுந்து மிரள மிரள விழித்து, ஏதோ பூகம்பம் வந்துவிட்டதுபோல அறைக் கோடிக்கு ஓடினாள். அங்கிருந்து புத்தக அலமாரிக்கு விரைந்து சென்று அதைப் பிடித்துக்கொண்டாள். டீபாயைச் சரி செய்தாள். அதன்மீதிருந்த பூஜாடியை நிமிர்த்தி வைத்தாள்.“நீங்க… நீங்க… நீங்க எப்ப வந்தீங்க? யார் கத்தினது? ஏன் வாட் இஸ் இட் கோயிங் ஆன் ஹியர்?”அப்புசாமி இரண்டாவது ‘ஸைலேன்ஸ்’ போட்டார்.

 

      சீதாப்பாட்டி காதில் கை வைத்துக்கொண்டு படுக்கையில் தொப்பென்று உட்கார்ந்து விட்டாள். காது ஜிவ்ஜிவு என்றது. அவள் கன்னத்தை யாரோ பலமாகத் தாக்கி விட்டது போல் இருந்தது.“வாட் ஹாப்ப ண்ட் டு யூ? வாட் ஸ் ராங் வித் யூ சார்? ஏன் இந்த மாதிரி காட்டுக் கத்தலாக் கத்தினீங்க? பயந்தே போய்விட்டேன். ஹாரிபிள். கிறுக்குப் பிடுச்சுட்டுதா என்ன?” படபடத்தாள்.அப்புசாமி மூன்றாவது முறையாக ஸைலேன்ஸைப் பிரயோகித்தார்.சீதாப்பாட்டி கப்சிப் ஆனது மட்டுமில்லை; அடுத்த அறைக்கு ஓடிக் கதவைத் தாழ் போட்டு கொண்டு விட்டாள்.அப்புசாமி ரேப் செய்ய வந்த பழைய ஸ்டைல் வில்லன் மாதிரி சிரித்துக் கொக்கரித்தார்.“இந்த சீதேக் கிழவியையும் பயப்படுத்த என்கிட்டே ஓர் ஆயுதம் இருக்கிறதே! சப்பாஷ்!” என்று எண்ணிக் கொண்டவர், உற்சாக மிகுதியோடு “சைலேன்ஸ்,” என்று கத்த வாயெடுத்தார்.அடுத்த நிமிஷம் அவர் வாயைச் சீதாப்பாட்டியின் கரம் பொத்தியது. குரல் கெஞ்சியது. “ப்ளீஸ், டோன்ஸ் ஷெளட் அகெய்ன். என் ஹார்ட் பீட் எப்படி அடிக்கிறது பாருங்கள்.”“நான் அடிக்கடி இப்படித்தான் கத்துவேன்மே. இதெல்லாம் துட்டு சமாசாரம்.

 

     ஒரு தடவை கத்தினால் பத்து ரூபா தர ஆள் ரெடியா இருக்குதுமே… நான் பைத்தியக்காரனாட்டம் கத்தறேன்னு பார்த்தியா?”“நீங்க என்ன சொல்றீங்க?”“உன்கிட்ட அந்த கதையெல்லாம் சொல்லிட்டிருக்க நான் ஒண்ணும் பிஸ்கோத்து இல்லே. இப்போ கைமேல நீ பத்து ரூவா வெச்சால் கத்தாமலிருக்கேன். என்ன சொல்றே?”சீதாப்பாட்டி, “ப்ளீஸ்… ப்ளீஸ்… கத்தாதீங்க இதோ டென் ருபீஸ்!” என்று அவசர அவசரமாகக் கைப் பையைத் திறந்து பத்து ரூபாயை அவரிடம் தந்தாள்.“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் சஞ்சீவியைச் சேரும்” என்று பாடியபடி ரூபா நோட்டுக்கு ஒரு முத்தம் தந்து ஜிப்பாப் பையில் போட்டுக் கொண்டு வெளியேறினார் அப்புசாமி.சீதாப்பாட்டியின் முகம் சினத்தால் சிவந்தது, ‘ப்ளாக்மெயிலில் இது ஒரு ரகமா?’வெற்றி மதர்ப்பில் ரூபாயுடன் செல்லும் கணவனையே கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். கோபம் கவலையாக மாறியது சில விநாடிகளில்.‘அவர் ஒரு பயங்கர பிளாக்மெயில்காரர் பத்து ரூபாய் ரேட்டை நாளைக்கே நூறு ரூபாய் என்று கூட மாற்றலாம். ஐ காண்ட் டான்ஸ் ·பர் ஹிஸ் டியூன்ஸ். என்ன மாதிரி டெவலப் பண்ணிகிட்டுப் போவாரோ தெரியலையே…’ என்ற கவலை ரேகைகள் அவள் முகத்தில படிந்தன.

 

     “சைலேன்ஸ்!”அப்புசாமி தெருக்கோடியில் போய் எழுப்பிய ஓசை காற்றில் விரைந்து வந்து அவள் காதைத் தாக்கியது. ‘ரோடில் நின்றும் கத்த ஆரம்பித்து விட்டாரா?’.அவமானமும் ஆத்திரமும் சீதாப்பாட்டியின் முகத்தில் தெறித்தன.வசூல் அமோகமாக ஆகிக் கொண்டிருந்தது. “டேய் ரசம், ‘தை பிறக்க வழி பிறக்கும்’னு பெரியவங்க தெரியாமச் சொல்லலை” என்றார் அப்புசாமி, சில்லறையை எண்ணிக்கொண்டே.“தாத்தா,” என்றான் ரசகுண்டு ரூபாய் நோட்டுகளை எண்ணியவனாக. தை பிறக்க வழி பிறக்காம இருக்கணுமேன்னுதான் தாத்தா என் கவலை. இன்னிக்கு மட்டும் பதினாறு சென்ட்டர்லே நீங்க நாற்பத்தெட்டு தடவை கர்ஜனை கொடுத்திருக்கீங்க.”அப்புசாமி பெருமிதத்துடன் தொண்டையை நீவிவிட்டுக் கொண்டார். தொண்டைக்குப் பிரத்தியேகமாக நண்பன் ரசகுண்டு தைத்துத் தந்திருந்த வெல்வெட் மிருதுவாக இருந்தாலும், மிகவும் இறுக்குவது போலிருந்தது.“ரசம், இதை வேணுமானாக் கழற்றிக் கடாசிடட்டுமா?”“தாத்தாவ்! கெடுத்தீங்களே காரியத்தை. காரத்தேகாரங்களுக்கு பிளாக் பெல்ட் மாதிரி இது உங்களுக்கு எவ்வளவு அழகாக இருக்கு! உங்க தொண்டைதான் இப்போ நம்ம சொத்து. உங்க தொண்டைதான் நம்ம முதலீடு, நம்ம வியாபாரம், நம்ம லாபம். ‘தாய்நாட்டுத் தொண்டை’ன்னு நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?”“ஊஹ¥ம். தாய்நாட்டுத் தொண்டுன்னுதான்னு சொல்லுவாங்க,” என்ற அப்புசாமி.

 

    “வசூலை எண்ணிக் கணக்குக் கட்டிட்டியா?” என்றார்.“பதினாறு சென்ட்டர் வசூல் எழுபத்து மூணு ரூபா அம்பது பைசா தாத்தா. என் திருஷ்டியே பட்டுடும் போலிருக்கு. பீமாவைப் பூசனிக்காயும், கற்பூரமும் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கிறேன். நீங்க படுத்துகிட்டு ஆ காட்டுங்க…” என்றான் ரசகுண்டு.அப்புசாமியின் திறந்த வாயில் ஒரு சின்னப் புனலை வைத்து ரசகுண்டு பிளாஸ்கிலிருந்து மிளகுரசத்தை ஊற்றினான், ரேடியேட்டருக்குத் நீர் கொட்டுவது போல.சூடான மிளகுரசம் அவரது தொண்டைக்குள் இதமாக இறங்கியது.‘ருக்மிணி நல்லாவே செய்யறாடா மிளகு ரசம்” என்று பாராட்டினார் அப்புசாமி.“நீங்க முதலாளி என்கிற பயபக்தியுடன் செய்ததாச்சே தாத்தா! நம்ப அடுத்த சென்ட்டர் ‘மெரீனா பீச்!”வெற்றிகரமான திரைப்படம்போல அப்புசாமியின் அதிரடிக் குரல் நகரில் பல பஸ் ஸ்டாப்பிங்குகளிலும், பூங்காக்களிலும், நடைபாதைகளிலும், ஒலிக்கத் தொடங்கின. ஒரு கத்தலுக்கு ஒரு ரூபாய் என்று திட்டமிட்டு நண்பர்கள் ரசகுண்டு, பீமாராவ் ஆகியோருடைய ஒத்துழைப்புடன் தனது நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார் அப்புசாமி.க்ரீச்! பிரேக் அடித்தாள் சீதாப்பாட்டி. ஆனால் அதற்குள் காரியம் முடிந்துவிட்டது.மீசையுடன் கூடிய ஒரு தலை தரையில் உருண்டு ஓடியது “மைகாட்! நான் என்ன செய்யப் போகிறேன்…”சீதாப்பாட்டியின் இருதயம் நின்றே விட்டது – சில விநாடி!அப்புறம் நிதானமாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது அது மனிதத் தலையல்ல; மனிதத் தலை வரையப் பட்ட பூசனிக்காய் என்று.“பூசனி! பூசனி! நென்னு பூசனி!” என்று துடித்துப் பதறி பூசனிக்காயை எடுத்த பீமாராவ் அது இருந்த கோலத்தைப் பார்த்து, “ஒடதுணோயித்து! நென்னு பூசனி! நெத்து ரூவா பூசனிதொட்டு ஆக்ஸிடெண்ட்!”பல்லவன் மோதிய ஆட்டோ மாதிரி பூசனிக்காய் நொறுங்கி வெகுவாக உடைந்துவிட்டிருந்தது.

 

     சேதாரமான பூசனியைத் தூக்கிக் கொண்டு கோபமாகக் கார் அருகே பீமா நியாயம் கேட்க விரைந்தான்- லுங்கி கட்டிய கண்ணகியாக.அவ்வா! நீ வா?” பாட்டியைப் பார்த்து பீமா ஆச்சரியப்பட்டான். “கார் மாத்திப் பிட்டீரா? அவ்வா, ஷோக்காயிதே!”“மை டியர் ஸன்!” என்றாள் சீதாப்பாட்டி நிம்மதியுடன். “ஹாப்பி நியூ இயர் மை ஸன். அதைத் தூக்கிக் கீழே போட்டுவிட்டுக் காரில் ஏறு… நீ எங்கே போகணும்? டிராப் செய்துடறேன்…”“அவ்வா!” தலையைச் சொறிந்தான் “பூசனி தெக்கன் பரேன்னு தாத்தானகிட்டே ஹேவிட்டு பந்தேன்.”“பீமா உட்கார். உங்க தாத்தாகிட்டயே கொண்டு போய் இறக்கிவிடறேன். ஒரு பூசனிக்காயென்ன, ஒன்பது வாங்கித் தரேன்…உங்க தாத்தா கறிகாய் பிஸினஸ் வேறு பண்ணுகிறாரா? ந்யூஸ் டு மி!”தாத்தாவின் கத்தல் பிஸினஸ் சக்கைப் போடு போடுவதாகவும் தொண்டைக்கு திருஷ்டி சுற்றிப் போடுவதற்காகத்தான் பூசனிக்காய் என்பதையும் பீமா ராவ் தெரிவித்ததைப் பாட்டி பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்து விட்டு அவன் கையில் நூறு ரூபாய் நோட்டு ஒன்றைத் தந்தாள்.“சில்லறையாக் கொடுத்பிடி அவ்வா. கடைக்காரா சேஞ்ச் இல்லே ஹேளுவா!”சீதாப்பாட்டி சிரித்தாள் “மை மோஸ்ட் பிலவட் ஸன்! திஸ் இஸ் நாட் ·பர் பூசனி. பாட்டியின் புதுவருட கி·ப்ட் புதுப் பூசனி வாங்க இந்தா ஐம்பது ரூபாய் பூசனி வாங்கிக் கொண்டு மீதியை நீயே எடுத்துக்கோ!”“அவ்வா… நான் தும்ப அதிருஷட மாடிவை.

 

       மகாலட்சுமி நீயே…!”சீதாப்பாட்டி பீமாராவைக் காய்கறிக் கடையருகே இறக்கிவிட்டாள். “பீமா, மை ஸன், நான் சொன்னதை டோன்ட் ·பர்கெட்!”சீதாப்பாட்டி பீமாராவைக் காய்கறிக் கடையருகே இறக்கிவிட்டாள். “பீமா, மை ஸன், நான் சொன்னதை டோன்ட் ·பர்கெட்!”“அந்தக் கியவி ஏண்டா இப்ப வரணும்? அவள் என்னைப் பார்க்க வேண்டிய அவசியமென்ன?அப்புசாமி தொண்டையை நீவி விட்டுக்கொண்டு கவலைப்பட்டார்.“தாத்தாவ்! தொண்டையை ஏன் அப்படி அழுத்தி அழுத்தி நீவுறீங்க… எடுங்க கையை…” ரசகுண்டு அதட்டினான்.“கவலைடா. கவலை.” என்றார் அப்புசாமி. பீமாராவ் ஒரு குண்டைத் தூக்கிப் போடறானே! உன் காதிலே விழலையா? பொண்ணு வரப்போற மாதிரி பாட்டி வரப் போறாளாம் என்னைப் பார்க்க.”‘வரட்டுமே. அதைப் பற்றி யோசிக்க நான் இருக்கேன். அதுக்காக நீங்க ஏன் தொண்டையை நீவுறீங்க…” என்ற ரசகுண்டு கோபமாக, “டேய் பீமா! உனக்கு அறிவிருக்காடா…” என்று பீமாராவ்மீது பாய்ந்தான்.‘ஏனப்பா, ஏனு ஆயித்து நினகெ?”“வெங்காயம் ஆச்சு! தாத்தா கழுத்துலே மப்ளர் கட்டி வைக்காம விட்டிருக்கியே… என்னாகும்டா கழுத்து? அறிவு வேணாம்? நமக்கெல்லாம் சோறு போடற தொண்டைடா… குளிர்காத்து எப்படி அடிக்குது. உறைக்கலையா உனக்கு?”ரசகுண்டு பல்லைக் கடித்தான் – பீமாவைக் கடிக்க முடியாததால்.

 

     பரபரப்புடன் ஒரு முரட்டு மப்ளரை அப்புசாமியின் கழுத்தில் சுற்றினான் பீமாராவ். ரசகுண்டின் மனைவி எந்த யுகத்திலோ போட்ட முள்ளு மப்ளர் அது.“என் தொண்டையை எந்த மப்ளராலும் காப்பாற்ற முடியாதுடா? உங்க பாட்டிக் கியவி வரப் போகிறாள் என்றதுமே தொண்டை ஒழிந்தது என்று தீர்மானித்துவிட்டேன். தொண்டை நடுங்குது பார்,” என்றார் அப்புசாமி தீனமாக.“தாத்தா, பெண்சாதியைப் பார்த்தால் புருஷன்களுக்குத் தொடைதான் நடுங்கும். உங்களுக்குத் தொண்டையும் நடுங்குது… நான் ஒருத்தன் இருக்கிற வரைக்கும் உங்களுக்கோ, உங்கள் தொண்டைக்கோ, சம்பாத்தியத்துக்கோ ஒரு ஆபத்தும் வராது… உங்க வருமானத்தின் வாயில் பாட்டியால் மண்ணைப் போட முடியாது” ரசகுண்டு ஒரு ‘ப்ரித்ராணாய சாதூனாம்’ போஸ் கொடுத்தான்.வாசலில் சீதாப்பாட்டியின் கார் வந்து நின்றது. “அவ்வா பந்தாயித்து! அவ்வா பந்தாயித்து!” குதூகலமாக பீமாராவ் சீதாப்பாட்டியை வரவேற்க ஓடினான்.அவன் கைக்குச் சரேல் என்று பிரேக் போட்டு நிறுத்தினான் ரசகுண்டு. பிளாட்பாரத்தை உடைத்துக் கொண்டு சரியும் இஞ்சின்போல பீமராவ் சரிந்து விழுந்தான்.“ஓ! மை டியர் ஸன்!” என்றவாறு சீதாப்பாட்டி காரிலிருந்து இறங்கியவர் வேகமாக வந்து அவன் எழுந்திருக்க உதவி செய்தாள்.“அடே ரசம்” என்று கடுகடுத்தார் அப்புசாமி.

 

     “அந்தக் கிழவிக்கு இங்கே என்ன வேலையாம்? கேட்டு உடனே சொல்.”“தாத்தா…” என்ற ரசகுண்டு மியூஸிக் டைரக்டர் போலக் கையை ஆட்டினான். மெதுவாகப் பேசுங்கள். உங்கள் தொண்டையை அனாவசியமாகவெல்லாம் நீங்க உபயோகப்படுத்தக்கூடாது.”“வெல் ஸெட்” என்றவாறு சீதாப்பாட்டி ரசகுண்டின் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள். “உங்கள் தாத்தாவின் தொண்டையை ஒரு அதிசயம். நான் வந்திருக்கிறது உங்களையெல்லாம் இன்வைட் செய்யத்தான். உங்கள் தாத்தாவுக்கு இப்படி ஒரு ரிமார்க்கபிள் குரல் இருக்கிறது என்பது எனக்கு இத்தனை வருஷமாகத் தெரியாமல் போயிட்டுதுடா ரசம்,”“பாட்டி! நீங்க ஐஸ் வைக்காதீங்க. தாத்தாவோ நானோ அதற்கெல்லாம் மயங்கிடமாட்டோம். நீங்க முதல்வர்னா, தாத்தா கவர்னர். அவருக்கு உலக புகழ்ச்சி தேவையில்லை.”“மை டியர் ஸன் நமக்குள்ளே ஆயிரம் கசமுசா இருக்கலாம். ஆனால் அதிருஷ்ட தேவதை கதவைத் தட்டுகிறபோது நாம் முட்டாள்தனமாகச் சும்மா இருந்து விடக்கூடாது. கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் பீபிள் நாளைக்கு ஸிடிக்கு வருகிறார்கள். ‘எங்கள் பா.மு.கழகத்துக்கும் அவசியம் வருகை தரணும்’னு இன்வைட் பண்ணியிருக்கிறேன். உங்க தாத்தாவின் வொன்டர்·புல் வாய்ஸையும் ஒய் நாட் அப்போ இன்ட்ரட்யூஸ் பண்ணிக்கூடாதுன்னு தோணித்து. அப்புறம் உங்கள் வில் அண்ட் ப்ளஷர். அவர் உங்களுக்குச் சிநேகிதர்தான். ஆனால் எனக்கு ஹ்ஸ்பெண்ட்! அவருக்கு ஒரு புகழ் வருகிறது என்றால், அது எனக்கும் புகழ்தான். அதைத் தடுப்பதோ அனுமதிப்பதோ உங்கள் இஷ்டம்.”சீதாப்பாட்டி கிளம்பினாள்

 

      .“பாட்டி, பாட்டி… இருங்க!” என்றான் ரசகுண்டு.அவசரமாகத் தாத்தாவைக் கலந்தாலோசித்தான்.“தாத்தாப்…! பாட்டி உங்க ரிக்கார்டு, கின்னஸ் அது இது என்கிறா ள். என்ன சொல்றீங்க?”“இப்படித்தாண்டா அவள் என் நாக்கிலே தேன் தடவித் தடவி என் நாக்கே தேய்ஞ்சு போயிடுச்சு! ஆடு நனையுதேன்னு ஓநாய்க்கு ஏண்டா கவலை? இப்போ நான் சம்பாதிக்கிற வசூலும் போயிடப் போகுது. கிழவியை முதலிலே இடத்தைக் காலி பண்ணச் சொல்லு!” என்றார் அப்புசாமி கறாராக.“தாத்தா ரொம்பக் கெடுபிடி பண்றாரே…” என்றான் ரசகுண்டு தலையைச் சொறிந்துகொண்டு.“மை டியர் ஸன்” உங்க தாத்தாவுக்கு இது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிடி! அவரைச் சம்மதிக்க வைக்கிறது உன் கையிலதானிருக்கு…” என்ற பாட்டி, ஹேண்ட் பாக்கிலி ந்து தடித்த கவர்கள் இரண்டை எடுத்து அவனிடம் தந்தாள். “ஒன் ·பார் யூ… அண்ட் ஒன் ·பார் பீமா …மைகாம்பளிமெண்ட்ஸ்.”“ஒரு வருஷ டயரியா பாட்டி.”“டயரி மட்டில்லை…” என்று கண்ணைச் சிமிட்டி விட்டுப் பாட்டி நகர்ந்தாள். “பீமாகிட்டே எல்லாம் சொல்லியிருக்கேன். கேட்டுக்கே.”ரசகுண்டு புரிந்துகொண்டு ஆவலுடன் டயரியைப் பிரித்தான். பத்து நூறு ரூபாய் நோட்டுக்கள் உள்ளே உறக்கிக் கொண்டிருந்தன.

 

    “பாட்டின்னா, பாட்டிதான்! நாட்டு நடப்பு தெரிந்த பாட்டி!” என்று ரசகுண்டு மகிழ்ந்தான். “அவுது! அவுது!” என்று பீமாராவ் குதூகலமாக ஆமோதித்தான்.அப்புசாமியின் தொண்டைக்கு விசேஷ ஆராதனை நடந்து கொண்டிருந்தது.பன்னீர், சந்தனம் தடவி குங்குமப் பொட்டு இட்டு, பூமாலைச் சுற்றி ஊதுவத்தி கற்பூரம் காட்டி…“ஏண்டா பசங்களா, பலிகடாவுக்கு அலங்கரிக்கிற மாதிரி… என் தொண்டைக்கென்னடா இத்தனை அலங்காரம்?”“தாத்தா! கம்னே இரு. திருஷ்டிதோஷம் கழிபேகு.”அப்புசாமி குழம்பினவராக, என்னடா ரசம் சொல்றான் இவன்?” என்றார்.“நீங்க கின்னஸ் ரிகார்ட் ரிப்போர்ட்காரர்களைச் சந்திக்கப் போகறீங்க இல்லையா! உங்க தொண்டைக்கு இப்படி ஒரு அதிருஷ்டம் வந்திருக்கேன்னு யார் கண்ணும் படாமல் இருக்கணும்னு திருஷ்டி சுற்றிப் போடணும்கறான்.”“என் மேலே எந்தக் கழுதைடா கண் வைக்கப் போறது?”“நம்ம கண்ணே படும் தாத்தா… புறப்படறதுக்கு முன்னே பீமா ஒரு பூசனிக்காய்ச் சுற்றிட சொல்கிறான்.”அப்புசாமி நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்து கெ ண்டார்.பீமாராவ் பூசணிக்காய்க்கு மஞ்சள் குங்குமம் தடவினான்.

 

      ரசகுண்டு கட்டிக் கற்பூரம் ஒன்றை வைத்துக் கொளுத்த, பீமா பூசணிக்காயைத் தூக்கி அப்புசாமியின் முகத்துக்கு மேலும் கீழுமாக, இட வலமாக இரண்டு தரம் காட்டினான்.“மூன்றாவது சுற்றில் அவன் கை தடதடவென்று நடுங்கியது. வெந்து கொண்டி ந்த கற்பூரம் பயங்கரமாக ஆடியது.“பீமா! பீமா பார்த்து, பார்த்து. கற்பூரம் தாத்தா ஜிப்பாவுக்குள் விழுந்துடப்ப போகுது… பார்த்து… பார்த்து,” என்று ரசகுண்டு எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே கற்பூரக்கட்டி பூசணிக்காய் மேலிருந்து சரிந்து அப்புசாமியின் ஜிப்பாவுக்குள், தபால்பெட்டியில் கடிதம் விழுவதுபோல விழுந்து விட்டது.‘ஆ! ஊ!’ என்று அப்புசாமி அலற ரசகுண்டு இரண்டொரு விநாடி தாமதித்துவிட்டு அவர் உடம்பைக் கீழே தள்ளி நாலு புரட்டி புரட்டி உருட்டினானோ, அவர் உடையில் தீ பிடிக்காமல் தப்பினாரோ! வயிறு, மார்பு, தொண்டைப் பகுதிகளில் மட்டும் எரிச்சலான எரிச்சல்.“தாத்தனுக்கு நிச்சயமா திருஷ்டி! திருஷ்டி!” என்று குதூகலித்தான் பீமாராவ். “திருஷ்டியினால்தான் கற்பூரம் தாத்தாவைச் சுட்டிருக்கு.”” ஹய்யோ! ஹய்யோ!” என்றார் அப்புசாமி எரிச்சல் தாங்காமல்… “ஏதாவது மருந்து போடுங்கடா பாவிங்களா”“பயப்படாதீங்க தாத்தா! உங்களுக்கு மலைபோல வந்த சோதனை பனிபோல நீங்கிட்டுது… திருஷ்டி மட்டும் கழிக்காமலிந்திருந்தால் நீங்க நெருப்பு புடிச்சு செத்தே இருப்பீங்க.”“ஏண்டா பாவி, திருஷ்டிப் பூசணிக்காயைச் சுற்றினதாலே தாண்டா விபத்தே வந்தது!”“நீங்க குழப்பிக்காதீங்க தாத்தா… திருஷ்டி உங்களுக்கு ஏற்கனவே பட்டாயிட்டுது.

 

      தெருத் தெருவா நின்னு ‘காள் காள்’னு கத்தினீங்களே! அப்பவே திருஷ்டிப்பட்டாச்சு அது உங்க உயிரையே வாங்கியிருக்கும். அப்படி உயிரை வாங்கிடாதிருக்க, ஒரு சின்ன நெருப்புக் காயம்… இத்தோட பெழைச்சீங்களே…”“ஏண்டா ரசம்! எனக்கு கின்னஸ் ரிகார்டுலே இடம் கிடைக்குமாடா?”“அது தெரியாது தாத்தா… ஆஸ்பத்திரியிலே நிச்சயம் கிடைக்கும். பாட்டிக்கு போன் செய்தோம். ஒரு நர்ஸிங்ஹோம்லே ஏற்பாடு பண்ணியிருக்கிறாங்க… பாட்டின்னா பாட்டிதான். பாருங்க, உங்க தொண்டைக்கு ஒரு ஆபத்துன்னதும் நர்ஸிங்ஹோமிலே சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டார். எங்களுக்கெல்லாம் ஆயிரம் ஆயிரம்…”“பாவிங்களா… என்னடா உங்களுக்கெல்லாம்… ஆயிரம்?”ரசகுண்டு சமாளித்தான். “ஆயிரம் பாராட்டுக்கள் தாத்தா… இந்தக் காலத்திலே யார் ஆயிரக்கணக்கில் பாராட்டறாங்க… சொல்லுங்க.”நர்ஸிங்ஹோமில் அப்புசாமி “ஹம்மா! எரிச்சல்! எரிச்சல்!” என்று அலறியவாறு படுத்திருந்தார் – “தாகம்! தாகம்! தண்ணி! தண்ணி!”நீர் கேட்ட அவர் வாயில் சிறிது சிறிதாக ஐஸ் க்ரீமே ஸ்பூன் ஸ்பூனாக இறங்கியது.அப்புசாமி கண்ணை விழித்துப் பார்த்தார். கையில் ஐஸ்க்ரீமுடன் சீதாப்பாட்டி!“நீயா?”“உங்கள் தொண்டைக்கு ஒன்றுமில்லை. நீங்க ஐஸ் க்ரீம் தவிர வேற எதுவுமே ஒரு மாசத்துக்குச் சாப்பிடக்கூடாதாம்.

 

       டாக்டர் ஹாஸ் திவன் ஸ்ட்ரிக்ட் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்…”“சீதே! நான் எவ்வளவு அதிருஷ்சாலி! நெருப்பு சுட்டதும், ஒரு நன்மைக்கே… ஹி ஹி!” என்றார்.“ப்ளீஸ்! நீங்க பேசவே கூடாது… ரெஸ்ட்! ரெஸ்ட்! ரெஸ்ட்டிலேயே இருக்கணும். மறுபடியும் ‘ஸைலன்ஸ்’ கத்துக் கத்தினால் தொண்டையையே அறுக்கறாப்பலே ஆயிடும். வோகல்கார்ட் போயிட்டுதுன்னா அப்புறம் நீங்க பேசவே முடியாதுன்னும் சொன்னார்!” என்றவாறு ஐஸ்க்ரீம் கப்பை அவர் வாய்க்குள் சற்று அதிகமாகவே சாய்த்தார் சீதாப்பாட்டி.அந்த இன்பம் அவர் வாயை நிறைத்து மார்பிலும், வயிற்றிலும் வ ந்து, அவரது காயங்களின் மீது குளுகுளு வென ஊர்ந்து சென்றது.“உங்கள் கத்தல் முக்கியமா, தொண்டை முக்கியமா, சாய்ஸ் இனி யுவர்ஸ்!” என்றாள் சீதாப்பாட்டி.“சீதே! எனக்கேன் கத்தல்? நீ இல்லாவிட்டால் நான் ஒரு வத்தல்!” என்றவாறு அடுத்த கப் ஐஸ்க்ரீம் சாப்பிடத் தயாராக அப்புசாமி வாயைத் திறந்து வைத்துக் கொண்டார்.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.