LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

ரோட்டோர கடைகளில் காளான் சாப்பிடுபவரா நீங்கள் !!

 நம்மில் பலர் ரோட்டோர கடைகளில் பானிபூரி, மசால் பூரி, பேல் பூரி, காளான் என பல பதார்த்தங்களை ருசித்து ருசித்து சாப்பிடிருப்போம். விலை குறைவு, சுவை அதிகம் என்பதால், இது போன்ற கடைகளுக்கு தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் வரவேற்பு அதிகம்.

இந்த உணவுகளின் சுவையை பார்க்கும் நாம், இவற்றை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்கைப் பற்றி கலைப்படுவதில்லை. பெரும்பாலான கடைகளில் காளான் என்ற பெயரில் விற்கப்படும் உணவில் இருப்பது காளான் இல்லை என்பதே உண்மை.

காளான் இல்லை என்றால் வேற என்ன? என கேட்கிறீர்களா!!

முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து எடுத்ததை தான் காளான் என்கிறார்கள்.  இதனுடன், சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றியை கலவையை வேக வைத்து வாடிக்கையாளருக்கு தட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இதையறியாத பலரும் காளான் சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் உணவுககளை விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.

மேலும், ஒருமுறை உணவை வேகவைக்கப் பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது.  இது போன்ற உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடிப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் விற்பனை சூடுபிடிக்கிறது.

by Swathi   on 10 Mar 2016  1 Comments
Tags: Kalan   Pani Poori   Mushroom              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
15-May-2017 06:02:11 ARUNKUMAR said : Report Abuse
வெரி உசுப்பினுள் மேட்டர் அண்ட் இ அம ஆல்சோ ஈட்டிங் மோர் முசுறோம் பட் அவுட்டிங்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.