LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்திய செவிலியர் மரணம் மன்னிப்பு கோரினர் ஆஸ்திரேலியா ரேடியோ வர்ணனையாளர்கள்

லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செவிலியர் ஜெஸிந்தா சல்தானா மரணமடைந்ததற்காக ஆஸ்திரேலியா ரேடியோ வர்ணனையாளர்கள் இருவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளனர்.பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன், கர்ப்பமடைந்துள்ள நிலையில், லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் சமீபத்தில் உடல் நிலையைப் பரிசோதித்துக் கொண்டார். அந்த மருத்துவமனையில்தான் செவிலியராக ஜெஸிந்தா பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இளவரசி கேத் மருத்துவமனைக்கு வந்த நாளில், அங்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வரவேற்புப் பகுதியில் இருந்த ஜெஸிந்தா அப்போது பேசினார். எதிர்முனையில் பேசிய இருவர், தாங்கள் பிரிட்டிஷ் ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.கேத் உடல் நிலை குறித்து விவரம் வேண்டுமென்றும் கேட்டனர். இதையடுத்து ஜெஸிந்தா, சம்பந்தப்பட்ட தலைமை செவிலியருக்கு அந்த தொலைபேசி அழைப்பை மாற்றிக் கொடுத்தார். அவர், கேத் உடல்நிலை குறித்த விவரத்தை அந்த இருவரிடமும் தெரிவித்தார்.இச்சம்பவம் நடந்த பிறகே அவர் இறந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில் நர்ஸ் ஜெசிந்தா மறைவுக்கு ஆஸ்திரேலியாவின் சம்பந்தப்பட்ட, ரேடியோ நிலைய வர்ணனையாளர்களான மெல் கிரேக், மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோர் நேற்று வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டனர். கிறிஸ்டியன் கூறுகையில், இந்த தகவலை அறிந்ததும் என்னுடைய உள்ளம் நொறுங்கி போனது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார். கிரேக் கூறும்போது, இந்த மோசமான டெலிபோன் அழைப்பு அவருடைய வாழ்க்கைக்கு எதிராக அமைந்து விட்டதை அறிந்து ஆழ்ந்த துயரம் அடைகிறேன். இதற்காக மிகவும் வருந்துகிறேன் என குறிப்பிட்டனர்.

Australian DJs apologise for Saldanha Died

Australian radio DJ's behind a hoax phone call to the British hospital where the pregnant Duchess of Cambridge was staying said through tears that they were shattered upon learning that the nurse who was duped by their prank had died.Australia 2DayFM radio DJs Mel Greig and Michael Christian have faced worldwide outrage over the hoax. They spoke publicly about the prank for the first time on Monday in a televised interview with Australia’s A Current Affair.Nurse Jacintha answered the phone last week when the pair called, impersonating Queen Elizabeth II and Prince Charles. They received and broadcast confidential information about the duchess’s medical condition.Saldanha died three days later. The cause is not yet known, but critics of the DJs assume stress from the prank played a role.

by Swathi   on 11 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.