LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- முதுகு வலி (Back pain)

முதுகுவலிக்கான காரணங்களும் ? தீர்வுகளும் ?

இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோரை முதுகு வலி பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, முதுகு வலிக்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் பற்றி விரிவாக காண்போம்... 


முதுகெலும்பின் தோற்றமும், அதன் கட்டமைப்பும் : 


முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும். 


முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (Servaical), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (Thoracic), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (Lumbar), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (Sacral), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக்கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.


இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.


முதுகெலும்பு எந்த வயது வரை வளரும்?  


குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும். 


முதுகெலும்பின் அமைப்பில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?  


பொதுவாக முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.


முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?


முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.


டிஸ்க் ப்ரொலாப்ஸ்(Disk Prolapse): முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.


ஸ்பாண்டிலோசிஸ்(Spondylosis): வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.


ஆஸ்டியோபொரோஸிஸ்(Osteoporosis): உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.


ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்(Spondylolisthesis): முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.


ஆர்த்ரைட்டிஸ்(Arthritis): மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.


முதுகுவலி குறித்து அன்றாடம் எழும் கேள்விகளும், அதற்கான பதில்களும் :


பெண்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?


பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். 


இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.


இரு சக்கர வாகனத்தில், மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் செல்வதால் முதுகுவலி ஏற்படுமா? 


முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும். 


முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?


முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம். அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.


முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?


பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட த்ர்க்ஷ 9000(DRX 9000) என்ற கருவி முதுகுவலிக்கும், த்ர்க்ஷ 9000ஸீ என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும். 

by Swathi   on 29 Sep 2014  40 Comments
Tags: Muthuku Vali   Back Pain   முதுகு வலி குறைய   முதுகு வலி மருந்து   முதுகு வலி காரணங்கள்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முதுகுவலிக்கான காரணங்களும் ? தீர்வுகளும் ? முதுகுவலிக்கான காரணங்களும் ? தீர்வுகளும் ?
முதுகு வலியின்றி வாழனுமா ! இதை முதலில் படிங்க ! முதுகு வலியின்றி வாழனுமா ! இதை முதலில் படிங்க !
கருத்துகள்
10-Apr-2020 14:08:32 Arulraj said : Report Abuse
Sir enaku disc bulge.. romba vali... ipo nadakum pothum vali iruku.. ena pananum.. pls solunka sir
 
13-Aug-2019 11:43:25 கண்ணதாசன் said : Report Abuse
ஐயா கடந்த நான்கு மாதங்களாகஎனக்கு இடுப்பு வலி left right என்று இரண்டு புறமும் மாறி மாறி லேசான வலியுடன் எரிச்சலும் இருக்கிறது.pls tell me sir
 
03-Aug-2019 13:50:26 Renganathan said : Report Abuse
சார் வணக்கம் எனக்கு கழுத்து தோள்பைட்டை இருந்து இரண்டு கைகளும் வலி ஓவரா இருக்கு இதனால 2 நாளைக்கு காச்சல் கூட வந்துருசி எனக்கு வயது 34 )இதுக்கு என்ன தீர்வு சார்
 
02-Aug-2018 05:38:06 ராஜா said : Report Abuse
ஐயா, எங்களது மூதாதயர் வழி வழியாக செய்து வரும் ஒரு மருந்தில்லா வைத்ய முறை முதுகு வலிக்கு ( டிஸ்க் ப்ரொலாப்ஸ் மற்றும் ஸ்பாண்டிலோஸிஸ் காரணம் எதுவாக இருந்தாலும்) நூரு சதவிகித தீர்வு கிடைக்கும். விவரஙகளுக்கு கிழ் கண்டா எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். ஒன்பது ஒன்று ஒன்பது எட்டு நான்கு ஒன்று இருண்டு ஏழு ஏழு ஐந்து பூஜ்ஜியம் பூஜ்ஜியம். நன்றி ராஜா
 
27-Jul-2018 13:21:38 Akram said : Report Abuse
Paati vaithiam solunga plss
 
21-Jul-2018 01:45:32 Charles said : Report Abuse
Hello sir I had back pain in my back middle spynalcad. To much pain sir how to clear it sir
 
02-Jul-2018 12:37:08 கார்த்திகேயன் said : Report Abuse
ஹலோ சார் எனக்கு வயது ௨௮ என்னுடைய முதுகு மற்றும் கழுத்து பகுதியில் அதிக வலி எற்படுகிறது என்னால் படுக்க கூட முடிய வில்லை சிறிது செஞ் உக்கார கூடமுடியவில்லை நான் என்ன செய்வது?
 
10-May-2018 16:03:32 Shajahan said : Report Abuse
Sir naan college 2 year padikkuren enakku kazhuththu matrum Tholl pattai adhika vali irukku ithu enakku 2 varushamaa irukku ithu edhu naala varuthu ithu sari seiya enna seiyanum sir
 
10-Apr-2018 07:47:34 kannathasan said : Report Abuse
எனக்கு இப்ப கொஞ்ச நாலா முதுகு எலும்பு ,கழுத்து அப்பறம் தோள்பட்டை வலி இருக்கு. நன் ஒரு கம்ப்யூட்டர்ரெல் வேலை பார்ப்பவன் 12 மணி நேரம் உட்க்காந்து இருக்கணும் இந்த வேலைய நன் கடைசீ மூன்று வருடங்களா பார்கிரேன். அனா இப்ப கொஞ்சநாளா தான் இந்த வலி. இந்த வலிய போக்க ஒரு தீர்வு சொல்லுங்க .......நன்றி
 
09-Feb-2018 09:49:01 அ. சுந்தர ராமன் said : Report Abuse
எனக்கு 43 வயதாகிறது. நான் கழுத்து மற்றும் மேல்முதுகு (இரு புரமும்) ஆகியவற்றில் ஏற்பட்ட வலியால் மிகவும் அவதியுறுகிறேன். ஆர்த்தோ டாக்டர், சித்தா டாக்டர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. 3 4 மற்றும் 5 வது டிஸ்க் மற்றும் அதில் உள்ள தசை தேய்ந்ததால் ஏற்பட்ட வலி என்று கூறுகிறார்கள். லைப் ஸ்டைல் காரணமாக ஏற்பட்ட வலி என்றும் கூறுகிறார்கள். பிஸியோதெரபிஸ்ட் சொல்லித்தந்த பயிற்சிகளை செய்து வந்தாலும் சரியாகவில்லை. உட்காரும் போதும் (வலி கைகள் வரை பரவுகிறது) படுத்து தூங்கும்போதும் வலிக்கிறது. சரியான வீட்டுமுறை அல்லது வேறு சிகிச்சை வழிமுறை கூற வேண்டுகிறேன்,
 
22-Jan-2018 01:40:01 kumaresan said : Report Abuse
சார் என்னோட அப்பாவுக்கு முதுகுல கல் விழுந்துருச்சு அதனால ஒரு 4 வருசமா ரொம்ப வலிக்குதாம் ,ப்ளீஸ் எதாவது சிகிச்சை சொல்லுங்க , எவ்வளவு செலவாகும்
 
24-Dec-2017 11:20:03 ராஜ் சங்கவி said : Report Abuse
சார் நான் ஒரு கணினி பொறியாளர் நான் நீண்ட நேரம் ஆமர்ந்து இருப்பதால் முதுகும் கழுத்தும் அதிகமாக வலிக்கிறது இதற்கு என்ன தீர்வு என்பதை நீங்கள்தான் கூற வேண்டும் ஏன் என்றால் எனது வாழ்நாள் முழுவதும் அமர்ந்து தான் பணி ஆற்ற வேண்டும் இது எனக்கு தீராத வியாதியாக இருக்கிறது .நன்றி .....................
 
27-Nov-2017 13:44:01 தரன் said : Report Abuse
ஹலோ சார், எனது மனைவிக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிறது (cicerone). கடந்த 2 மாத காலமாக பின் முதுகு வலியால் அவதிப்படுகிறார். இதுவரை 3 மருத்துவமணியில் சிகிச்சை அளித்தும் பயனில்லை. மிகவும் சிரம படுகிறார். எல்லா வகை டெஸ்ட் எடுத்தும் ஒன்றும் இல்லை என மருத்துவர்கள் சொல்கிறாரகள். இத்திறகு எனக்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லுங்கள் . தயவுசெய்து . நன்றி ...
 
04-Nov-2017 11:57:50 shaliniprabhu said : Report Abuse
hello sir my husband ku one weeka back pain irukunu solitu irukanga avanga age 24 avangalala thankiga mudila என reason sir pls rly panunga sir
 
18-Aug-2017 06:37:37 ஈஸ்வரி said : Report Abuse
ஹலோ சார், என் அம்மாவுக்கு சிட்டிக்கா (sciatica) வலி உள்ளது இடுப்பி இருந்து கால் வரைக்கும் வலி உள்ளது ஒரு ஆண்ட வலது கால் நடந்தா வலி நடக்கவே முடியல என்ன பன்னலாமுன்னு சொல்லுங்க சார் டகடர்கிட்ட பாத்தாச்சு ஆப்பரேஷன் சோனக சித்தா பாத்தாச்சு ஒன்னும் பலனில்லை இப்ப அலோபதி பாத்துகிட்டு இருக்கு வலி குறையவே இல்லை எதாவது மருந்து சொல்லங்க உங்க பதிலுக்கு காத்திருப்பேன்
 
08-Aug-2017 23:23:32 karthic said : Report Abuse
சார்....இதுல சின்ன விஷயம் சொல்றனே கேளுங்க நான் ஹாஸ்பிடல் ல போன பி செக் பணத்துல சொன்னது இது .....இதுல ஒருத்தர் சொல்லிருக்காரு சார் என்னால நடக்க முடியல கால் எலாம் மரத்து போச்சு னு சொல்லிருக்காரு ...சார் எனக்கு செக் பண போ சோனக கால் ஏதாச்சும் மரத்து போச்சா னு ....அது சிறுநீரக கோளாறு ல அப்டிஐ வரும் னு ....பட் எனக்கு அப்டி இல்ல ....எதுக்கும் நல்ல டாக்டர் எ செக் பண்ணுங்க ப்ளஸ் எனக்கு சொன்னதை சொல்ற .....எப்டிஐ விடாதீங்க ...நன்றி சார்
 
24-Jul-2017 04:58:44 Praveen said : Report Abuse
லேபிட் சைட் முதுகு ரொம்ப வலிக்குது அதோட கழுத்தும் ரொம்ப வலிக்குது ௨ வருடமா இருக்கு மருத்துவர் தசை பிடிப்புதான் சொஇல்லுறாரு அனா வலி ரொம்ப இருக்கு எப்படி வலிக்குறப்ப பட பட னு வருது எதுக்கு என்ன கரணம் கொஞ்சம் சோசில்லுக எதுக்கு என்ன பண்ணுறது சோசில்லுக ? நன்றி ...
 
24-Jul-2017 02:40:42 Sathya said : Report Abuse
Anakum back pain eruku scan adutha onnum illanu solluraga but samaya bottom muthuku pain what can I டூ
 
10-Jul-2017 08:11:13 malathy said : Report Abuse
சார் எனக்கு வயது 26 பட் எனக்கு லேப்ட்சைடு முதுகு பயங்கரமா வலிக்குது என்ன கரணம் என்ன பண்ணலாம் ?
 
13-Feb-2017 22:56:16 suba said : Report Abuse
சார் எனக்கு ரைட் சைடு முதுகு payakarama வலிக்குது அதுக்கு நல்ல ஒரு தீர்வு சொல்லுங்க சார்.
 
31-Jan-2017 03:05:12 ரொபின்ராஜ் said : Report Abuse
சார்: எப்படி டிஸ்க் ஸ்பைஸ் ஐ கூட்டுவது .
 
02-Jan-2017 01:19:26 ரகுநாத் said : Report Abuse
சார் எனக்கு வலது பக்க நாடு முதுகில் கடுமையான வலி உள்ளது. நரம்பு சுருட்டி உள்ளது என்று சுளுக்கு வலித்த பிறகு நான்கு ஆண்டுகளாக வலி இல்லாமல் இருந்தது. அனால் தற்பொழுது மீண்டும் வலி அதிகமாக உள்ளது. நான் கணிப்பொறியில் வேலை செய்து வருகிறேன். எனக்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லுங்கள்.
 
05-Dec-2016 11:00:26 ARUL RAJ said : Thank you
சார் எனக்கு தண்டுவட வலியால சுத்தமா நடக்க முடியல கால் மறுத்து பொய் இருக்கிறது. ஹாஸ்பிடல் போனேன் மருந்து குடுத்தாங்க அப்படியும் சரி ஆகல. சித்த வைத்தியம் போனேன் அப்படியும் சரி ஆகல.என்னுடையே வாழ்கையே கேள்வி குறியாய் இருக்கிறது.என்ன பண்றதுனு ஒன்னும் புரியல.ஒப்ரேஷியன் பண்ண கூடாதுனு சொல்ராங்க என்ன சார் பண்றது நீங்க ஒரு ஆலோசனை சொல்லுய்ங்க சார் ப்ளீஸ் தயவு செய்து சொல்லுய்ங்க........
 
09-Nov-2016 10:39:37 Anusaha said : Report Abuse
Sir. எனக்கு தீரா தலைவலி மற்றும் இடுப்பு வலி. என் வயது 19 என்னால் எந்தவேலயு ம்செய்வது கஷ்டமாக உள்ளது. இதற்கு தீர்வு என்ன?
 
31-Oct-2016 02:07:41 s.mari said : Report Abuse
எனக்கு முதுகு வலி aanaal எனக்கு வயசு 19than natakkuthu என்ன கரணம் ? மருந்து உண்டா பழங்கள் சாப்பிடலாமா ??
 
12-Oct-2016 08:48:26 arjun said : Report Abuse
சார்,எனக்கு முதுகு வலி ரொம்ப அதிகமாக இருக்கிறதா நன் டைலர் டெய்லி 13 மணி நேரம் உட்கார்ந்து தைக்கிறேன் .இதனால் வலி ரொம்ப அதிகமாக இருக்கிறது இதர்ஜு ஒரு தீர்வு சொல்லுங்க?
 
11-Aug-2016 02:47:18 லட்சுமி said : Report Abuse
கழுத்து வலி இருக்கிறது இதற்கு ஒரு வைத்தியம் சொல்லுங்கள்
 
11-Aug-2016 02:26:09 லட்சுமி said : Report Abuse
கழுத்து வலி இருக்கிறது இதற்கு ஒரு வைத்தியம் சொல்லுங்கள்
 
15-Jun-2016 03:22:28 aha.ed said : Report Abuse
26 வயது பெண்ணுக்கு குனியும் போது பின் முதுஹு பிடித்து கொண்டு வலித்து கொண்டு இருக்கிறது தயவு செய்து மருந்து சொல்லும்
 
20-May-2016 00:49:50 revathi said : Report Abuse
சார் நான் உடற்பயற்சி செய்ய் போது மூச்சு தப்பு பிடித்தது.மருந்து சாபிட்ட பின்பும் குணமாகவில்லை வலி மட்டும் அதிகமாக உள்ளது
 
01-Apr-2016 00:51:02 nishabanu said : Report Abuse
sir , en husbendku age 25. just three monthku munnadi chair udaichu keela viludhutar.docter kita ponom. sadharana pain than solli tablet koduthanga. pain appa cure ayiduchu.but ippa marupadiyum vali romba iruku. romba neram vandi ottuna vali undagudhunu solluranga..ennaprblm sollamudiyuma?
 
22-Dec-2015 00:03:23 தாரணி said : Report Abuse
இளம் வயதிலிருந்து என் கணவர் வண்டி ஓடுகிறார் . அவருக்கு முதுகு வலி இருக்கு .வழிய குறைக்க ஒரு டிப்ஸ் சொலுங்கள்
 
03-Dec-2015 08:00:29 vijay said : Report Abuse
முதுகு வலி அதிகமா இருக்கு ப்ளீஸ் டிப்ஸசொல்லுங்கல்லுங்க
 
20-Sep-2015 08:51:53 vinesh said : Report Abuse
சார் என்னோட முதுகில் வலது பக்கம் கீழே நல்ல வலி இருக்கிறது.சில சமயத்தில் தடவும் போது தண்ணீர் போன்று ஓடுவது போல தெரியும்.என் வயது 35 .ப்ளீஸ் டிப்ஸ் சொல்லுங்க .நன்றி.
 
07-Aug-2015 03:06:21 AMMU said : Report Abuse
4 வருடமாக எனக்கு பாக்பைன் உள்ளது இதற்கு என்ன காரணமாக இருக்கும் , இதனனால் பின்விளைவிகள் ஏதனும் இருபதற்கு வாய்ப்புள்ளதா. பதிலுகாக காத்திருக்கிறேன்
 
03-Jun-2015 01:58:40 பீர் முஹம்மத் said : Report Abuse
எனக்கு முதுகுல உள்ள டிஸ்க் ல பிரச்னை அதுனால கால் வலிக்குது டாக்டர் கிட்ட ட்ரித்மென்ட் அடுத்தேன் ஒபரேசன் செய்யணும்னு சொல்றாங்க ,ஒபரேசன் செய்யாம கால் வலி போக ஆதாவது ஆயில் இருக்க?அல்லது எதாவது ச்க்ஸ்சசைஸ் இருக்க?
 
28-Feb-2015 02:40:34 நந்தா kumar said : Report Abuse
எனக்கு பின் பொடனி வலிருகு அதன் தொடர்ச்சி முதுகு வலி இந்தவழி என்னால பொருத்தக்க முடியல தயீவு செய்து ஒரு நல்ல சொளுசென் சொலுங்க
 
11-Dec-2014 18:55:52 syedbabu .s .m said : Report Abuse
இது ஒரு நல்ல செய்தி அனைவரும் இதை படிக்கவேண்டும்
 
26-Nov-2014 11:28:02 vinoth said : Report Abuse
Am orthoratics patient.now back pain problems.what reason.?
 
03-Nov-2014 23:29:33 boopathi said : Report Abuse
Sir enaku mudhugu vali back pain rembo athikama iruku pls help
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.