LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கால்நடை - மீன் வளர்ப்பு Print Friendly and PDF
- நாட்டு மாடு வளர்ப்பு

ஆ காக்கும் அகமது - உங்களது சொந்த மாடு திட்டம் - திண்டிவனத்தை கலக்கும் பாய் பண்ணை

அன்புள்ள நண்பர்களே, வணக்கம் . சென்ற 20.11.17 (நாட்டு மாட்டு பண்ணை ) பதிவின் தொடர்ச்சி . "ஆ "காக்கும் அகமது ! -  திந்திரி வனம் (திந்திரி என்றால் புளியமரம், புளியமரங்கள் மிகுதியாக வளந்துள்ள பகுதி  திந்திரி வனம், இது மெல்ல தேய்ந்து சட்டென்று அடையாளப்படும் "திண்டிவனம்" என்று மருவி விட்டது ( திண்டிவனத்தில்  திந்திரிஸ்வரர் கோவில் உள்ளது ) சரி வாங்க நண்பர் திரு.அகமது அவர்கள் பண்ணைக்குப் போகலாம் ! திண்டிவனத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டரில் ஆவணிப்பூர்  செல்லும் வழியில் அமைந்துள்ள இடம் "பசார் கிராமம் " பாய் பண்ணை" என்றால் பேருந்துகள் நிற்கும் .சுமார் 205 ஏக்கர் நிலப் பரப்பளவில் திரு.அகமது அவர்களின் பண்ணை, கடக் நாத், அசில்,சிறுவிடை போன்ற   பல வகை நாட்டுக்கு கோழி ரகங்கள் , முயல்கள்  ,ஆடுகள் ,மீன்கள், வாழை, மா எலுமிச்சை, பழவகை மரங்கள்,மற்றும் நீளமான அடர்ந்த பெரிய நெல்லித் தோப்புகள்(ஆம்லா ) , .அகத்தி மரங்கள் தீவினப்புல், மூலிகை செடிகள் எனறு ஒருங்கிணைந்த பண்ணையாகவும், அகலமான குளங்கள்,கிணறுகள், பெரிய தோப்புகள்.  இவற்றின்  நடுவில் நீண்ட விசாலமான கொட்டகையில் 200 கும்  மேற்பட்ட வடநாட்டு கிர்,காங்கிரிட்ஜ்,சாஹிவால் மாடுகளும்,கன்றுகளும் காஞ்சிக் குட்டை பசுக்களும் எங்களை மகிழ்வித்தன . தேவையான பண்ணை ஆட்களை  கொண்டு, அவர்கள் வசிக்க ( பிற மாநிலத்தவர்கள் ) சிறிய கிராமங்கள் . சிறிய சாலைகள் எனறு பிரமாதமாக உள்ளது திரு.அகமது அவர்களின் பண்ணை .ஹரியானா,குஜராத் போன்ற இடங்களில் இருந்து சினையாக உள்ள பசுக்களை வாங்கி வரும்போது, இவரது பண்ணையில் வந்து பிறக்கின்ற கன்றுகள், கலப்பின கன்றுகளாக இருப்பவற்றை தனியாக பராமரிக்கின்றார் . இவரது பால் அதிக அளவில் சென்னைக்கு தினமும் செல்கின்றது .(1 லிட்டர் 95 ரூபாய் ) திரு.அகமதுக்கு துணையாக அவரது தம்பி ! தம்பியுடையான், பாலுக்கு அஞ்சான் ! என்று பால் சந்தைப் படுத்துவதை கவனிக்கின்றார் .திரு.அகமது இயற்கை விவசாயத்தையும், நாட்டு மாடுகளையும் பெரிதாக மதிப்பதால் திரு.சுபாஷ் பாலேக்கர் , திரு .பசு ராகவன் போன்ற சான்றோர்களை அழைத்து வந்து அவர்கள் கருத்துகளை அறிந்து பண்ணையை மேம்படுத்தியுள்ளார் .  நாட்டுப் பசுவின் பால் அனைவருக்கும் கிடைக்க "உங்களது சொந்த மாடு " என்கிற அருமையான திட்டம் வைத்துள்ளார். நம்மிடம் இட வசதி, பராமரிப்பு வசதி ,ஆட்கள் வசதி எதுவுமே இல்லை ஆனால் அதிக பால் (ஏ 2) கொடுக்கும் 1 வட நாட்டு மாட்டினை  80 முதல் 90 ஆயிரம் செலவு செய்து வாங்க முடியும் ! என்றாலோ, அல்லது பராமரிக்க முடியாத கறவையில் உள்ள வடநாட்டு பசு இருந்தாலோ !  இவரது பண்ணையில் கொண்டு விட்டால் அதனை பார்த்துக்கொள்கின்றார் . பசுவின் கறவைக்கு ஏற்ப அன்றாட  பராமரிப்பு செலவு போக மீதி பால்  தினமும் உங்களுக்கு கொடுத்து விடுகின்றார் அல்லது பாலுக்கு பதில் பணமாகவும் பெறலாம் . இந்த திட்டம் நமது வசதிக்கு ஏற்ப பல மாதிரிகளில்( Models ) உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் திரு.அகமது அவர்களை தொடர்பு கொண்டு முழு  தகவல்களையும்  பெறலாம் ."ஆ "காக்கும் அகமது -  தொடர்பு கொள்ள : கைபேசி எண் - 8939991544. ஒருவேளை தொடர்பு கொள்ள இயல வில்லை எனில் இதே எண்ணுக்கு  அவரது வாட்ஸ் அப் க்கு குறுந்தகவல் அனுப்பினால் தொடர்பு கொள்வார் .     திரு.அகமது மின் அஞ்சல் :  ahmad@ariafarms.in   "உங்களது சொந்த மாடு " திட்டம் குறித்து அவரை நேரில் சந்தித்து உங்கள் வசதிக்கு தகுந்தபடி , நீங்கள் விரும்பும் பட்சத்தில் பயனடையலாம் !
நன்றி
எஸ்.நரசிம்மன் .
மேழிச் செல்வம்

by Swathi   on 06 Dec 2017  0 Comments
Tags: சொந்த மாடு திட்டம்   பாய் பண்ணை   Tindivanam Bai Pannai   Bai Pannai           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.