LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- முஸ்லீம் பண்டிகைகள்

பக்ரீத் பண்டிகை

     இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத்(Bakrid Festival), உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள், இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள். நபி ஆதம் முதல் முகம்மது நபி அவர்கள் வரையிலும் தோன்றிய நபிமார்கள் பலரும் ஒவ்வொரு காலத்திலும் தோன்றி இறைத் தூதை அளித்து வந்தனர்.

 

     இவர்களுள் ஒருவரே நபி இப்ராஹீம். தனது காலத்தில் நடந்த கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும், எள்ளளவும் அச்சமின்றி இறைக் கொள்கையை முழங்கிய நபி இப்ராஹீம், அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார்.'இறைவனே எல்லாம்; அவனுக்கு இணையாக எதுவும் இல்லை' எனும் இறைப் பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள். ஆயினும், குழந்தை பேறு கிடையாது. இதனால், மனம் வருந்திய நபி இப்ராஹீம், இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்தார். நபியின் நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனையை ஏற்றுக் கோண்டார் அல்லாஹ்.

 

     அந்த அற்புதமான பொழுது புலர்ந்தது... இப்ராஹீமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு, நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார். பின் வாழ்க்கைப் பயணம் இன்பமயகமாக தொடர்ந்தபோது, இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்கு நாள் பெருகியவண்ணம் இருந்தது. அப்போது, இறைவன் மேற்கொண்ட ஒவ்வொரு சோதனையையும் நிந்தனை செய்யாது வென்ற இப்ராஹீம் நபிக்கு, இறுதியாக மாபெரும் சோதனை வந்தது...இரவு நேரம்... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹீமுக்கு கனவொன்று வந்தது.

 

    தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவைக் கண்ட நபி, ஆழ்ந்த  துயரமுற்றார். முழுவதுமாய் இறைவனுக்கு அர்பணித்த இப்ராஹீம் நபி, தாம் கண்ட கனவை அன்பு மகனிடம் கூறினார். தியாகத் திருவிளக்குக்குக்குப் பிறந்தது, தியாகதீபமே என நிரூபிக்கும்வண்ணம், இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி தன்னுடைய தந்தையிடம் பணித்தார், நபி இஸ்மாயீல். 

 

     அவ்வாறு பணித்ததோடு மட்டுமின்றி, 'பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ?' என அஞ்சிய பாச மகன், தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார்... ஆனால், அந்த நரபலியைத் தடுத்து, அவர்களின் தியாகத்தைப் புகழ்ந்து, இந்த நிகழ்வின் நினைவாக ஓர் ஆட்டினை பலியிட்டு, அனைவரையும் புசிக்குமாறு கூறினான் இறைவன். அதன்படி மக்கள் செய்து வருகின்றனர்.

by Swathi   on 10 Aug 2012  3 Comments
Tags: இஸ்லாமிய பண்டிகைகள்   பக்ரீத்   பக்ரீத் பண்டிகை   Bakrid Festivals   Bakrid   Bakrid History   தியாக திருநாள்  
 தொடர்புடையவை-Related Articles
பக்ரீத் பண்டிகை பக்ரீத் பண்டிகை
கருத்துகள்
28-Jul-2019 13:19:25 அப்துல்மஜீத் said : Report Abuse
மாஷா அல்லாஹ் . .
 
02-Sep-2017 04:05:34 ச. வின் said : Report Abuse
All are God's gift
 
12-Sep-2016 00:42:06 புனிதன் said : Report Abuse
இறை துதர் இப்ராகிம் அவர்களின் பக்தியும், இறை நம்பிக்கையும் மெய்சிலிர்க்கின்றது. அதைவிட தன் கனவில் தானே தன் மகனை இறைவனுக்கு பலி கொடுப்பதாக கண்டதை கூட, இறைவனின் கட்டளையாக ஏற்று இறைவனுக்கு தன் மகனை பலியிட துணிந்தது பக்தியின் உச்சமே. அதற்கு அவருடைய மகன் நபி இஸ்மாயிலும் சம்மதித்தது புலிக்கு பிறந்தது, பூனையாகாது என்பதையே காண்பிக்கிறது. வாழ்க இவர்கள் புகழ், எல்லாம் இறைவன் செயல் பக்தியுடன் புனிதன், சென்னை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.