LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கம்பர் (Kambar )

பால காண்டம்-அரசியற் படலம்

 

தயரதன் மாண்பு
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான். 1
ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. 2
மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. 3
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான். 4
ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 5
வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. 6
உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்
நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. 7
பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். 8
தயரதனின் குடையும் செங்கோலும்
மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே. 9
தயரதன் அரசு செய்யும் திறம்
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான். 10
குன்றென உயரிய குவவுத் தோளினான்,
வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே. 11
'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான். 12
மிகைப் பாடல்கள்
விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்
இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. 5-1


தயரதன் மாண்பு
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான். 1
ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்றபாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. 2
மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. 3
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்விஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான். 4
ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 5
வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. 6
உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்
நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணிவாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. 7
பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்மே வரும் கை அடை வேலும் தேயுமால்;கோவுடை நெடு மணி மகுட கோடியால்சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். 8
தயரதனின் குடையும் செங்கோலும்
மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே. 9
தயரதன் அரசு செய்யும் திறம்
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான். 10
குன்றென உயரிய குவவுத் தோளினான்,வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,ஒன்றென உலகிடை உலாவி, மீமிசைநின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே. 11
'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான். 12
மிகைப் பாடல்கள்
விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. 5-1

by Swathi   on 23 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.