LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

நோய்களை தடுக்க வாழைப்பழம்(Banana prevent diseases)

 

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்சேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.
பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.
மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.
ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும். காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

 

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

 

நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்சேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.

 

இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

 

பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

 

பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

 

மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.

 

ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.

 

பச்சைவாழை : வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

 

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது. தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

 

காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

 

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும். காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

by Swathi   on 04 Sep 2012  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.