வங்கதேச புதிய அதிபராக அப்துல் ஹமீது ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். வங்கதேச அதிபராக இருந்த ஜில்லுர் ரஹ்மான் கடந்த மாதம் 20ம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து நாடாளமன்ற சபாநாயகர் அப்துல் ஹமீது தற்காலிக அதிபராக பொறுப்பு வகித்தார். புதிய அதிபருக்கான தேர்தலில் அப்துல் ஹமீது போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
|