LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று தன் புரட்சிகரமான சிந்தனைகளால் புது ரத்தம் பாய்ச்சிய 

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பெயரில் அமெரிக்காவில்  முதன்முதலாக டெலவர் மாநிலத்தில் ஏப்ரல் 20 , 2019 (சித்திரை 7, தி.ஆ. 2050) சனிக்கிழமை அன்று "புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்" என்கிற புதியதோர் அமைப்பு தொடக்கவிழா மற்றும் அவரது 129 வது பிறந்தநாள் நாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், திருமிகு. பிரிசில்லா ரேபன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அடுத்து "புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்" தொடக்கவிழா நிகழ்ச்சி கோலாகலமாக, அரங்கத்தில் இருந்த அனைவரது கரவொலியோடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்த  தெற்காசியத்துறை பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.  வாசு அரங்கநாதன், வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர். முத்துவேல் செல்லையா மற்றும் நியூயார்க் தமிழ்க்கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர் பாலா சாமிநாதன் ஆகியோர் புரட்சிக்கவிஞரின் படத்தை திறந்துவைத்து தமிழ் மன்றத்தை தொடக்கிவைத்தனர்.

மன்றத்தின் நோக்கக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்  திருமிகு. துரைக்கண்ணன் அவர்கள் திறம்பட எடுத்துரைத்தார். 

தொடர்ந்து, டெலவரில் இயங்கும் சலங்கை நடனப்பள்ளியின் நிறுவனர் திருமிகு. இந்துமதி கோபாலகிருஷ்ணன் அவர்களின் பயிற்சியில், சிறார்கள், பாரதிதாசனின் "சங்கே முழங்கு" பாடலுக்கு சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். மாணவி சிந்தியா மணி மற்றும் மாணவன் இலக்கணன் சுபாஷ் தனித்தனியே பாரதிதாசன் பாடல்களை இசையோடு பாடினார்கள்.  

திருமிகு. விஜய் அவர்களின் ஒருங்கிணைப்பில் வாசிங்டன் மரபிசைக்குழு பம்பை, தவில் போன்ற தமிழ் மரபுக்கருவிகளைக் கொண்டு இசை விருந்து அளித்தனர். தொடர்ந்து டெலவர் கலைக் குழுவும், அடவு கலைக் குழுவும் இணைந்து  முழங்கிய பறையிசை நிகழ்ச்சி அரங்கத்தை அதிர வைத்தது. இதனை திருமிகு. ஹென்றி மற்றும் திருமிகு ரமா அவர்கள் ஒருங்கினைத்து பயிற்சி அளித்தனர்.

சமூக ஊடகம் மூலமாக புரட்சிக்கவிஞரின் வாழ்வியல் தொடர்பாக நேயர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. பிரசாத் பாண்டியன் அவர்கள் பதிலளித்து உரையாடினார்.  அடுத்து, பாரதிதாசனின் புலமையும், சமூக சிந்தனையும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம், சிறப்பு விருந்தினர் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் "தமிழியக்கம்" தலைப்பில் திருமிகு. பன்னீர்செல்வம், "இயற்கை" தலைப்பில் திருமிகு. தீபக், "சமூகம்" தலைப்பில் திருமிகு. கிருஷ்ணன், "கல்வி" தலைப்பில் திருமிகு. செந்தில்முருகன் மற்றும் "பெண்ணியம்" தலைப்பில் திருமிகு. ம.வீ.கனிமொழி ஆகியோர் பேசினார்கள்.

பாரதிதாசனின் வாழ்வியல் குறித்து  முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களும், தமிழ் மொழி மீதிருந்த பாரதிதாசனின் பற்று மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் குறித்து முனைவர் பாலா சுவாமிநாதன் அவர்களும் பேசினர்.

முன்னதாக மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு, அதில் 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில்  முதல் பரிசு  செல்வன். துருவேஷ், இரண்டாம் பரிசு செல்வன். ஆதித் இராஜ்குமார், மூன்றாம் பரிசு ஜெசிகா ரேபன் ஆகியோர் பெற்றனர்.  8 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதல் பரிசு செல்வன். கெளதம்ராஜ் புவனேஷ், இரண்டாம் பரிசு செல்வன். அறிவாற்றல் இராஜ்குமார், மூன்றாம் பரிசு செல்வி. கனிஅன்பு துரைக்கண்ணன்  ஆகியோர் பெற்றனர்.

பெரியோர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசு திருமிகு. மெர்லின் தீபன், இரண்டாம் பரிசு திருமிகு. பிரிசில்லா ரேபன், மூன்றாம் பரிசு திருமிகு. விஜயலக்ஷ்மி மற்றும் திருமிகு. நரசிம்மன் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்  சிறப்பு விருந்தினர்கள் கையால் வழங்கப்பட்டது. 

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் டெலவரில் உள்ள "ரஜினி தென்னிந்திய உணவகம்" மதிய உணவை வழங்கி சிறப்பித்தது. 

ஒருங்கிணைப்பாளர் திருமிகு இராஜ்குமார் கலியபெருமாள் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  முடிவில் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. பிரசாத் பாண்டியன் நன்றியுரை கூற, விழா இனிதே முடிந்தது.

 

-இராஜ்குமார் கலியபெருமாள்

by Swathi   on 28 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.