LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- பாக்கியம் ராமசாமி

பேரம்

 

“ஏம்மா, கூடையிலே என்ன?”
“கத்திரிக்காய்! நீ வாங்கமாட்டே.”
“ஏன் நான் வாங்கமாட்டேன்?”
“விசை ஒரு ரூபா சொன்னால் நாலணாவுக்குக் கேட்பியே மகராஜி.”
“பின்னே நீ கேட்டபடியே கொடுத்துடக் கொட்டியா வைத்திருக்கிறது இங்கே? விலையைச் சொல்லு.”"
“அதான் சொன்னேனே?”
“கூடையை இறக்கு முன்னே? பிஞ்சோ முத்தலோ? நல்ல இளசாக இருக்குமா?”
“எவ்வளவு வேணும்?”
“எனக்கு ஒரு ரெண்டு விசை வேணும். அதைப் பற்றி என்ன?”
“அப்புறம் நீ வம்பு பண்ணுவே, பத்து பலம் போதும்னு.”
“அட! நான் வாங்குகிறேனா இல்லையா பாரேன். கூடையை இறக்கு கீழே.”
“கூடையை இறக்குவதிருக்கட்டும். விலையைக் கேளுங்க முன்னே.”
“இதோ பார். இன்னைக்கு வெட்டியாப் பேசிப் பேரம் பண்ணப் போவதில்லை. பருப்பைக்கூடக் கொதிக்கப் போட்டுவிட்டேன். நீயாக நியாயமாக ஒரு விலையைச் கொடுத்துவிடு. உன் வயத்திலே நான் அடிக்கவில்லை.”
“துட்டு இன்னிக்கே கொடுத்டுவாயில்லையா?”
“அடப் பெரிய மகாத் துட்டு? உன் கிட்டே எத்தனை தடவை கடன் சொல்லியிருக்கிறேன்?”
“அதில்லம்மா, பத்து ரூபா நோட்டு ஒண்ணை வச்சிட்டுக் காட்டிக்கிட்டேயிருப்பியே மாசக் கணக்காக?”
“அந்த இடக்குப் பேச்செல்லாம் பேசாதே. நான் கெட்ட கோபக்காரி. ஆமாம் நல்ல தராசுதானே வெச்சிருக்கே?”
“அதெல்லாம் ஞாயமாயிருக்கும். விலையைச் சொல்லுங்க நேரமாவுது.”
“அட, எனக்கு மட்டும் ஆகலியா நேரம்? காயைப் பார்த்தில்லே விலையைக் கேக்கணும்? அதென்ன அது உன் கழுத்திலே புதுப் பாஷன்லே என்னவோ போட்டிட்டிருக்கே?”
“அதுங்களா? அது என் வீட்டுக்காரரு செய்துபோட்டது?”
“இவ்வளவு நல்லா இருக்கிறதே வேலைப்பாடு. தங்கம்தானே?”
“அதென்ன அப்படிக் கேட்டுட்டேயே அம்மா? பாடுபட்டு ஒழைச்சிச் சம்பாதித்ததில பண்ணிப் போட்டுகிட்டுது அம்மா. அசலுத் தங்கம்? மூணரைப் பவுன் ஆச்சே?”
“கோவுச்சுக்காதே. கஷ்டப்பட்டு நீ ஏமாந்து விட்டாயோ என்று கேட்டேன். நேரே சொல்லிப் பண்ணினாயா? இல்லே கடையிலே ‘ரெடிமேடா’ வாங்கினாயா? கூலி எவ்வளவு தந்தே? பார்க்க வெகு லட்சணமாக இருக்கிறதே.”
“கடையிலே ரெடிமேடாகத்தான் வாங்கியாந்தார்.”
கடைபேர்கூட அப்போ போட்டிருக்குமே? எங்கே கொஞ்சம் கழட்டேன்தான் பார்ப்போம். நான்கூட இந்தப் பேஷன்லே ஒன்று செய்து கொள்ளணும்ணு ஆசையாயிருக்கிறது. கடை பேரு என்ன சொன்னே?
“என்னவோ சொன்னாரு?”
“கழட்டேன் பார்ப்போம்.”
(காய்கறிக்காரி, கூடையைத் தலையிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட்டுக் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழட்டி எடுத்து நீட்டுகிறாள்.)
“சரி, சரி. கூடையைத் தூக்கு! இது என்ன ஒரே சொத்தலும் பூச்சியுமாக இருக்கிறதே? நீ வீசை நாலணாவுக்குக் கொடுத்தால்கூட நான் வாங்கத் தயாராக இல்லை. இந்தக் காயைத் தலைமேல் வைத்துக்கொண்டுதான் கீழே இறக்க மாட்டேன் விலை பேசாமல் என்றாயா? நாளைக்கு நல்ல காயாகக் கொண்டுவா, ஒரு வீசை வாங்கிக்கொள்கிறேன்.”
(கதவைச் சாத்துகிறாள் எஜமானியம்மாள்.)

“ஏம்மா, கூடையிலே என்ன?”“கத்திரிக்காய்! நீ வாங்கமாட்டே.”“ஏன் நான் வாங்கமாட்டேன்?”“விசை ஒரு ரூபா சொன்னால் நாலணாவுக்குக் கேட்பியே மகராஜி.”“பின்னே நீ கேட்டபடியே கொடுத்துடக் கொட்டியா வைத்திருக்கிறது இங்கே? விலையைச் சொல்லு.”"“அதான் சொன்னேனே?”“கூடையை இறக்கு முன்னே? பிஞ்சோ முத்தலோ? நல்ல இளசாக இருக்குமா?”“எவ்வளவு வேணும்?”“எனக்கு ஒரு ரெண்டு விசை வேணும். அதைப் பற்றி என்ன?”“அப்புறம் நீ வம்பு பண்ணுவே, பத்து பலம் போதும்னு.”“அட! நான் வாங்குகிறேனா இல்லையா பாரேன். கூடையை இறக்கு கீழே.”“கூடையை இறக்குவதிருக்கட்டும். விலையைக் கேளுங்க முன்னே.”“இதோ பார். இன்னைக்கு வெட்டியாப் பேசிப் பேரம் பண்ணப் போவதில்லை. பருப்பைக்கூடக் கொதிக்கப் போட்டுவிட்டேன். நீயாக நியாயமாக ஒரு விலையைச் கொடுத்துவிடு. உன் வயத்திலே நான் அடிக்கவில்லை.”“துட்டு இன்னிக்கே கொடுத்டுவாயில்லையா?”“அடப் பெரிய மகாத் துட்டு? உன் கிட்டே எத்தனை தடவை கடன் சொல்லியிருக்கிறேன்?”“அதில்லம்மா, பத்து ரூபா நோட்டு ஒண்ணை வச்சிட்டுக் காட்டிக்கிட்டேயிருப்பியே மாசக் கணக்காக?”“அந்த இடக்குப் பேச்செல்லாம் பேசாதே. நான் கெட்ட கோபக்காரி. ஆமாம் நல்ல தராசுதானே வெச்சிருக்கே?”“அதெல்லாம் ஞாயமாயிருக்கும். விலையைச் சொல்லுங்க நேரமாவுது.”“அட, எனக்கு மட்டும் ஆகலியா நேரம்? காயைப் பார்த்தில்லே விலையைக் கேக்கணும்? அதென்ன அது உன் கழுத்திலே புதுப் பாஷன்லே என்னவோ போட்டிட்டிருக்கே?”“அதுங்களா? அது என் வீட்டுக்காரரு செய்துபோட்டது?”“இவ்வளவு நல்லா இருக்கிறதே வேலைப்பாடு. தங்கம்தானே?”“அதென்ன அப்படிக் கேட்டுட்டேயே அம்மா? பாடுபட்டு ஒழைச்சிச் சம்பாதித்ததில பண்ணிப் போட்டுகிட்டுது அம்மா. அசலுத் தங்கம்? மூணரைப் பவுன் ஆச்சே?”“கோவுச்சுக்காதே. கஷ்டப்பட்டு நீ ஏமாந்து விட்டாயோ என்று கேட்டேன். நேரே சொல்லிப் பண்ணினாயா? இல்லே கடையிலே ‘ரெடிமேடா’ வாங்கினாயா? கூலி எவ்வளவு தந்தே? பார்க்க வெகு லட்சணமாக இருக்கிறதே.”“கடையிலே ரெடிமேடாகத்தான் வாங்கியாந்தார்.”கடைபேர்கூட அப்போ போட்டிருக்குமே? எங்கே கொஞ்சம் கழட்டேன்தான் பார்ப்போம். நான்கூட இந்தப் பேஷன்லே ஒன்று செய்து கொள்ளணும்ணு ஆசையாயிருக்கிறது. கடை பேரு என்ன சொன்னே?“என்னவோ சொன்னாரு?”“கழட்டேன் பார்ப்போம்.”(காய்கறிக்காரி, கூடையைத் தலையிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட்டுக் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழட்டி எடுத்து நீட்டுகிறாள்.)“சரி, சரி. கூடையைத் தூக்கு! இது என்ன ஒரே சொத்தலும் பூச்சியுமாக இருக்கிறதே? நீ வீசை நாலணாவுக்குக் கொடுத்தால்கூட நான் வாங்கத் தயாராக இல்லை. இந்தக் காயைத் தலைமேல் வைத்துக்கொண்டுதான் கீழே இறக்க மாட்டேன் விலை பேசாமல் என்றாயா? நாளைக்கு நல்ல காயாகக் கொண்டுவா, ஒரு வீசை வாங்கிக்கொள்கிறேன்.”(கதவைச் சாத்துகிறாள் எஜமானியம்மாள்.)

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.