LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவேண்டிய 10 சிறந்த பழங்கள் !

உலகில் உள்ள பெரும்பாலா மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் உண்ணும் உணவு முறையே. இந்த நீரிழவு(சர்க்கரை நோய்) பிரச்சனை வந்தால், பின் எந்த ஒரு உணவையும் நிம்மதியாக சாப்பிட முடியாது. ஏனெனில் உண்ணும் உணவுகள் சிலவற்றில், சர்க்கரையின் அளவு அதிகம் நிறைந்திருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே சாப்பிடக் கூடாது என்பதில்லை. சொல்லப்போனால் பழங்கள் கூடத் தான் இனிப்பாக இருக்கும். நிறைய மருத்துவர்கள் தினமும் குறைந்தது நான்கு பழங்களையாவது சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதற்காக நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன? 


நிச்சயம் சாப்பிடலாம். ஏனெனில் பழங்கள் கூட இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும், தினமும் பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். முக்கியமாக அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர வேண்டும். மேலும் சில பழங்களை சாப்பிட்டால், இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். எனவே இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் பற்றி இங்கு காண்போமா !


நெல்லிக்காய் :


நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லிக்காய் மிகவும் சிறந்த, ஆரோக்கியத்தை தரும் பழங்களுள் ஒன்று.


ஆரஞ்சு :


ஆரஞ்சு பழத்தை தினமும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவானது குறையும். இதிலும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.


கிவி :


கிவி பழங்களை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும் என்று ஆய்வுகள் பலவற்றில் கண்டறியப்பட்டுள்ளன.


நாவல் பழம் :


நாவல் பழத்தின் நிறத்தை பார்க்கும் போதே நாக்கு ஊரும். அத்தகைய நாவல் பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பழம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், நீரிழிவு நோய் விரைவில் கட்டுப்படுத்த முடியும்.


கொய்யா பழம் :


நீரிழிவு மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கொய்யா பழம் நல்ல தீர்வைத் தரும். அதிலும் கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.


திராட்சை :


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை ஒரு சிறப்பான பழம். எப்படியெனில் இந்த பழத்தை சாப்பிட்டால், இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.


பப்பாளி :


பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பழம்.


மாதுளை :


மாதுளையில் உள்ள சின்ன சின்ன சுவைமிக்க கனிகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிசமமாக்கும்.


பெர்ரி :


பெர்ரிப் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் இந்த வகைப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆகவே இந்த பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது நல்லது.


ஆப்பிள் :


ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை சாப்பிடும் போது கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிலும் இந்த பழத்தில அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.


அன்னாசி:


பழம் அன்னாசியில் ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருப்பதால், சாதாரணமாகவே உடலுக்கு சிறந்த பழம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.


பேரிக்காய் :


இந்த சுவையான பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லாம். அந்த பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

by Swathi   on 06 Aug 2013  5 Comments
Tags: Neerilivu Noi   Diabetics   நீரிழிவு நோய்   பழங்கள்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
கருத்துகள்
09-May-2014 01:04:10 நா. vijisuresh said : Report Abuse
எங்க அப்பாக்கு மிகவும் உபயோகமாக இருகின்றது. மிகவும் நன்றி. இது போல் இன்னும் நிறைய குறிப்புகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பாடு குறிப்புகள் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
 
28-Mar-2014 00:28:02 bhaskaran said : Report Abuse
very good news to diabetics and health thinkers
 
28-Mar-2014 00:27:44 bhaskaran said : Report Abuse
very good news to diabetics and health thinkers
 
28-Feb-2014 11:29:43 s.k. mukundan said : Report Abuse
Very good news to diabetics
 
03-Dec-2013 06:17:10 மஹா rm said : Report Abuse
வித் grate
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.