LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு

 

இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது: தேர்தல் ஆணையம்
பனாஜி, மே 4: தேர்தல் ஆணையத்துக்கும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.
மே 8-ம் தேதி விரிவுபடுத்த உள்ள அமைச்சரவையில் அலினா சல்தானாவை சேர்க்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவா மாநிலத்தில் ஜூன் 2-ம் தேதி கோர்டாலிம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக அலினா சல்தானா நிறுத்தப்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், அது சரியாக இருக்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் அதிகாரி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதோடு, அமைச்சராக அலினாவை சேர்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் சுற்றுலா அமைச்சர் மதன்ஹி சல்தானாவின் மனைவிதான் அலினா சல்தானா. இவரது கணவர் இறந்ததால் கோர்டாலிம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அமைச்சரவையில் சேர்க்கப்படும் உறுப்பினர் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டால், அத்தொகுதி தேர்தல் முறையாக நடைபெறாது என்று தான் கருதுவதாக தேர்தல் அதிகாரி எஸ். குமாரசுவாமி தலைமைச் செயலர் சஞ்சய் ஸ்ரீவாத்ஸவாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னையை அரசிடம் தெரிவித்து இடைத் தேர்தல் முடியும் வரை அமைச்சரவையில் சேர்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஏரிஸ் ரோட்ரிக்ஸ், தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அலினாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் மனோகர் பாரிக்கர், தனது அமைச்சரவையில் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வதற்கு அரசியல் சாசனம் தனக்கு அதிகாரம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் நபர் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அரசியல் சாசனம் முக்கியமா அல்லது தேர்தல் நடத்தை விதிகள் முக்கியமா என்பதுதான் இப்போதுள்ள பிரச்னை. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு சட்ட பூர்வ ஆவணம் கிடையாது என்று குறிப்பிட்டார்.
சல்தானாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதால் வாக்காளர்களை அவர் அதிகம் கவர்வார் என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அவர்கள் வாக்காளர்களைக் கவர முயற்சிப்பது இயல்புதானே என்று கேள்வியெழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின்படி அமைச்சராக இருப்பவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதுதான் முக்கியம் என்றார் மனோகர் பாரிக்கார்.

இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது: தேர்தல் ஆணையம்

 

      தேர்தல் ஆணையத்துக்கும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.மே 8-ம் தேதி விரிவுபடுத்த உள்ள அமைச்சரவையில் அலினா சல்தானாவை சேர்க்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 

     கோவா மாநிலத்தில் ஜூன் 2-ம் தேதி கோர்டாலிம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக அலினா சல்தானா நிறுத்தப்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், அது சரியாக இருக்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் அதிகாரி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதோடு, அமைச்சராக அலினாவை சேர்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.முன்னாள் சுற்றுலா அமைச்சர் மதன்ஹி சல்தானாவின் மனைவிதான் அலினா சல்தானா.

 

     இவரது கணவர் இறந்ததால் கோர்டாலிம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.அமைச்சரவையில் சேர்க்கப்படும் உறுப்பினர் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டால், அத்தொகுதி தேர்தல் முறையாக நடைபெறாது என்று தான் கருதுவதாக தேர்தல் அதிகாரி எஸ். குமாரசுவாமி தலைமைச் செயலர் சஞ்சய் ஸ்ரீவாத்ஸவாவிடம் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்னையை அரசிடம் தெரிவித்து இடைத் தேர்தல் முடியும் வரை அமைச்சரவையில் சேர்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஏரிஸ் ரோட்ரிக்ஸ், தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அலினாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் மனோகர் பாரிக்கர், தனது அமைச்சரவையில் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வதற்கு அரசியல் சாசனம் தனக்கு அதிகாரம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் நபர் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

 

     அரசியல் சாசனம் முக்கியமா அல்லது தேர்தல் நடத்தை விதிகள் முக்கியமா என்பதுதான் இப்போதுள்ள பிரச்னை. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு சட்ட பூர்வ ஆவணம் கிடையாது என்று குறிப்பிட்டார்.சல்தானாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதால் வாக்காளர்களை அவர் அதிகம் கவர்வார் என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அவர்கள் வாக்காளர்களைக் கவர முயற்சிப்பது இயல்புதானே என்று கேள்வியெழுப்பினார்.தேர்தல் ஆணையத்தின்படி அமைச்சராக இருப்பவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதுதான் முக்கியம் என்றார் மனோகர் பாரிக்கார்.

by Partha   on 09 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.