LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !!

உலகில் இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது என உலகின் மிகபெரிய செல்வந்தரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

 

ஆண்டுதோறும் தங்களது கேட்ஸ் பவுண்டேஷன் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தான தர்மங்கள் குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கி கடிதம் வெளியிடுவது கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டாவின் வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கடிதத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, 

 

உலகில் வளரும் நாடுகள் முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் புதுமையான கண்டுபிடிப்புகள் காரணமாக உலகில்  ஏழை நாடுகளே இல்லாமல் போகும் நிலை இன்னும் 20 ஆண்டுகளில் வரும் என்றார். அதிக விளைச்சல் தரும் விதைகள், சக்தி வாய்ந்த நோய் தடுப்பு மருந்துகள், தொழில்நுட்பங்கள், முதலீடுகள் முதலியன ஏழை நாடுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், ஏழை நாடுகளில் வாழும் தனிநபர்களின் வருமானம் வரும் 2035ஆம் ஆண்டில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தற்போது இருக்கும் தனிநபர் வருமானத்தை மிஞ்சக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

 

மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் ஒவ்வொரு வருடமும் ஒரு ஏழை நாட்டிற்கு பெருமளவு நிதியுதவி செய்து அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கும் பணியை செய்து வருவதாகவும், அதன்பணி தொடர்ந்து நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

by Swathi   on 22 Jan 2014  2 Comments
Tags: பில்கேட்ஸ்   கேட்ஸ்   கேட்ஸ் தம்பதி   ஏழ்மை நாடுகள்   2035   Bill Gates   poor countries  
 தொடர்புடையவை-Related Articles
இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !! இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !!
அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்-டின் ஒரு நாள் வருவாய் ரூ 230 கோடி! அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்-டின் ஒரு நாள் வருவாய் ரூ 230 கோடி!
கருத்துகள்
23-Sep-2015 09:03:30 சக்தி said : Report Abuse
தேங்க்ஸ் சார்
 
02-May-2015 00:52:32 சி.JAWAHARLAL said : Report Abuse
வெரி Nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.