அமெரிக்கா பணக்காரர் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸ், தொடர்ந்து 20 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருவதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.இதன்படி பில்கேட்ஸ் 4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி மதிப்புடைய சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் உரிமையாளரான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான ஆரக்கில் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது.
|