ரஜினியின் கோச்சடையன், அஜீத்தின் வீரம், விஜயின் ஜில்லா ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால், பிரியாணி படத்தை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தி கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி, ராம்கி ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பிரியாணி. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட நினைத்த படக்குழு, ரஜினி, அஜித், விஜய் படங்களின் ரிலீஸ் தேதியும் பொங்கலை ஒட்டி இருப்பதால், தியேட்டர் கிடைக்காத பிரச்சனையாலும், பிரியாணியை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியிட அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்தியின் சமீபத்திய படங்கள் ஹிட் ஆகாமல் இருப்பதால், அவர் இந்த பிரியாணியை மிகவும் நம்பியுள்ளார்.
|